முடி உதிர்தலை தடுத்து, நீளமாக வளரச் செய்யும் 7 குறிப்புகள் !

கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு.சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும். அரிப்பு நீங்கவும்,பொடுகை போக்கவும் இயற்கையான வழிமுறைகளை தெரிவிக்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

Subscribe to Boldsky

கூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு. இன்னும் தீவிரமாக சிலருக்கு தலையில் அரிப்பையும், செதில் செதிலாக உதிரும். குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒருவித நுண்ணுயிர்களே.

மேலும் மன அழுத்தம், ஊட்டச் சத்துக் குறைபாடும் பொடுகு ஏற்பட காரணமாகும். எனவே ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் பொடுகை தவிர்க்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

7 effective remedies to get rid of dandruff

மன அழுத்தம் இன்றி அமைதியை கடைபிடித்தால் பொடுகு மற்றும் முடி
உதிர்தல் ஏற்படாமல்  தவிர்க்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். பொடுகை கட்டுப்படுத்தும் இயற்கை வழிகளை காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

வசம்பு :

வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறையும்.

மிளகு மற்றும் சீரகத் தூள் :

சீரகம் மற்றும் மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் பொடுகுபிரச்னை நீங்கும்.

 

பாசிப்பயறு, தயிர் :

பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் ஊறவைத்து பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.

 

துளசி கருவேப்பிலை :

துளசி,கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

வினிகர் :

தலைக்கு குளிக்கும்போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு வினிகர் சேர்த்து குளிக்கலாம்.

தேங்காய் பால் :

தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தல் பள பளக்கும்.

சாதம் வடித்த நீர் :

முதல் நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்துவைத்து, மறுநாள் அதை எடுத்து வைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 effective remedies to get rid of dandruff

7 effective remedies to get rid of dandruff
Please Wait while comments are loading...
Subscribe Newsletter