For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களுக்கு முடி உதிர்வதைத் தடுக்க சில சிம்பிளான வழிகள்!!!

By Maha
|

இன்றைய ஆண்களுக்கு 25 வயதிலேயே வழுக்கை ஏற்படும் அளவில் முடி அதிக அளவில் கொட்டுகிறது. இப்படி முடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் தொப்பி அல்லது ஹெல்மெட் அணிவது, ஆரோக்கியமற்ற டயட், மன அழுத்தம், மாசுபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, மருந்துகள், மரபணுக்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால் இக்காரணங்களால் தலை முடி உதிர்வதைத் தடுக்க முடியாதா என்று கேட்டால், நிச்சயம் முடியும் என்று தான் சொல்ல வேண்டும். இவ்வுலகில் முடியாதது என்று எதுவும் இல்லை. அதிலும் மூலிகைகள் அதிகம் நிறைந்த இந்தியாவில் தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல வழிகள் உள்ளன. அதில் சக்தி வாய்ந்த சில வழிகளை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி வந்தால், நிச்சயம் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புரோட்டீன் உணவுகள்

புரோட்டீன் உணவுகள்

புரோட்டீன் அதிகம் நிறைந்த இறைச்சிகள், மீன், சோயா அல்லது இதர புரோட்டீன் உணவுகளை அதிகம் உட்கொண்டு வர வேண்டும். இதனால் புரோட்டீனால் ஆன முடியின் ஆரோக்கியம் அதிகரித்து, முடி உதிர்வது குறையும்.

நறுமணமிக்க எண்ணெய்கள்

நறுமணமிக்க எண்ணெய்கள்

உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்தால், நறுமணமிக்க அத்தியாவசிய எண்ணெய்களைக் கொண்டு தினமும் 2 நிமிடம் மசாஜ் செய்து வாருங்கள். இதனால் மயிர்கால்கள் ஆரோக்கியத்துடன் இருக்கும். அதற்கு லாவெண்டர் எண்ணெயை நல்லெண்ணெயுடனோ அல்லது பாதாம் எண்ணெயுடனோ சேர்த்து கலந்து பயன்படுத்தலாம்.

தலையை ஈரப்பசையின்றி வைத்துக் கொள்ளவும்

தலையை ஈரப்பசையின்றி வைத்துக் கொள்ளவும்

எண்ணெய் பசையுடைய தலையைக் கொண்ட ஆண்களுக்கு, கோடையில் அதிகப்படியான வியர்வை வெளியேற்றத்தால் பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படக்கூடும் மற்றும் தலைமுடி உதிரவும் செய்யும். எனவே அத்தகையவர்கள் கற்றாழை மற்றும் வேப்பிலை சேர்த்து தயாரிக்கப்பட்ட ஷாம்பு கொண்டு தலை முடியை அலச வேண்டும். இதனால் பொடுகு நீங்கி, முடி உதிர்வது தடுக்கப்படும்.

இஞ்சி சாறு, வெங்காயச் சாறு அல்லது பூண்டு சாறு

இஞ்சி சாறு, வெங்காயச் சாறு அல்லது பூண்டு சாறு

உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்தால், இஞ்சி, வெங்காயம் அல்லது பூண்டு ஆகியவற்றில் ஒன்றின் சாற்றினை இரவில் படுக்கும் போது ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, மறுநாள் காலையில் அலச வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

ஒரு கப் சுடுநீரில் க்ரீன் டீ பையை ஊற வைத்து, குளிர்ந்ததும் அந்த நீரைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து பின் அலச வேண்டும். இப்படி ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை தொடர்ந்து செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்திருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

வேப்பிலை

வேப்பிலை

வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதன் மூலம், ஸ்கால்ப்பில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்குவதோடு, ஸ்கால்ப்பில் ஏற்பட்ட நோய்த்தொற்றுக்களும் நீங்கும்.

நெல்லிக்காய் பவுடர்

நெல்லிக்காய் பவுடர்

நெல்லிக்காய் பொடியில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதைக் காணலாம்.

வெந்தயம்

வெந்தயம்

ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் சிறிது வெந்தயத்தைப் போட்டு வறுத்து, பின் அந்த எண்ணெயை தினமும் தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவ வேண்டும். இப்படி செய்து வந்தால், பொடுகுத் தொல்லை நீங்கி, முடி உதிர்வதும் குறையும்.

தேங்காய் பால்

தேங்காய் பால்

தேங்காய் பாலில் தலைமுடியின் வளர்ச்சிக்கு வேண்டிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே வாரம் ஒருமுறை தேங்காய் பாலை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து ஊற வைத்து அலச, முடி உதிர்வது குறைந்து, அதன் வளர்ச்சி அதிகரிக்கும்.

முட்டை

முட்டை

ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அதனை ஸ்கால்ப்பில் படும் படி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். மஞ்சள் கருவைப் பயன்படுத்துவதால், தலையில் முட்டை நாற்றம் இருக்கும் என்பதால், இந்த முறையை வார இறுதியில் முயற்சிப்பது நல்லது.

வினிகர்

வினிகர்

வினிகரில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் பொடுகை ஒழிக்கும், பொட்டாசியம் மற்றும் இதர நொதிகள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே 1/4 பக்கெட் நீரில் 1/2 கப் வினிகரை ஊற்றி அந்த நீரில் தலையை 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதால் பொடுகு நீங்கி, ஸ்கால்ப்பின் pH அளவு சீராக பராமரிக்கப்பட்டு, தலைமுடியும் உதிராமல் ஆரோக்கியமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple But Powerful Remedies To Stop Hair Loss In Men

Here are some simple but powerful remedies to stop hair loss in men. Read on to know more.
Story first published: Monday, November 30, 2015, 13:15 [IST]
Desktop Bottom Promotion