For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்த வேண்டும்?

By Ashok CR
|

பல இந்திய உணவுகளில் கறிவேப்பிலை பயன்படுத்தப்படுவதை நாம் நன்கு அறிவோம். பெரும்பாலும் அவை குழம்புகளில் பயன்படுத்தப்படுகிறது. அவற்றை "இனிப்பான வேப்பிலை" என்றும் கூட அழைக்கலாம். இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் மூலிகை செடிகளில் இதுவும் ஒன்றாகும். நம் உணவுகளில் வாசனையை ஏற்படுத்தவும். சுவையை கூட்டவும் கறிவேப்பில்லை உதவுகிறது. அதே நேரம், அவற்றில் பல விதமான உடல்நல பயன்களும் அடங்கியுள்ளது.

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெங்காய மாஸ்க் போடுங்க...

கறிவேப்பிலை வயிற்றுப்போக்கை தடுக்கும். அவை செரிமான அமைப்பிற்கு நல்லது. கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் கூட அது உதவுகிறது. இப்படி இதன் பயன்கள் ஏராளம். இது போக, நம் முடியின் வளர்ச்சிக்கும் கூட கறிவேப்பிலை வெகுவாக உதவுகிறது. ஆரோக்கியமான மற்றும் பிரகாசமான முடியை பெறுவதற்கு இது மிகவும் உதவுகிறது.

தலைமுடி வளர்ச்சிக்கு மாயங்களை செய்யும் சக்தி வாய்ந்த சில வீட்டு சிகிச்சைகள்!!!

ஆம், இதனை பற்றி நீங்கள் கூட கேள்விப்பட்டிருக்கலாம். இந்த இந்திய மூலிகைச் செடி உங்கள் முடியை பளபளப்பாக வைத்திருந்து, முடியின் வளர்ச்சிக்கும் துணை நிற்கும். கறிவேப்பிலைக்கும் முடி வளர்ச்சிக்கும் உண்டான தொடர்பைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதிப்படைந்துள்ள வேர்களை சீர் செய்யும்

பாதிப்படைந்துள்ள வேர்களை சீர் செய்யும்

ரசாயன சிகிச்சைகள், வெப்பமாக்கும் கருவிகள், மாசு போன்ற பல காரணங்களால் உங்கள் முடியின் வேர்கள் பாதிப்படையும். இதனால் முடியின் வளர்ச்சி நின்று கூட போகலாம். பாதிப்படைந்துள்ள வேர்களை சீர் செய்யும் திறனை கொண்டுள்ளது கறிவேப்பிலை. அதற்கு காரணம், அதிலுள்ள அதிமுக்கிய ஊட்டச்சத்துகள். இவை முடிக்கு நல்லதை அளிக்கும். கறிவேப்பிலை பேஸ்ட்டை நேரடியாக தலைச்சருமத்தில் தடவிக் கொண்டால், வேர்களை அது சீர் செய்யும். மேலும் மயிர்த்தண்டுகளின் வலுவை மீண்டும் பெறச் செய்யும். அதன் சுவையினால் உங்களுக்கு பிரச்சனை இல்லையென்றால் அதனை அப்படியே உண்ணவும் செய்யலாம். பாதிக்கப்பட்ட முடிக்கு முதலுதவியாக செயல்படும் கறிவேப்பிலை. முடியின் வேர்கள் வலுவடைந்து விட்டால், முடியின் வளர்ச்சியும் வேகம் பிடிக்கும்.

முடி கொட்டுதல் குறையும்

முடி கொட்டுதல் குறையும்

கறிவேப்பிலையில் புரதமும் பீட்டா-கரோடினும் வளமையாக உள்ளது. இது முடி உதிர்வை குறைத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கும். புரதச்சத்து குறைபாட்டினால் கூட முடி உதிர்வு ஏற்படலாம். அதனால், கறிவேப்பிலையை சீரான முறையில் எடுத்துக் கொண்டால், முடி வளர்ச்சியும் அதிமாகும். கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்சிடன்ட்களும் கூட வளமையாக உள்ளது. அதனால் அது தலைச்சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கும். இறந்து போன தலைச்சரும மயிர்த்தண்டை நீக்கவும், பொடுகை தடுக்கவும் இது உதவும்.

முடி டானிக் தயார் செய்யுங்கள்

முடி டானிக் தயார் செய்யுங்கள்

நற்பதமான கறிவேப்பிலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து ஒரு கிண்ணத்தில் போடவும். தேங்காய் எண்ணெய் முடிக்கு நல்லது என்பது கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்திருக்கும். அதனுடன் கறிவேப்பிலை சேரும் போது, முடி வளர்ச்சி அதிகரிக்கும். கருப்பு நிறம் அதிகம் காணும் வரை, இந்த இரண்டையும் கொதிக்க விடவும். அதன் பின், அது குளிர்ந்த பின்னர், அதனை எடுத்து உங்கள் தலைச்சருமத்தில் நேரடியாக தடவிக் கொள்ளவும். ஒரு மணி நேரத்திற்கு அதை அப்படியே விட்டு விடுங்கள். பின் மிதமான ஷாம்புவைக் கொண்டு கழுவுங்கள். இந்த டானிக்கை வாரம் இருமுறை பயன்படுத்தினால், வெறும் 15 நாட்களிலேயே நீங்கள் மாற்றத்தை காணலாம். இந்த முடி டானிக் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாது, முடி நரைப்பதையும் தடுக்கும். முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை எண்ணெய்யை பயன்படுத்தும் சிறந்த வழி இதுவே.

முடி மாஸ்க் ஒன்றை செய்திடுங்கள்

முடி மாஸ்க் ஒன்றை செய்திடுங்கள்

கொஞ்சம் கறிவேப்பிலையை எடுத்துக் கொண்டு பேஸ்ட் ஒன்றை தயார் செய்யுங்கள். இந்த கறிவேப்பிலை பேஸ்ட்டை தயிருடன் கலந்து, முடியின் மீது மசாஜ் செய்யவும். இந்த கலவையை 20-25 நிமிடங்கள் அவரை அப்படியே விட்டு விடுங்கள். பின் மிதமான ஷாம்புவை கொண்டு கழுவுங்கள். இந்த மாஸ்க்கை ஒவ்வொரு வாரமும் தவறாமல் பயன்படுத்தி வந்தால், முடி வளர்ச்சியில் உடனடி பலனை காணலாம். முடி வளர்ச்சி போக, உங்கள் முடியை பளபளப்பாகவும் மென்மையாகவும் இது மாற்றும்.

கறிவேப்பிலையை கொண்டு தேநீர்

கறிவேப்பிலையை கொண்டு தேநீர்

கேட்பதற்கு விந்தையாக இருக்கலாம். ஆனால் கறிவேப்பிலையை கொண்டு உங்கள் முடிக்காக தேநீர் தயாரிக்கலாம். கறிவேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். அந்த சாற்றில் எலுமிச்சையை பிழிந்து, அதனுடன் கொஞ்சம் சர்க்கரையையும் கலந்து கொள்ளுங்கள். இந்த தேநீரை ஒரு வார காலத்திற்கு, தினமும் குடித்து, அதனால் கிடைக்கும் பலனை பாருங்கள். உங்கள் முடி வளர்ச்சி கண்டிப்பாக அதிகரிக்கும். அதோடு நில்லாமல் முடியை பளபளப்பாகவும் மின்னவும் வைக்கும். கூடுதலாக முடி நரைப்பதையும் தடுக்கும். கறிவேப்பிலையை எடுத்துக் கொள்வதால் செரிமான அமைப்பிற்கும் நல்லதாகும்; முடி சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை தீர்க்கவும் செய்யவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Use Curry Leaves For Hair Growth?

Curry leaves can make your hair lustrous and shiny, and also aid hair growth. Read on to know the connection between curry leaves and hair growth.
Desktop Bottom Promotion