For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு பேன் தொல்லை இருக்கா? அதைப் போக்க இதோ சில வழிகள்!

By Maha
|

தலையில் ஏற்படும் பிரச்சனையில் பொடுகைத் தொடர்ந்து வருவது பேன் ஆகும். பேன் தலையில் வந்துவிட்டால், அதனைப் போக்குவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதுமட்டுமின்றி, பேன் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் தொற்றிக் கொள்ளும். மேலும் பேன் ஒருவரின் அழகையே கெடுத்துவிடும். எப்போதும் தலையை சொரிந்து கொண்டே இருக்கக்கூடும்.

ஆகவே இந்த பேன் தொல்லையால் அவஸ்தைப்படுகிறீர்களா? அப்படியெனில் தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ள ஒருசில டிப்ஸ்களை பின்பற்றுங்கள். இவற்றால் விரைவில் பேனிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். மேலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் வீட்டில் இருக்கும் சமையலறைப் பொருட்களைக் கொண்டே சரிசெய்யுமாறு இருக்கும். சரி, இப்போது பேன் தொல்லையில் இருந்து விடுதலைப் பெற செய்ய வேண்டியவைகளைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேப்பிலை

வேப்பிலை

வேப்பிலையை நீரில் போட்டு நன்கு காய்ச்சி, அந்த நீரைக் கொண்டு தலைமுடியை அலசி வந்தால், தலையில் உள்ள பேன், பொடுகு போன்றவை அகலும்.

மிளகு மற்றும் சீரகம்

மிளகு மற்றும் சீரகம்

1 டீஸ்பூன் மிளகு மற்றும் 1/2 டீஸ்பூன் சீரகத்தை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி, அந்த எண்ணெயை வாரம் மூன்று முறை தலைக்கு தடவி மசாஜ் செய்து 1/2 மணிநேரம் ஊற வைத்து, சீகைக்காய் போட்டு அலச வேண்டும். இதனாலும் பேன் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

தேங்காய் பால்

தேங்காய் பால்

தேங்காயை அரைத்து பால் எடுத்து, அதனைக் கொண்டு வாரம் இரண்டு முறை தலையை அலச வேண்டும். இதன் மூலமும் பேன் தொல்லை தீரும்.

பூண்டு

பூண்டு

10 பல் பூண்டை அரைத்து பேஸ்ட் செய்து, அதனுடன் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இதனால் பூண்டின் வாசனையிலேயே பேன் போய்விடும்.

எறும்பு பொடி

எறும்பு பொடி

எறும்பு பொடியை நீரில் கலந்து, அந்த நீரைக் கொண்டு தலையை மசாஜ் செய்து 1/2 மணிநேரம் ஊற வைத்து பின் சீகைக்காய் போட்டு நன்கு தேய்த்து குளிக்க வேண்டும். முக்கியமாக இந்த வழியை பின்பற்றினால், பேன் இறந்து உதிர்வதை நன்கு காணலாம்.

தேக்குகொட்டை

தேக்குகொட்டை

தேக்கு கொட்டை மற்றும் மிளகை தட்டி தேங்காய் எண்ணெயில் போட்டு, கொதிக்க விட்டு வடிகட்டி, அந்த எண்ணெயை கொண்டு வாரம் மூன்று முறை மசாஜ் செய்து குளிக்க வேண்டும். இதன் மூலமும் பேன் நீங்கும்.

சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் படும் படி மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து அலச வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies To Get Rid Of Head Lice

Here are some home remedies to get rid of lice. Want to know more natural remedies for lice? Take a look... 
Story first published: Saturday, February 21, 2015, 13:56 [IST]
Desktop Bottom Promotion