For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுருட்டை முடியை பராமரிப்பது எப்படி?

By Boopathi Lakshmanan
|

சுருட்டை முடி உடையவர்கள் சுந்தர அழகு மிக்க பாக்கியசாலிகள். அதை சிலர் இயற்கையாக பிறப்பிலேயே பெறுகின்றனர். சிலர் இந்த சுருட்டை முடியை பெருவதற்கு பியூட்டி பார்லருக்கு இதை போன்று தற்காலிகமாகவோ அல்லது நிரந்திரமாகவோ செய்து கொள்ளும் வசதி வந்துவிட்டது. இந்த முடியைக் கொண்டு நாம் எந்த வகை அலங்காரத்தையும் செய்ய முடியும். ஆனால் இத்தகைய தலை முடியை வாருவது சிறிது கடினம் தான். அதுமட்டுமல்லாமல் அதை சுத்தமாகவும் சிக்கல் இல்லாமலும் பராமரிப்பது மேலும் கடினமான விஷயமாகும்.

இத்தகைய முடியை உடைய நீங்கள் இதை எப்படி முறையாக பராமரிக்க முடியும் என்று தெரிந்து கொள்ள ஆசைபடுவீர்கள். சுருட்டை முடி நேராக இருக்கும் முடியை காட்டிலும் பராமரிப்பில் அதிகம் கடினமாக இருக்கும். ஆகையால் இதை எப்படி பாதுகாப்பது என்று குறிப்புகளை தற்போது பார்ப்போம். இந்த குறிப்புகள் தங்கள் முடியை அழகாகவும், அடர்த்தி குறையாமலும் இருப்பதற்கு உதவும்.

சுருட்டை முடியை பராமரிக்க உதவும் பொருட்கள் கடைகளில் அதிளவில் கிடைக்கின்றன. இதை வாங்கி பயன்படுத்தலாம். ஆனால் வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டு முடியை மேம்படுத்துவது மிகவும் பாதுகாப்பானதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எண்ணெய்

எண்ணெய்

பொதுவாக சுருட்டை முடி நேர் முடியை விட வறண்ட நிலையில் தான் காணப்படும். இந்த வகை முடி தலையில் வைக்கும் எண்ணெய் கீழ் வரை சென்று ஈரப்பதமூட்டுவதை தடுக்கின்றது. இதனால் முடி உலர்ந்து உடைந்து விழக் கூடிய அளவிற்கு சென்று விடுகின்றது. இதற்கு தீர்வாக ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தினால் முடிக்கால்களுக்கு தேவையான ஈரப்பதம் அடி வரை செல்லும்.

முடியை ஈரப்பதமூட்டுதல்

முடியை ஈரப்பதமூட்டுதல்

எண்ணெய் தவிர முட்டை, பால், சீயக்காய், தேன், தயிர், எலுமிச்சை ஆகியவை முடிக்கு சிறந்த ஊட்டமூட்டும் பொருட்களாகும். இவை இயற்கையான மற்றும் எந்த வித வேதிப்பொருட்களும் இல்லாத முடி சத்துப்பொருட்களாக விளங்குகின்றது.

ஷாம்பு

ஷாம்பு

தலை முடிகளில் ஷாம்பு போடுவதை பெரும்பாலும் குறைத்துக் கொள்ள வேண்டும். இதை பயன்படுத்தும் போது முடியில் உள்ள சுருள்களில் இதன் வேதிப்பொருட்களும் மீதமுள்ள ஷாம்பு பொருட்களும் தங்கி விடுகின்றன. இதனால் முடி கலை இழந்து வறண்ட நிலைக்கு சென்று விடும். எனவே, ஷாம்பு தவிர்த்து இயற்கை பொருட்களை கொண்டு முடியை சுத்தம் செய்தால் சிறப்பானதாகும்.

கண்டிஷனர்

கண்டிஷனர்

படர்ந்து விரியும் கூந்தலை கட்டுப்படுத்துவது கடினம் தான். ஆகையால் கண்டிஷனரால் இதை சிறிதளவு கட்டுப்படுத்த முடியும். குளித்தப் பின் இதை போட்டால் சிறந்ததாகும். கடைகளில் கிடைக்கும் கண்டிஷனர் அல்லது வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இதை செய்யலாம். தேன், முட்டை, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் டீ ஆகிய பொருட்களை கொண்டு இதனை செய்ய முடியும்.

சுருள் முடியை சீவுதல்

சுருள் முடியை சீவுதல்

சுருட்டை முடியை கொண்ட நீங்கள் பெரிய பற்கள் உடைய சீப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும். இவை முடியின் சிக்கல்களை எளிதாக அகற்ற உதவும். முடி உடைவதையும் தடுக்கும். இதனால் முடி கூடிய வரை பாதுகாப்பாக இருக்கும்.

இதை படித்தப் பின்பு நீங்களும் இப்போது சுருட்டை முடியை எவ்வாறு பராமரிப்பது என்பதை அறிந்திருப்பீர்கள். மற்றவர் உங்களிடம் இதைப்பற்றி கேட்டாலும் அவர்களுக்கும் இந்த வழிமுறைகளை சொல்லிக் கொடுங்கள். அது மட்டுமல்லாமல் இதை எல்லாம் முயற்சி செய்து உங்கள் அழகையும் மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Taming Curly Hair In 5 minutes

One hairstyle that never goes out of fashion is curly hair. Some get it as a gift from god while others make efforts towards getting those curly locks.
Story first published: Saturday, April 26, 2014, 17:22 [IST]
Desktop Bottom Promotion