For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொடுகுத் தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் சில இயற்கை வைத்தியங்கள்!!!

By Maha
|

ஒருவருக்கு கூந்தல் உதிர்வதற்கு போதிய பராமரிப்பு மற்றும் உடலில் ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பது ஒரு காரணமாக இருந்தாலும், பொடுகும் முதன்மையான காரணமாக உள்ளது. இத்தகைய பொடுகு ஸ்கால்ப்பில் வறட்சி அதிகம் ஏற்படுவதால் வருகிறது. நிச்சயம் இந்த பிரச்சனையால் அனைவருமே பாதிக்கப்பட்டிருப்பதுடன், இதனை சரிசெய்ய பல்வேறு கெமிக்கல் கலந்த பொருட்கள் மற்றம் ஷாம்புக்களை பயன்படுத்தியிருப்போம்.

ஆண்களே! பொடுகு தொல்லை தாங்க முடியலையா? இத ட்ரை பண்ணுங்க...

இருப்பினும் அவற்றால் பொடுகு அதிகரித்தது தான் மிச்சமாக இருந்திருக்கும். ஏனெனில் எப்போதுமே கெமிக்கல் உள்ள பொருட்கள் அதிகம் வறட்சியை ஏற்படுத்தும். ஆனால் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தினாலே பொடுகைப் போக்கலாம். இங்கு பொடுகைப் போக்க உதவும் சில இயற்கையான பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள்.

இயற்கை முறையில் பொடுகை போக்குவதற்கான சிறந்த 20 சிகிச்சைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிடிட்டி, ஸ்கால்ப்பின் pH தன்மையை மாற்றி, தலையில் பொடுகு ஏற்படுவதைத் தடுக்கும். அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சரிசமமாக கலந்து, குளித்து முடித்தப் பின்னர் தலையில் ஊற்றி அலச வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

ஷாம்பு போட்டு குளிக்கும் போது, பேக்கிங் சோடாவை ஷாம்புவில் சேர்த்து கலந்து, அதனைப் பயன்படுத்தினால், பொடுகு பளிச்சென்று போய்விடும். இல்லாவிட்டால், தலையில் நீரில் நனைத்து, பின் பேக்கிங் சோடா பயன்படுத்தி ஸ்கால்ப்பை மசாஜ் செய்து அலசினால், ஸ்கால்ப்பில் உள்ள பூஞ்சைகள் குறைந்துவிடும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

இரவில் படுக்கும் போது, தேங்காய் எண்ணெய் கொண்டு, தலையை மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் மைல்டு ஷாம்பு போட்டு குளித்தால் பொடுகு குறைய ஆரம்பிக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை

2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை, நீரில் கலந்து, ஷாம்பு போட்டு குளித்த பின்னர், அந்நீரினால் தலையை அலசினால், ஸ்கால்ப்பின் pH சீரான அளவில் பராமரிக்கப்பட்டு, பொடுகு வராமல் இருக்கும்.

பூண்டு

பூண்டு

பூண்டுகளில் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் அதிகம் இருப்பதால், அதன் சாற்றினைக் கொண்டு ஸ்காப்பை மசாஜ் செய்து பின் நீரில் அலசினால், பொடுகு வருவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

natural remedies for dandruff

Dandruff is an increasing problem today and I'm sure we all are tired of using chemicals and shampoos on our hair that say they will erase the dandruff only to give temporary relief. Listed below are natural ways to deal with those itchy scales on your head.
Desktop Bottom Promotion