For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடையில் தலையை கூலா வைத்துக் கொள்ள சில டிப்ஸ்...

By Maha
|

ஒவ்வொரு பருவ காலத்திலும் ஒவ்வொரு வித்தியாசமான சவால்களை சந்திக்கக்கூடும். அந்த வகையில் இப்போது கோடைக்காலம் ஆரம்பமாகிவிட்டது. சூரியக்கதிர்களின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பொதுவாக குளிர்காலத்தில் வறட்சியினால் கூந்தல் உதிர்தல் ஏற்படும். ஆனால் கோடையில் கூந்தலுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படப் போவதில்லை. இருப்பினும் கூந்தலை சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.

மேலும் கோடையில் மயிர்கால்கள் நன்கு வளர்ச்சி அடையும் என்பதால், தலையை சரியாக பராமரித்து வந்தால், கூந்தல் வளர்ச்சியை அதகரித்து, அழகான நீளமான கூந்தலைப் பெறலாம். அதற்கு ஒருசில செயல்களை தினமும் பின்பற்றினால் போதும். குறிப்பாக ஸ்கால்ப்பை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முயல வேண்டும்.

தலைமுடி பிரச்சனைகளை சரிசெய்யும் முட்டை ஹேர் பேக்குகள்!!!

இங்கு கோடையில் கூந்தலைப் பராமரிக்க சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அதனை தினமும் தவறாமல் பின்பற்றி வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தினமும் தலைக்கு குளிக்கவும்

தினமும் தலைக்கு குளிக்கவும்

பெண்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் தலைக்கு குளிப்பார்கள். ஏனெனில் தினமும் குளித்தால் கூந்தல் பாழாகிவிடும் என்பதால். ஆனால் கோடையில் தினமும் தலைக்கு குளிப்பது தான் நல்லது. இதனால் ஸ்கால்ப் பாதிப்படைவதைத் தடுக்கலாம்.

குளிர்ந்த நீரில் குளிக்கவும்

குளிர்ந்த நீரில் குளிக்கவும்

கோடையில் எப்போதும் குளிர்ச்சியான நீரில் குளிக்கவும். அதிலும் தலைக்கு குளிப்பதாக இருந்தால், சுடுநீரை சுத்தமாக பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், சுடுநீர் ஸ்கால்ப்பில் உள்ள துளைகளை விரிவடையச் செய்து, கூந்தல் உதிர்தலை ஏற்படுத்தும்.

எண்ணெய் வைப்பதை தவிர்க்க வேண்டாம்

எண்ணெய் வைப்பதை தவிர்க்க வேண்டாம்

பலர் கோடையில் தவைக்கு எண்ணெய் வைக்கமாட்டார்கள். ஏனெனில் எண்ணெய் வைத்தால் முகத்தில் எண்ணெய் வழியும் என்பதால். ஆனால் எண்ணெய் வைக்காமல் இருந்தால், சூரியக்கதிர்கள் கூந்தலில் பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே எண்ணெய் வைப்பதை தவிர்க்க வேண்டாம்.

மைல்டு ஷாம்பு பயன்படுத்தவும்

மைல்டு ஷாம்பு பயன்படுத்தவும்

ஸ்கால்ப்பில் வியர்வையானது அதிகம் இருந்தால், அழுக்குகளானது ஸ்கால்ப்பில் தங்கி, மயிர்கால்களை வலுவிழக்கச் செய்துவிடும். எனவே மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தினமும் குளிக்கவும்.

தலைக்கு பாதுகாப்பு அவசியம்

தலைக்கு பாதுகாப்பு அவசியம்

வெளியே வெயிலில் செல்லும் போது, சூரியக்கதிர்கள் நேரடியாக தலையில் படுமாறு செய்ய வேண்டாம். ஏனெனில் அவை கூந்தல் வறட்சி அல்லது நரைமுடியை ஏற்படுத்தும். எனவே வெளியே செல்லும் போது, ஸ்கார்ப் அல்லது தொப்பியை அணிந்து செல்லுங்கள்.

குளிர்ச்சியான எண்ணெய்

குளிர்ச்சியான எண்ணெய்

கோடையில் தலைக்கு நெல்லிக்காய், பிராமி, அஸ்வகந்தா போன்ற எண்ணெய்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இவை ஸ்கால்ப்பை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்வதோடு, மயிர்கால்களை வலிமையாகவும் வைத்துக் கொள்ளும்.

கூந்தலை ப்ரீயாக விடுங்கள்

கூந்தலை ப்ரீயாக விடுங்கள்

எப்போதும் கூந்தலை இறுக்கி கட்டியவாறே இருக்காமல், ப்ரீ ஹேருடன் இருங்கள். இதனால் ஸ்கால்ப்பிற்கு நல்ல கற்றோட்டம் கிடைத்து, கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.

தண்ணீர் அதிகம் குடிக்கவும்

தண்ணீர் அதிகம் குடிக்கவும்

கோடையில் உடலின் வெப்பத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இதனால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் வறட்சியின்றி இருக்கும்.

இயற்கையாக உலர விடுங்கள்

இயற்கையாக உலர விடுங்கள்

கோடையில் கூந்தலை உலர வைப்பதற்கு ஹேர் ட்ரையரே தேவைப்படாது. ஏனெனில் கொளுத்தும் வெயிலிலேயே கூந்தல் உலர்ந்துவிடும். எனவே ஹேர் ட்ரையர் பயன்படுத்தி கூந்தலை கெடுத்துவிடாதீர்கள்.

கோடைக்கால ஹேர் ஸ்டைல்

கோடைக்கால ஹேர் ஸ்டைல்

கோடையில் எப்போதுமே கூந்தலை எப்போதுமே விரித்துக் கொண்டு இருக்க முடியாது. ஆகவே அவ்வப்போது கொண்டை, மேலே தூக்கி பின்னுவது போன்றவற்றை பின்பற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Hair Care Tips For Summer

Natural hair care for summer can help you protect your hair from the heat. These hair care tips for summer are important for avoiding summer hair problems.
Desktop Bottom Promotion