For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூந்தல் பிரச்சனைகளை சரிசெய்யும் கற்றாழை!!!

By Maha
|

இயற்கை தந்த அற்புத மூலிகையான கற்றாழையானது தலை முதல் கால் வரை ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் குணம் கொண்டது. தற்போது பெரும்பாலானோர் கூந்தல் உதிர்தல், பொடுகு, கூந்தல் வறட்சி போன்ற பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். மேலும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல்வேறு ஷாம்புக்களை மாற்றி வருகின்றனர். இருப்பினும் அவற்றால் எந்த ஒரு பலனும் கிடைத்ததில்லை. மாறாக பிரச்சனைகள் தான் அதிகரித்துள்ளது.

ஆனால் இந்த கூந்தல் பிரச்சனைகளுக்கு கற்றாழையின் ஜெல் நல்ல தீர்வைக் கொடுக்கும். இங்கு கூந்தல் பிரச்சனைகளும், அதற்கு கற்றாழை ஜெல்லை எப்படி பயன்படுத்துவது என்றும் தெளிவாக கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூந்தல் வளர்ச்சிக்கு...

கூந்தல் வளர்ச்சிக்கு...

முடி உதிர்ந்து வழுக்கை அடையும் போது, அவ்விடத்தில் கற்றாழையின் ஜெல்லை தடவி மசாஜ் செய்து வந்தால், கற்றாழையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நொதிகளானது பாதிப்படைந்த மயிர்கால்களை புதுப்பித்து, முடியின் வளர்ச்சியை அவ்விடத்தில் தூண்டும். எனவே முடி அதிகம் உதிரும் போது, கற்றாழையின் ஜெல்லை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்வது, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

பொடுகுத் தொல்லைக்கு...

பொடுகுத் தொல்லைக்கு...

கற்றாழையில் உள்ள நொதிகளானது பொடுகுத் தொல்லைக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். அதற்கு கற்றாழை ஜெல்லில், சிறிது எலுமிச்சை சாற்றினை கலந்து ஸ்கால்ப்பில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கெமிக்கல் அதிகம் இல்லாத ஷாம்பு கொண்டு அலசினால், பொடுகுத் தொல்லை நீங்கும்.

எண்ணெய் பசையான கூந்தல் பிரச்சனைக்கு...

எண்ணெய் பசையான கூந்தல் பிரச்சனைக்கு...

சிலருக்கு தலைக்கு எண்ணெய் பயன்படுத்தாமலேயே, எண்ணெய் வழியும். அப்படிப்பட்டவர்கள், பொடுகு நீக்குவதற்கு கூறப்பட்ட ஹேர் மாஸ்க்கை பின்பற்றினால், தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை குறையும்.

வறட்சியான கூந்தலுக்கு...

வறட்சியான கூந்தலுக்கு...

கற்றாழை ஜெல்லை ஒரு சிறந்த ஹேர் கண்டிஷனர் என்று சொல்லலாம். ஏனெனில் இதனை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தினால், அவை கூந்தலை பட்டுப்போன்று மென்மையாக வைததுக் கொள்ளும்ட. அதற்கு கற்றாழை ஜெல்லில் முட்டையை சேர்த்து நன்கு கலந்து, கூந்தலில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

அரிக்கும் உச்சந்தலைக்கு...

அரிக்கும் உச்சந்தலைக்கு...

கற்றாழை ஜெல்லானது ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் பொருள் என்பதால், இதனை அரிக்கும் உச்சந்தலையில் பயன்படுத்தினால், அவை ஸ்கால்ப்பில் உள்ள தொற்றுக்களை நீக்கிவிடும். அதற்கு கற்றாழை செடியின் இலையில் இருந்து ஜெல்லை எடுத்து, நேரடியாக ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து பின் நீரில் அலசினால், அரிப்புக்கள் அடங்கி, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Use Aloe Vera For Hair

The best way to use aloe vera for hair is to use it in its natural form. There are many uses and benefits of aloe vera. 
Story first published: Friday, August 1, 2014, 17:34 [IST]
Desktop Bottom Promotion