For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியமான கூந்தலைப் பெற உதவும் சில வீட்டு வைத்தியங்கள்!

By Ashok CR
|

தலை முடி அழகாக தோன்ற, நல்ல மற்றும் அதிக அளவு விலை உள்ள முடி வெட்டும் நிலையம் வேண்டும் என்றோ,அதிகமாக சிகிச்சைக்கு செலவழித்தல் மற்றும் அதிக கண்டிசனர் மற்றும் ஷாம்புக்களை முயற்சி செய்தல் என்றோ அவசியம் இல்லை. இவை இல்லாமலும் ஆரோக்கியமான தலை முடியை பெறலாம்.

ஆண்களே! பொடுகு தொல்லை தாங்க முடியலையா? இத ட்ரை பண்ணுங்க...

ஆனால் நல்ல ஆரோக்கியமான தலை முடி பெறுவதற்கு சில எளிதான வீட்டு வைத்தியம் நமது சமயலறையில் உள்ளது. பீரிலிருந்து வாழைப்பழம் வரை உள்ள எல்லா வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தி, பளபளப்பான ஆரோக்கியமான தலை முடியை வளர்க்கலாம். நாம் இதை பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழைப்பழம்

வாழைப்பழம்

அதிக அளவிலான பொட்டசியம் வாழைப்பழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது தலை முடி வளர்வதற்கும் மற்றும் தலை முடியில் இயற்கை நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

ஒரு கிண்ணத்தில் வாழைப்பழத்தை பிசைய வேண்டும் மற்றும் இதை தலைமுடியின் வேரிலிருந்து நுனி வரை தடவ வேண்டும். இந்த சிகிச்சையை 15 நிமிடம் அப்படியே விட வேண்டும், அதன் பிறகு இதை ஷாம்புவை வைத்து கழுவ வேண்டும். இந்த சிகிச்சை, வறட்சியை மற்றும் முடி உடைதலை குணப்படுத்துகிறது.

முட்டையின் மஞ்சள் கரு சிகிச்சை

முட்டையின் மஞ்சள் கரு சிகிச்சை

முட்டையின் மஞ்சள் கருவை அரைத்து உங்கள் உச்சந்தலையில் தடவ வேண்டும் அல்லது 3 முட்டை மஞ்சள் கரு, 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 3 சொட்டு வைட்டமின் ஈ போன்றவை சிறந்த தலை முடி வைத்தியமாக உள்ளது.

இந்த சிகிச்சையை ஒரு 10 நிமிடம் விடவும் அதன் பிறகு ஷாம்பு போட்டு தலை முடியை கழுவ வேண்டும். நீங்கள் இந்த முறையை ஒரு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் நல்ல தீர்வு கிடைக்கும். இந்த சிகிச்சை உங்கள் தலை முடியை மிருதுவாகவும் மற்றும் சீராகவும் வைக்க உதவுகிறது.

பீர் சிகிச்சை

பீர் சிகிச்சை

பீரை வைத்து தலை முடியை கழுவுவது மிகவும் பிரபலமான வைத்தியங்களில் ஒன்று. பீரை தெளிக்கும் பாட்டிலில் ஊற்ற வேண்டும். ஷாம்பூ மற்றும் டவலை வறட்சியான முடியில் வைக்கவும். கொஞ்சமாக பாட்டிலில் உள்ள பீரை தெளிக்கவும். இந்த பீர் வீட்டு வைத்தியத்தின் மூலம் தலை முடியை பளபளப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

மயோனைஸ்

மயோனைஸ்

வறட்சியான தலை முடியில் மயோனைஸை பயன்படுத்துங்கள். இந்த சிகிச்சையை தலை முடியில் ஒரு 15 நிமிடம் அல்லது 1 மணி வரைக்கும் விடுங்கள். நல்ல ஷாம்புவை வைத்து கழுவ வேண்டும். மயோனைஸ் ஒரு நல்ல கண்டிஷனர்.

எண்ணெய் மசாஜ்

எண்ணெய் மசாஜ்

உச்சந்தலையில் வெதுவெதுப்பான எண்ணெய்யை தடவுவது இந்தியாவில் பிரபலமாக நடக்கும் ஒன்று. நீங்கள் தேங்காய் அல்லது ஆலிவ் ஆயிலை உபயோகிப்பது நல்ல தீர்வை தரும்.

இதை தடவி 1 மணிநேரம் விட வேண்டும் மற்றும் இந்த முறைகளை பின்பற்றி அதனுடன் எலுமிச்சை சாறுடன் வினிகரை சேர்த்து, தலை பொடுகை சரிசெய்ய உபயோகிக்க வேண்டும்.

ஆலிவ் ஆயில் சிகிச்சை

ஆலிவ் ஆயில் சிகிச்சை

4 ஸ்பூன் ஆலிவ் ஆயில் தலை முடியில் தடவ வேண்டும். எண்ணெய்யை வைத்து உச்சந்தலையில் மற்றும் தலை முடியில் மசாஜ் செய்ய வேண்டும். 30 நிமிடங்கள் ஊறவைத்து அதன் பிறகு சுத்தமாக கழுவ வேண்டும்.

ஒரு நல்ல தீர்வுக்கு, ஆலிவ் ஆயிலை ஒரு நாள் இரவு முழுவதும் தலையில் ஊறவைக்க வேண்டும். இந்த ஆலிவ் ஆயில் தலை முடியின் வலுவிற்கும் மற்றும் தலை முடி உடைதலையும் தவிர்க்க உதவுகிறது.

நெல்லிக்காய் பொடி மற்றும் எலுமிச்சை சாறு கலவை

நெல்லிக்காய் பொடி மற்றும் எலுமிச்சை சாறு கலவை

நெல்லிக்காய் பொடி மற்றும் எலுமிச்சை சாறு கலவையை தலை முடியில் தடவுவதன் மூலம் உங்கள் முடி வலுவாக வளர உதவுகிறது மற்றும் முழு வளர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

நெல்லிக்காய் பொடி மற்றும் எலுமிச்சை சாறு கலவையை ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு கிண்ணத்தில் வைக்க வேண்டும் மற்றும் அந்த கலவையை நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை உச்சந்தலையிலும், தலை முடியின் வேர்களிலும் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதை 20 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பிறகு ஷாம்புவை வைத்து கழுவ வேண்டும்.

நல்ல தலை முடிக்கான ஸ்ட்ராபெர்ரி

நல்ல தலை முடிக்கான ஸ்ட்ராபெர்ரி

8 ஸ்ட்ராபெர்ரியை ஒரு டேபிள் ஸ்பூன் மயனைசுடன் அரைக்க வேண்டும். மசாஜ் செய்து தலை முடியை கழுவ வேண்டும். அதன் பிறகு ஷவர் கேப் மற்றும் வெதுவெதுப்பான டவல் மூலம் முட வேண்டும்.

பிறகு கண்டிசனர் மற்றும் ஷாம்புவை வைத்து கழுவ வேண்டும். இந்த இனிப்பான கலவை உங்கள் முடியில் நல்ல பளபளப்பையும், நல்ல கண்டிசனையும் ஏற்படுத்துகிறது.

வெந்தயம்

வெந்தயம்

இரவு முழுவதும் 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். பிறகு காலையில் இவற்றை அரைத்து இந்த பசையை உங்கள் உச்சந்தலையில் தேய்க்க வேண்டும். இதை 30 நிமிடம் ஊறவைத்து நன்கு கழுவ வேண்டும். இது பொடுகை போக்குவதற்கு ஒரு நல்ல கை வைத்தியம்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies For Healthy Hair

A variety of home remedies for healthy hair can be easily found in our kitchens for better results. From beer to bananas, shiny healthy hair is easy with a variety of these home remedies. Let's have a look.
Story first published: Sunday, February 9, 2014, 10:47 [IST]
Desktop Bottom Promotion