For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளம் வயதிலேயே ஆண்களுக்கு வழுக்கை தலை ஏற்படுவதைத் தடுக்கும் இயற்கை வைத்தியங்கள்!!!

By Maha
|

ஆண்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை தான் வழுக்கை தலையைப் பெறுவது. பொதுவாக இத்தகைய வழுக்கை தலையானது முடி உதிர்வதால் ஏற்படும். சாதாரணமாக ஒருவருக்கு ஒரு நாளைக்கு 50-100 முடியானது உதிரும். ஆனால் சிலருக்கு அளவுக்கு அதிகமாக உதிர்வது போன்று தோன்றும். அப்படி உங்களுக்கு முடி உதிர்வது அளவுக்கு அதிகமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுகி இதற்கான காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் முடி உதிர்வது ஒருசில நோய்களுக்கும் அறிகுறியாக இருப்பதால், உடனே கவனிக்க வேண்டியது அவசியம். அதிலும் பெண்களை விட ஆண்களுக்கு தான் வழுக்கை தலை சீக்கிரம் ஏற்படும். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் பரம்பரை, ஊட்டச்சத்து குறைபாடு என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். இவற்றில் பரம்பரை காரணமாக ஏற்படுவதை தடுக்க முடியாது. ஆனால் தள்ளிப் போட முடியும்.

இதுப்போன்று வேறு: ஆண்களே! பொடுகு தொல்லை தாங்க முடியலையா? இத ட்ரை பண்ணுங்க...

அதுவும் ஒருசில செயல்களைப் பின்பற்றுவதன் மூலம், மயிர்கால்களை வலுவுடன் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். அதில் முதலில் செய்ய வேண்டியது வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களுடன், போதிய முடிக்கான பராமரிப்பும் மேற்கொள்ள வேண்டும்.

இங்கு ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை தலையைத் தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போம்.

கூந்தல் பிரச்சனைகளை சரிசெய்யும் சூப்பர் எண்ணெய்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆயில் மசாஜ்

ஆயில் மசாஜ்

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தேங்காய், பாதாம், ஆலிவ் போன்ற எண்ணெய்களைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமானால் இரண்டு மூன்று எண்ணெய்களை ஒன்றாக சேர்த்தும் முடிக்குப் பயன்படுத்தினால், முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, முடி வளர்ச்சி அதிகரிக்க ஆரம்பிக்கும்.

தேங்காய் பால்

தேங்காய் பால்

தேங்காய் பால் கொண்டு தலைக்கு மசாஜ் செய்தால், அது மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்களைக் கொடுத்து, அதனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இதனால் முடி உதிர்வது தடுக்கப்படும். இந்த முறையை ஆண்கள் தவறாமல் வாரம் 2-3 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

மருதாணி இலைகள்

மருதாணி இலைகள்

மருதாணி இலையில் கைக்கு மட்டும் நல்ல நிறத்தைக் கொடுக்க பயன்படுவதில்லை. இது முடிக்கு நல்ல சத்துக்களைக் கொடுக்க வல்லது. அதிலும் இதனை கடுகு எண்ணெயில் போட்டு கொதிக்க விட்டு, பின் அந்த எண்ணெயை குளிர வைத்து, தினமும் தலைக்கு தடவி வர வேண்டும். இதன் மூலம் முடி உதிர்வது உடனே நின்றுவிடும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

முடி வளர்ச்சியைத் தூண்டும் பொருட்களில் ஒன்று தான் நெல்லிக்காய். ஏனெனில் இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது முடி உதிர்வதை உடனே தடுத்து நிறுத்திவிடும். அதற்கு நெல்லிக்காயை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, அதனை இரவில் படுக்கும் போது, தலையில் தடவி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் எழுந்து ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் முடி உதிர்வது நின்று, முடியின் வளர்ச்சி அதிகரித்து, வழுக்கை ஏற்படாமல் இருக்கும்.

வெந்தயம்

வெந்தயம்

வெந்தயம் உடல் ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்த உதவுவதில்லை. முடி உதிர்வதைத் தடுக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. எப்படியெனில் வெந்தயத்தில் ஆன்செடென்ட்ஸ் என்னும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும், பாதிப்படைந்த மயிர்கால்களை குணப்படுத்தும் பொருள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் வெந்தயத்தில் முடி வளர்ச்சிக்கு அவசியமான புரோட்டீன் மற்றும் நிக்கோடினிக் ஆசிட் உள்ளது. எனவே வாரம் ஒரு முறை வெந்தயத்தில் நீரில் நன்கு ஊற வைத்து, பின் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும்.

வெங்காய சிகிச்சை

வெங்காய சிகிச்சை

வெங்காயத்தில் முடி உதிர்வதைத் தடுக்கும் சல்பர் என்னும் பொருள் உள்ளது. இது முடி உதிர்வதைத் தடுப்பதுடன், முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே வாரம் 1-2 முறை வெங்காயத்தை அரைத்து, அதன் சாற்றினை கற்றாழை ஜெல்லுடன் கலந்து, தலையில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும். இதன் மூலம் ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies To Cure Baldness: Tips For Men

It is important to prefer simple home remedies to get rid of male pattern baldness to a large extent and strengthen the existing strands and scalp to prevent sudden baldness. Most of these home remedies are simple and if followed regularly are very effective.
Desktop Bottom Promotion