For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழைக்காலத்திற்கு ஏற்ற எளிமையான ஹேர் ஸ்டைல்கள்!!!

By Boopathi Lakshmanan
|

இதோ மழைக்காலம் வந்து விட்டது, ஆனால் நம்மால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க முடியவில்லை. கோடை வெயிலில் இருந்து நம்மை விடுதலை செய்ய வரும் மழையை நம்மால் ஏன் புன்முறுவலுடன் வரவேற்க முடியவில்லை! ஏனெனில், நம் அனைவருடைய சருமம் மற்றும் தலைமுடியும் இந்த மழைக்காலத்துடன் ஒத்துப் போகும் என்று சொல்வதற்கில்லை.

மழைக்காலத்திற்கு ஏற்ற வகையில் உங்களுடைய தலைமுடி நடந்து கொள்ளத் தவறும் வேளைகளில், நீங்கள் செய்ய வேண்டிய ஹேர் ஸ்டைல்களை தேர்ந்தெடுக்க இந்த கட்டுரை உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொண்டை

கொண்டை

தலைமுடி அனைத்தையும் ஒன்று திரட்டி, ஒரு கொண்டையாகப் போட்டுக் கொள்வது அதிகம் பிரச்னை தராத ஹேர்ஸ்டைலாக இருக்கும். நீங்கள் எந்த இடத்திற்கு அல்லது எப்படி அணிய வேண்டும் என்பதைப் பொறுத்து, கொண்டையை தளர்வாகவோ அல்லது இறுக்கமாகவோ போட்டுக் கொள்ளலாம். அலுவலகம் மற்றும் சாதாரண நேரங்களுக்கு ஏற்ற கொண்டைகளை போட்டுக் கொள்ளவும் முடியும். 'கொண்டைகளை தளர்வாக விட்டு விடுதல், இறுக்கமாக தூக்கிக் கட்டுதல், பக்கவாட்டில் இழுத்து விடுதல், வெளியே தொங்க விடுதல் மற்றும் மேக்கப் சாதனங்களை அணிவித்தல் என எண்ணற்ற செயல்களை கொண்டைகளில் செய்ய முடியும்' என்கிறார் ஹேர் எக்ஸ்பர்ட் மிதிலா தேசாய். அது மட்டுமல்லாமல், தலைமுடியை சுருண்டு விடாமலும், ஒரிடத்தில் நிலையாக இருக்கச் செய்யவும் கொண்டை உதவும்.

பிஷ் டெயில்

பிஷ் டெயில்

அழகாகவும், செய்வதற்கு ஏற்றதாகவும் இருப்பதால் தான் பின்னல்கள் சிறந்த தலைமுடி ஒப்பனையாக கருதப்படுகிறது. எளிதாகவும், வேகமாகவும் தலைமுடியை பின்னல் போட்டு விட முடியும் என்பதால், நீங்கள் பல்வேறு வகையான பின்னல்களை முயற்சி செய்து பார்க்கலாம். பிரெஞ்சு வகை பின்னலா பிஷ் டெயில், மிகவும் நவீனமான வகையாகவும், அழகாகவும் இருக்கும். முயற்சி செய்து பலனடையுங்கள்!

குதிரை வால்

குதிரை வால்

மிகவும் பிரபலமான மற்றும் எளிமையான ஹேர் ஸ்டைலாகவும், விளையாட்டில் சுறுசுறுப்பாக இருக்கும் பெண்கள் மிகவும் விரும்பும் ஹேர் ஸ்டைலாகவும் குதிரை வால் உள்ளது. 'நீங்கள் சோர்வாக இருப்பதாக நினைத்தால், தலைமுடியை தூக்கி குதிரை வால் ஜடை போட்டுக் கொள்ளுங்கள். அதே போல் உங்களுடைய தலைமுடியால் வெளியே பெய்யும் மழையைத் தாங்க முடியவில்லை என்று நினைத்தாலும், இந்த குதிரைவால் ஜடையைப் போட்டுக் கொள்ளுங்கள்' என்கிறார் புகழ் பெற்ற ஹேர் ஸ்டைல் வல்லுநரும், ஒப்பனையாளருமான ரியா சோன்ஸ். புகழ் பெற்றவர்கள் பலரும் கூட, தங்களுக்குக் கிடைக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பின் போது, குதிரைவால் ஜடையை போட்டிருப்பதில் இருந்தே, இந்த ஜடையின் மகத்துவம் தெரியும்.

லூஸ் வேவ்ஸ்

லூஸ் வேவ்ஸ்

உங்களுக்கு சுருளான அல்லது நீளமான முடிகளோ இருந்தால், அதனை காதுக்குப் பின்னால் செருகி விட முயற்சி செய்வீர்கள், ஆனால் இந்த மழை நாள் உங்களுடைய முடியை தளர்வாக்கி, அழகைப் பாழாக்கி விடும். இதற்காக தலைமுடியை நேராக்க வேண்டும் அல்லது சுருளை மேலேற்ற வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். இந்நாட்களில் காற்று உங்கள் தலைமுடியுடன் ஆடும் விளையாட்டுகளுக்கு தற்காலிகமாக ஒரு சில ஏற்பாடுகளை செய்து, தடையை ஏற்படுத்த லூஸ் வேவ்ஸ் வகையில் தலைமுடியை வைத்திருப்பது உதவும். ஏனெனில், உங்களுடைய தலைமுடிக்கும் சுவாசம் தேவைப்படும். எனவே, தேவையான இடைவெளி விட்டு தலைமுடியை வாரிக் கொள்வதன் மூலமாக, தலைமுடியை கலையாமல் கவனித்துக் கொள்ள முடியும்.

சைடு ஸ்வீப்

சைடு ஸ்வீப்

மிகவும் பாரம்பரியமான மற்றும் பழமையான தோற்றத்தைக் கொடுப்பதாக சைடு ஸ்வீப் வகை இருக்கும். உங்களுடைய தலைமுடி அனைத்தையும் ஒரு பக்கமாக கொண்டு வரலாம் அல்லது தளர்வாக்கி வைக்கலாம், இதன் மூலம் பக்கவாட்டு பின்னல்களை போட்டுக் கொள்ள முடியும். தலைமுடியில் சிலவற்றைத் தளர்வாக விட்டு விடுவதும், வெளியே விடுவதும் நல்ல தீர்வாக இருக்கும். அதே போல, விரல்களை தலைமுடிகளில் விட்டு, இயற்கையான அமைப்பைக் கொண்டு வரவும் முயற்சி செய்யவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Easy To Do Hairstyles For Rainy Days

The rains are here and we couldn't be happier. The monsoons bring with them a cheer to beat the summer heat, but not everyone's skin and hair is compatible with this season. If you're having one of those days where your hair just refuses to behave itself and you have no clue what to do with it, here are a few simple hairstyles for the monsoons.
Desktop Bottom Promotion