For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடியின் வேர்கள் வலுப்பெற சில சிறந்த இயற்கை வைத்தியங்கள்!!!

By Karthikeyan Manickam
|

பெரும்பாலானோர் முடிகளின் வெளிப்பகுதியை அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருந்தால் மட்டுமே போதும் என்று நினைப்பார்கள். ஆனால் முடிகள் வளரும் இடமான முடியின் வேர்களான மயிர் கால்களைப் பராமரிப்பது தான் மிகவும் முக்கியம்.

கூந்தல் பராமரிப்பைப் பற்றிப் பேசும் போது, மயிர் கால்களின் தரம் குறித்தும் அக்கறை கொள்வது அவசியம். முடியின் வேர்கள் ஸ்ட்ராங்காக இருந்தால் தான், முடிகளும் நன்கு அடர்த்தியாக வளரும். அதற்கு முடியின் வேர்களை நன்றாக மசாஜ் செய்து, இயற்கையான சில முறைகளில் அவற்றை நன்கு பராமரிப்பதன் மூலமே அழகான, அடர்த்தியான, நீளமான கூந்தலைப் பெற முடியும்.

முடி வளர்ச்சிக்காக மார்க்கெட்டில் எத்தனையோ ஷாம்புக்களும், கண்டிஷனர்களும் வலம் வரலாம். ஆனால் உண்மையில் அவை சிறந்தவை தானா என்பது கேள்விக்குறி தான். முடி வேர்கள் வலுப்பெற இயற்கையான சிகிச்சை முறைகளை நாடித்தான் ஆக வேண்டும்.

அத்தகைய சில இயற்கை சிகிச்சை முறைகள் இதோ...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுத்தமான தலை

சுத்தமான தலை

முதலில் ஸ்கால்ப் பகுதியை எப்போதும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வது மிக மிக முக்கியம். ஏனெனில் அதில் கொஞ்சம் அழுக்குப் படிந்தாலே பாக்டீரியா வளர்ந்து, மயிர்கால்களின் ஆரோக்கியத்தை கெடுத்து, பின் முடியின் வளர்ச்சியை தடுத்துவிடும்.

மசாஜ் எண்ணெய்கள்

மசாஜ் எண்ணெய்கள்

சூடான எண்ணெயால் தலைமுடியை மசாஜ் செய்வது மிகச் சிறந்த ஒரு வழியாகும். அதிலும் சூடான தேங்காய் எண்ணெய் இன்னும் அதிக பலன் கொடுக்கும். இந்த மசாஜைத் தொடர்ந்து செய்தால், மயிர்கால்கள் மிகவும் வலுவடையும்.

சிறந்த டயட்

சிறந்த டயட்

மயிர் கால்கள் வலுப்பெற சிறந்த உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். குறிப்பாக நம் உணவில் புரோட்டீன்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் முட்டை, மீன், பால், சோயா ஆகியவை முக்கியம்.

இயற்கை ஹேர் மாஸ்க்

இயற்கை ஹேர் மாஸ்க்

தேங்காய் எண்ணெய், தேன், முட்டையின் வெள்ளைக் கரு ஆகிய மூன்றும் முடி வேர்கள் வளர்ச்சியின் மும்மூர்த்திகள் என்று சொல்லலாம். இம்மூன்றையும் பசை போலக் கலந்து, முடியின் வேர் பகுதிகளிலும், முடிகளிலும் அழுந்தப் படியுமாறு மசாஜ் செய்ய வேண்டும். பிறகு நல்ல ஷாம்பு வைத்து தலையை நன்றாக அலச வேண்டும்.

அதிகமான தண்ணீர்

அதிகமான தண்ணீர்

நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், நாவறட்சி ஏற்படுவது மட்டுமல்ல; முடி வேர்களுக்கும் அது கெடுதல் தான். தினமும் குறைந்தது 8-10 டம்ளர் தண்ணீர் குடித்தால், முடி வேர்கள் தானாகவே வலுவடையும்.

அளவோடு சீவ வேண்டும்

அளவோடு சீவ வேண்டும்

நாம் நம் தலைமுடியை சீப்பு வைத்து சீவும் போது, அளவுக்கு அதிகமாகவும் மிக அழுத்தமாகவும் சீவக் கூடாது. அழுத்தமாகச் சீவினால் மயிர்கால்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே ஜாக்கிரதை!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Natural Treatments For Hair Roots

There are a lot of hair treatment shampoos and massagers available in the market. You can pick them off the shelf and use them. But do they really work is the question. Here are some natural hair root treatment methods. You can follow the regime mentioned in here. They would definitely benefit your roots eventually strengthening your hair.
Desktop Bottom Promotion