For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைமுடி பிரச்சனைகளை சரிசெய்யும் முட்டை ஹேர் பேக்குகள்!!!

By Ashok CR
|

முட்டை என்றால் உங்கள் காலை உணவிற்கு ஆம்லெட் செய்வதற்கு பயன்படுவது மட்டுமல்ல. உங்கள் தலைமுடிக்கான அழகு சாதனமாகவும் இது செயல்படுகிறது. புரதம், வைட்டமின்கள், அதிமுக்கிய கொழுப்பமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதில் வளமையாக அடங்கியுள்ளதால், உங்கள் தலைமுடி பிரச்சனைகள் பலவற்றையும் இது சரிசெய்யும். மேலும் பளபளப்பான மின்னும் கூந்தலையும் கொடுக்கும்.

முட்டையில் உள்ள பல கூட்டுப்பொருட்கள் வறண்ட எளிதில் உடையக்கூடிய தலைமுடி, முடி கழிதல், அரிப்பெடுக்கும் தலைச்சருமம், பொடுகு போன்ற பிரச்சனைகளை நீக்கி உங்கள் தலைமுடியை கண்டிஷன் செய்யவும் உதவும். அதிலுள்ள அதிமுக்கிய கொழுப்பமிலங்கள் மயிரடி நரம்பிழைகளுக்கு மின்னூட்டத்தை அளிக்கும்.

பொலிவான மற்றும் ஆரோக்கியமான முடியைப் பெற உதவும் உணவுகள்!!!

அடர்ந்த மஞ்சள் நிறத்தை கொண்டு வரும், அதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தலைச்சருமத்தில் ஆக்சிஜன் அளிப்பை அதிகரிக்கும். மேலும் சொரசொரப்பாக, எளிதில் உடையக்கூடிய வகையில் இருக்கும் தலைமுடியையும் சரி செய்யும். அதிலுள்ள முக்கிய கூட்டுப்பொருட்கள் ஆழமாக உள்ளேறி திறம்பட செயல்பட, கொலஸ்ட்ரால் உதவுகிறது.

முட்டையை கொண்டு வீட்டிலேயே தயாரிக்கப்படும் சில ஹேர் பேக்குகளைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்க...

தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்க...

ஒரு முட்டையின் வெள்ளை கருவை எடுத்து, ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் கலந்து கொள்ளவும். அது பேஸ்ட் ஆகும் வரை நன்றாக அடித்துக் கொள்ளவும். இதனை தலைச்சருமம் மற்றும் தலைமுடி மீது தடவவும். 15-20 நிமிடங்கள் வரை அதை அப்படியே விட்டு விடுங்கள். பின் குளிர்ந்த நீரில், மிதமான ஷாம்பூவை கொண்டு தலையை அலசுங்கள்.

வழுவழுப்பான தலைமுடிக்கு...

வழுவழுப்பான தலைமுடிக்கு...

ஒரு கப் தயிரை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கூந்தலின் நீளத்தை பொறுத்து அதன் அளவை தீர்மானித்துக் கொள்ளலாம். அதில் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக கலந்து உங்கள் தலைமுடியில் தடவிக் கொள்ளுங்கள். 20 நிமிடங்களுக்காவது அதை அப்படியே விட்டு விடுங்கள். பின் தலையை குளிர்ந்த நீரில் கழுவினால், முட்டை வாடை நீங்கும்.

கண்டிஷன் செய்யப்பட முடியை பெற...

கண்டிஷன் செய்யப்பட முடியை பெற...

முட்டையின் மஞ்சள் கருவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள். கலவை நன்றாக மாறும் வரை, அதனை நன்றாக கலக்கவும். இப்போது, வெதுவெதுப்பான நீரை இந்த கலவையில் சேர்த்து நீர்ப்பதத்தை கூட்டுங்கள். தலை முடியை கழுவிய பின், இந்த கலவையை உங்கள் கூந்தலில், முடியும் இடம் வரை தடவுங்கள். சிறிது நேரம் ஊற வைத்து பின் கூந்தலை அலசிக்கொள்ளுங்கள்.

பாதிப்படைந்த கூந்தலை சீர்செய்ய...

பாதிப்படைந்த கூந்தலை சீர்செய்ய...

ஒரு முட்டையின் மஞ்சள் கருவை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். அதனுடன் 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை நன்றாக கலந்து கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள். இரண்டு மணி நேரத்திற்கு அதை அப்படியே விட்டு விட்டு, பின் கழுவிக் கொள்ளுங்கள்.

குறிப்பு

குறிப்பு

மேற்கூறிய ஹேர் பேக்குகளை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு காரணம் முட்டையில் உள்ள புரதம், வெப்பத்தினால் உறைந்துவிடும். வெந்நீர் பயன்படுத்தினால், உங்கள் கூந்தலை ஒட்டியிருக்கும் முட்டையை நீக்க சிரமமாகிவிடும். ஆகவே குளிர்ந்த நீரில் முடியை அலச வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beat Hair Problems With These Homemade Egg Hair Packs

Don’t just use eggs to make omelettes for breakfast. They can very well come in handy as a beauty product for your hair. The various components in eggs can combat problems like dry and brittle hair, hair loss, dry, flaky scalp, dandruff and also condition your hair.
Desktop Bottom Promotion