For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போர் நீரினால் தலைமுடிக்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வது எப்படி?

By Karthikeyan Manickam
|

ஒவ்வொருவரும் தன் தலைமுடியைப் பராமரிப்பது என்பது ஒரு தனிக் கலை. அது அவ்வளவு எளிது கிடையாது. தலைமுடி நன்றாக இருப்பதற்காக, குறிப்பாக அதை நீரில் கழுவிப் பராமரிப்பது முக்கியமாகும்.

எனவே, அதற்காகப் பயன்படுத்தும் நீர் படு சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நம்மூர் குழாய்களில் வரும் நீரில் பல தனிமங்கள் உள்ளதால் அது மிகவும் கடினத் தன்மை வாய்ந்தது.

குழாய் நீரிலுள்ள கால்சியம், தலைமுடியைப் பிசுபிசுக்கச் செய்கிறது; முடி வேரைப் பாதிக்கிறது. இரும்பு, முடியை உலர்வாக வைக்கிறது. தாமிரம், முடியின் நிறத்தைக் குறைக்கிறது; அழகான சுருள் முடியை உதிரச் செய்கிறது. இந்த எல்லாப் பிரச்சனைகளையும் மொத்தமாக மக்னீசியம் உருவாக்கி விடுகிறது; பளபளப்பையும் நீக்கி விடுகிறது. இந்தப் பிரச்சனைகளைச் சரி செய்ய சில இயற்கையான வழிகள் உள்ளன. அவை:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வினிகர்

வினிகர்

வினிகரில் ஆப்பிள் சீடர் வினிகர் நல்லது. மூன்று கப் நீரில் ஒரு ஸ்பூன் வினிகரைக் கலக்க வேண்டும். ஷாம்பு போட்டுக் குளித்த பின், இந்தக் கலவையைத் தலையில் ஊற்றி மசாஜ் செய்து தேய்க்க வேண்டும். பின்னர் ஓரிரு நிமிடங்கள் கழித்து கழுவினால், தலைமுடி பளபளப்பாகும். இதை தினமும் செய்தால் முடி உலர்ந்து விடும்; அதனால், வாரத்திற்கு ஒருமுறை செய்தால் போதும்.

எலுமிச்சை

எலுமிச்சை

முடியில் அதிக எண்ணெய் பிசுபிசுப்பு உள்ளவர்களுக்கு எலுமிச்சை சாறு மிகவும் நல்லது. அதற்கு மூன்று கப் நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றைக் கலக்க வேண்டும். ஷாம்பு போட்டுக் குளித்த பின், இந்தக் கலவையைத் தலையில் மசாஜ் செய்து தேய்க்க வேண்டும். பின்னர் ஓரிரு நிமிடங்கள் கழித்து கழுவினால், தலைமுடி பளபளப்பாவது மட்டுமின்றி, உறுதியாகவும் இருக்கும்.

மிருதுவான நீர்

மிருதுவான நீர்

மிருதுவான நீருக்காக நிறைய செலவழிக்க வேண்டி வரும். குழாய் நீரை முழுவதுமாக வடிகட்டும் வகையில் ஒரு வாட்டர் ஃபில்ட்டரை அமைத்துக் கொள்ள வேண்டும். அது நீரிலுள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற தனிமங்களை நீக்கி, நீரை மிருதுவாக்கும். இந்த நீரைப் பயன்படுத்தி தலைமுடியைக் கழுவினால், அதற்கு ஒரு பிரச்சனையும் வராது.

தேங்காய்/பாதாம் எண்ணெய்

தேங்காய்/பாதாம் எண்ணெய்

ஒவ்வொரு முறை குழாய் நீரில் குளித்த பின்னரும், தேங்காய் அல்லது பாதாம் எண்ணெயைத் தலைமுடிக்குத் தேய்க்க வேண்டும். அது முடியின் ஈரத்தன்மையை நிலை நிறுத்தி, பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். குறிப்பு: அளவுக்கு அதிகமாக இந்த எண்ணெயைத் தேய்க்கக் கூடாது.

டீப் கண்டிஷனிங்

டீப் கண்டிஷனிங்

குழாய் நீரில் குளித்தால் தலைமுடி, வைக்கோல் போல ஆகிவிடும். இதற்கு, சலூனுக்குச் சென்று வாரத்திற்கு ஒருமுறை டீப் கண்டிஷனிங் சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதேப்போல், மாதத்திற்கு ஒருமுறை ஸ்பா சிகிச்சையும், அடிக்கடி சுடுநீர் சிகிச்சையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஷவர் ஃபில்ட்டர்

ஷவர் ஃபில்ட்டர்

நாம் குளிக்க உதவும் ஷவரில் ஒரு ஃபில்ட்டரை மாட்டினால் போதுமானது. பலவிதமான தனிமங்களையும் இது நன்றாக வடிகட்டி விடும்.

மழை நீர்

மழை நீர்

கடின நீரில் குளித்துக் குளித்து நொந்து போயிருக்கும் வேளையில், மழை வந்தால் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மழை நீரை முடிந்த அளவு பாத்திரங்களில் சேகரித்து, அதை சுட வைத்துக் குளிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Avoid Hard Water Damages Of Your Hair

There are many easy natural home remedies you may try to regain your hair health. Here are some tips to avoid hard water damages of your hair. Check out...
Desktop Bottom Promotion