For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வறட்சியான தலை முடிக்கான சில இயற்கையான தீர்வுகள்!!!

By Ashok CR
|

தலை முடிக்கான வைத்தியத்தில், இயற்கையான சில மாஸ்க் கொண்டு, உங்கள் தலைமுடியை பராமரிக்கலாம். உங்கள் தலை முடியை, நல்ல ஊட்டமான மாஸ்க் கொண்டு பராமரிப்பதன் மூலம், சில வாரங்களில் தகுந்த வேறுபாட்டை உணரலாம்.

பெண்கள் பத்தாண்டு காலமாக இதை கவனித்து வருகின்றனர். மிகவும் பிரபலமான பிராண்ட்டை சார்ந்த பொருட்கள் உங்களை சுற்றி அதிக அளவில் உள்ளன. அவற்றால் உங்கள் தலை முடிக்கு நல்ல பளபளப்பும், தொடுவதற்கு மிருதுவான தன்மையும் மட்டும் வந்தால் போதுமா?

உங்கள் சமயலறையிலேயே, இந்த உபயோகத்திற்கு பல ஆச்சரியமான பொருட்கள் உள்ளன. அவற்றில் உங்களை ஆச்சரியப்படுத்தும் ஒரு முக்கிய பொருள், வாழைப்பழம். இதில் அதிக அளவில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி, ஈ அடங்கியுள்ளன. வாழைப்பழத்தை உரித்து, பின் ஒரு கிண்ணத்தில் நன்கு பிசைந்து, மாவு போல குலைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த மொத்தத்தையும், கொஞ்சம் கொஞ்சமாக அலசுவதற்கு ஏற்றவாறு தடவ வேண்டும்.

பளபளப்பான பட்டுப் போன்ற உறுதியான கூந்தலுக்கு 10 எளிய வழிகள்!!!

இதை நீங்கள் எளிதாக சமாளிக்கலாம். உங்கள் தலை முடியை ஷவர் கேப் அல்லது பிளாஸ்டிக் பை கொண்டு மூடிவிடுவதன் மூலம், பேக் வடியாமல் தடுக்கலாம். ஒரு வேளை, நீங்கள், உங்கள் தலை முடியின் வேர்க்கால்கள் அதிக சத்துக்களை உட்கிரகிக்க வேண்டும் என எதிர்பார்த்தால், ஹேர் டிரையரை ஒரு இருபது நிமிடங்கள் உபயோகித்தால், வாழைப் பழ பேக் நல்ல படியாக தலையில நிலைத்திருக்கும்.

At Home Hair Remedies

பிறகு இந்த நறுமண கலவையை நன்கு அலசி கழுவ வேண்டும். தேவையானால், நீங்கள் வழக்கமாக உபயோகிக்கும் ஷாம்புவைப் பயன்படுத்தலாம். மேலும் நல்ல பற்களை உடைய சீப்புகளை உபயோகித்தல் நல்லது.

உங்களுக்கு உலர்ந்த முடி தான் பிரச்சனை என்றால், நீங்கள் அடுத்த தேர்வை தைரியமாக உபயோகிக்கலாம்.

மயோனைஸ் மிகவும் மலிவானது மற்றும் அழகுக்கலை வைத்தியத்தில் நீரின் வெளியேற்றத்தை தடுக்கிறது. இந்த நீர்மமான வெண்ணிற கலவையானது, முழுவதும் எண்ணையால் ஆனது. எனவே, இது அதிக பளபளப்பையும், நீர்ச்சத்தையும் கூந்தலுக்கு தருகிறது. இதற்காக நீங்கள் வெளியே சென்று, ஒரு புது ஜார் வாங்கத் தேவை இல்லை. சிறிதளவு மயோனைஸ், இந்த செயலுக்கு போதுமானது.

மயோனைஸை உங்கள் கையில் சிறிதளவு எடுத்துக் கொண்டு, அதை உங்கள் தலை முடியின் வேர்கால்களில் தொடங்கி, நுனி பகுதி வரை நன்கு தடவ வேண்டும். ஒருவேளை இதில் முட்டை வாடை வந்தால், நீங்கள் இதை தடவுவதற்கு முன்னால் நறுமனத்திற்கான எண்ணெயை சில துளிகள் சேர்த்து தடவ வேண்டும்.

இதை அப்படியே ஒரு மணி நேரம் விட்டு விட வேண்டும். பின்னர் உங்கள் தலை முடியை அலசுவதற்கு முன், எண்ணெயில் நன்கு ஊற வைக்க வேண்டும். பிறகு ஷாம்பு பயன்படுத்தலாம்.

பொடுகை விரட்டுவதற்கு எலுமிச்சை மற்றும் ஆலிவ் எண்ணெய் துணை புரியும். உங்களுடைய எண்ணெய் சாதாரணமானதா அல்லது வாசமானதா. நறுமணமிக்க எண்ணெய்கள், அருமையான நறுமணத்தை விட்டு செல்வதில்லை.

ஒரு கிண்ணத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றையும், அதே அளவு ஆலிவ் எண்ணெய் மற்றும் தண்ணீரையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நன்கு கலந்து, உங்கள் தலை முடியில் நன்கு தேய்க்க வேண்டும். உங்கள் தலை முடியை ஒரு மிதமான ஈர துண்டால் சுற்றி கட்டி விட்டால், அந்த மாஸ்க் சிந்தாமல் இருக்கும்.

இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை செய்யலாம். இது தயாரிப்பதற்கும், உபயோகிப்பதற்கும் எளிது. இது வாழைப்பழம் மற்றும் மயோனைஸ் போல உங்கள் கைகளில் கறையையும் ஏற்படுத்துவதில்லை.

English summary

At Home Hair Remedies

There are an astonishing amount of items in your kitchen which are great to use on your tresses. One which may surprise you is the banana, which is high in potassium and vitamins A, C and E. If dry hair is your problem you may be brave enough to try these at home hair remedies now.
Desktop Bottom Promotion