For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரவு நேரங்களில் போடுவதற்கு ஏற்ற சில ஹேர் மாஸ்க்குகள்!!!

By Maha
|

பெரும்பாலும் பெண்கள் தங்கள் கூந்தல் மீது அதிக கவனம் செலுத்துவார்கள் என்று நினைக்க வேண்டாம். தற்போதைய ஆண்களும் நல்ல அடர்த்தியான முடி வேண்டுமென்று நினைத்து, தங்கள் முடிக்கு போதிய பராமரிப்புக்களை கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, இன்றைய காலத்தில் ஆண்களுக்கு இளமையிலேயே வழுக்கை வருவதால், பெண்களை விட அதிக அளவில் முடிக்கு முறையான பராமரிப்பை மேற்கொள்கின்றனர்.

மேலும் முடி பராமரிப்பு என்பது ஹேர் ஸ்டைலிங் பொருட்களையோ அல்லது ஹேர் கலர் அடிப்பதோ கிடையாது. இவற்றை பயன்படுத்தினால், முடி இன்னும் பல பிரச்சனைகளை சந்திக்கும். ஆகவே முடியை பராமரிப்ப ஹேர் மாஸ்க் போடுவது தான் சிறந்தது. அதிலும் இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி ஹேர் மாஸ்க் போட வேண்டும்.

அப்படி ஹேர் மாஸ்க் போட்டால் குறைந்தது 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஆனால் இன்னும் நல்ல பலனைப் பெற வேண்டுமானால், இரவில் தலைக்கு போட்டு காலையில் அலசுவது தான் சிறந்தது. முக்கியமாக அப்படி மாஸ்க் போடும் முன், எண்ணெய் கொண்டு லேசாக மசாஜ் செய்துவிட்டு, பின் மாஸ்க்குகளைப் போட வேண்டும். மேலும் மாஸ்க் போட்ட பின்னர், தலைக்கு ஷவர் கேப் அணிந்து கொண்டு, படுக்க வேண்டும்.

சரி, இப்போது இரவு நேரத்தில் எந்த ஹேர் மாஸ்க்குகளைப் போடுவது சிறந்தது என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய் மாஸ்க்

தேங்காய் எண்ணெய் மாஸ்க்

கோடையில் தலையில் அதிக வறட்சி ஏற்படக்கூடும். எனவே அத்தகைய வறட்சியைத் தடுப்பதற்கு, இரவில் படுக்கும் போது தலைக்கு தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து, மறுநாள் காலையில் தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் முடி வறட்சியடையாமல், நன்கு ஆரோக்கியமாக வளரும்.

வாழைப்பழ மாஸ்க்

வாழைப்பழ மாஸ்க்

கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வாழைப்பழ மாஸ்க் சிறந்த ஒன்று. அதற்கு வாழைப்பழத்தை நன்கு மசித்து, அத்துடன் தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் தேன் சேர்த்து கலந்து, இரவில் தலையில் தடவி ஷவர் கேப் அணிந்து ஊற வைத்து, காலையில் குளித்தால், மென்மையான ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம்.

அவகேடோ

அவகேடோ

இரவில் அவகேடோவை மசித்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி கலந்து, தலைக்கு தடவி ஊற வைத்தால், முடி வெடிப்புக்களை தடுக்கலாம்.

பால் மற்றும் தேன்

பால் மற்றும் தேன்

பால் மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அதனை இரவில் படுக்கும் முன் தலைக்கு தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் குளிர்ச்சியான நீரில் அலசினால், முடியின் ஆரோக்கியமானது பாதுகாக்கப்படும்.

பீர்

பீர்

வெள்ளிக்கிழமை இரவில் பீர் அடிப்பீங்களா? அப்படின்னா அதில் கொஞ்ச பீரை எடுத்து, அதில் விளக்கெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முடிக்கு தடவி மசாஜ் செய்து ஊற வைத்து மறுநாள் காலையில் குளியுங்கள். இதனால் உங்கள் முடி சூப்பராக இருக்கும்.

பரங்கிக்காய்

பரங்கிக்காய்

பரங்கிக்காயை அரைத்து, அதில் தேன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் போது முடிக்கு நன்கு தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அலசினால், முடி நன்கு எண்ணெய் பசையுடன் பொலிவாக இருக்கும்.

தயிர்

தயிர்

அனைவரது வீடுகளிலும் தயிர் நிச்சயம் இருக்கும். அத்தகைய தயிரை இரவில் அவகேடோ மற்றும் வாழைப்பழத்துடன் சேர்த்து கலந்து மாஸ்க் போட வேண்டும்.

ஆலிவ் மற்றும் கற்றாழை

ஆலிவ் மற்றும் கற்றாழை

ஆலிவ் ஆயிலில், கற்றாழை ஜெல் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து கலந்து, ஹேர் மாஸ்க் போட்டால், பொலிவிழந்து வறட்சியுடன் காணப்படும் முடியை பொலிவாக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Best Overnight Hair Masks

We all want thick and lustrous hair with glow and bounce, irrespective of their length. But, more often, what you get is dry and frizzy hair with a dull look. Here, we list the best overnight hair masks as part of hair care for summer.
Story first published: Friday, May 9, 2014, 11:22 [IST]
Desktop Bottom Promotion