For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுருட்டை முடியை மென்மையாக்குவதற்கான சில எளிய டிப்ஸ்...

By Maha
|

சுருட்டை முடி இருப்பவர்களுக்கு சுருட்ட முடியே பிடிக்காது. ஏனெனில் அதனை பராமரிப்பது என்பது மிகவும் கடினமானது. மேலும் அவை மென்மையிழந்து, பிரஷ் போன்று இருப்பதோடு, அதிகமாக சிக்கடைவதும் காரணம். எனவே தான் சுருட்டை முடி உள்ளவர்கள் பலர், தங்கள் முடியை நேராக்குகின்றனர். ஆனால் உண்மையில் நேரான முடியை விட, சுருட்டை முடி தான் பலவகையில் நன்மையைக் கொடுக்கக்கூடியது. எப்படியெனில் சுருட்டை முடி கொஞ்சமாக இருந்தாலும், அது அடர்த்தியாக இருப்பது போன்று வெளிப்படுத்தும். ஆனால் நேரான முடி கொஞ்சம் இருந்தால், அது வழுக்கை உள்ளது போன்றே வெளிக்காட்டும்.

எனவே சுருட்டை முடி உள்ளவர்களே! சுருட்டை முடியை எளிதில் பராமரிப்பதற்கு ஒருசில ட்ரிக்ஸ்களை கொடுத்துள்ளோம். அத்தகயை டிப்ஸ்களை மனதில் கொண்டு தினமும் முடியைப் பராமரித்து வந்தால், முடி ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகான தோற்றத்தையும் தரும். குறிப்பாக, இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளும் போது, வேறு எந்த ஒரு கெமிக்கல் அதிகம் உள்ள பொருட்களை முடிக்கு பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அவை முடியின் தரத்தையும், முடி உதிர்தலையும் ஏற்படுத்தி, பொடுகுத் தொல்லை, அரிப்பு மற்றும் பல சரும பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். இப்போது சுருட்டை முடியை மென்மையாக்குவதற்கான சில எளிய முறைகளைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷவர் குளியல்

ஷவர் குளியல்

தினமும் ஷவரில் குளிக்கும் போது, முடியானது சிக்கடையாமல் அடங்கியிருக்கும். அதிலும் தலைக்கு ஷாம்பு போட்டப் பின்னர், தலையை பின்புறம் சாய்த்து, ஓடும் நீரில் காட்டினால், முடியானது சிக்கடையாமல், இருக்கும்.

மாய்ஸ்சுரைசர்

மாய்ஸ்சுரைசர்

சுருட்டை முடி உள்ளவர்களது முடி விரைவில் வறட்சியடையும். அதற்காக ஒரே நேரத்தில் அதிகப்படியான எண்ணெய் தேய்க்காமல், லேசாக எண்ணெய் தேய்க்க வேண்டும். இல்லாவிட்டால், தலைக்கு குளிக்கும் போது முடிக்கு கெமிக்கல் அதிகம் இல்லாத அல்லது இயற்கை கண்டிஷனர்களை பயன்படுத்தினால், முடி நன்கு மென்மையுடன், பொலிவோடு இருக்கும்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

தலைக்கு குளித்தப் பின்னர், முடி ஓரளவு ஈரத்துன் இருக்கும் போதே, வேண்டிய ஸ்டைலில் முடியை சீவினால், முடியானது அடங்கியிருப்பதோடு, வறட்சியின்றி முடியும் மென்மையாக இருக்கும்.

தரமான பொருட்கள்

தரமான பொருட்கள்

விலை குறைவாக உள்ளது என்று முடிக்கு கண்ட கண்ட அழகுப் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. இதனால் முடியின் சுருட்டை, ஸ்கால்ப் போன்றவை தான் பெரிதும் பாதிக்கப்படும். ஏனெனில் இதில் கெமிக்கல்கள் அதிகம் இருப்பதால், அவை முடிக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கும். எனவே முடியின் மென்மை மற்றும் பொலிவை இழக்காமல் இருப்பதற்கு, நல்ல தரமான பொருட்களை எப்போதும் பயன்படுத்த வேண்டும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

தலைக்கு குளிக்கும் போது, முடியின் மென்மைத்தன்மையை அதிகரிப்பதற்கு, இறுதியில் 1 கப் வெதுவெதுப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து, தலைக்கு ஊற்றினால், முடி வறட்சியின்றி பட்டுப்போன்று இருக்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா ஒரு அல்கலைன். இதனை நீரில் கலந்து முடிக்கு தடவி, வெதுவெதுப்பான நீரில் அலசினால், முடிக்கு கண்டிஷனர் போட்டது போல் முடியானது மென்மையாக இருக்கும்.

இயற்கையாக உலர வைக்கவும்

இயற்கையாக உலர வைக்கவும்

தலைக்கு குளித்தால், முடியை உலர வைப்பதற்கு ஹேர் ட்ரையரை பயன்படுத்தக்கூடாது. இதனால் முடி உதிர்தல் தான் ஏற்படும். ஆகவே எப்போதும் முடியை இயற்கையாக உலர வைத்தால், முடியில் உள்ள இயற்கையான ஈரப்பசையானது முடியை வறட்சியடையச் செய்யாமல் பாதுகாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Keep Your Curls Soft & Shiny

Curly hair always goes with any trend and fashion in one way or the other. Moreover, if you have less hair or if your hair is limp, making curls will give a feeling of added volume. Here are some trouble-free and easy tips for you to keep your curls soft and shiny.
Story first published: Wednesday, June 5, 2013, 13:22 [IST]
Desktop Bottom Promotion