For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூந்தலை நீரில் அலசிய பின் தவிர்க்க வேண்டிய செயல்கள்!!

By Super
|

மென்மையான மற்றும் பட்டு போன்ற முடியை தான் அனைவரும் விரும்புகின்றனர். அவ்வாறான முடியை பெறுவதென்பது எளிதான காரியம் இல்லை. அதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பெரும்பாலானோர், என் கூந்தல் என் பேச்சை கேட்பதில்லை என்று வருந்துவதுண்டு. பொதுவாக அது அவ்வளவு எளிதான விஷயமில்லை என்றாலும், ஒழுங்கான முறையில் பராமரித்தால், கூந்தலை பட்டு போல் ஆக்கி விட முடியும். ஒருவேளை அதை கண்டு கொள்ளாமல் விட்டால், நீங்கள் தவறு செய்கின்றீர்கள் என்று அர்த்தம்.

கூந்தல் உதிர்தல், முடி வெடிப்பு போன்றவை கூந்தலை ஒழுங்காக பராமரிக்காத செயலின் விளைவாக ஏற்படுவதாகும். எனவே கூந்தலின் சிக்கலை போக்கி, அதை மென்மையாகவும், மிருதுவாகவும், உங்கள் சொல் பேச்சை கேட்கும் படியாகவும் ஆக்குவதற்கு, ஒருசில எளிய முறைகளை மேற்கொள்வதால் மாற்ற முடியும். அதிலும் இப்போது கூந்தலை நீரில் அலசிய பின் தவிர்க்க வேண்டிய சில செயல்களைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடிக்கடி சீவ வேண்டாம்

அடிக்கடி சீவ வேண்டாம்

கூந்தலை அடிக்கடி வாரினால் உதிரக்கூடும். ஆகவே அதெல்லாம் எதுவும் இல்லை என்றெண்ணி, அடிக்கடி கூந்தலை சீவி சேதப்படுத்தாமல் இருங்கள்.

அதிகமாக உலர்த்த வேண்டாம்

அதிகமாக உலர்த்த வேண்டாம்

கூந்தலை காய வைக்கும் கருவியை உபயோகித்து, கூந்தலின் அழகை கெடுத்துக் கொள்ள வேண்டாம். இதனால் கூந்தலுக்கு வெப்பத்தை ஏற்படுத்துகிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே இயற்கை முறையில் காய வைத்தாலே போதுமானது.

சரியான சீப்பை பயன்படுத்தவும்

சரியான சீப்பை பயன்படுத்தவும்

கூந்தலுக்கு ஏற்ற சீப்பை பயன்படுத்துங்கள். அதிலும் நைலான் அல்லது பிளாஸ்டிக் பொருளால் செய்யப்பட்ட சீப்பை பயன்படுத்தவும்.

உடனே வெளியே செல்ல வேண்டாம்

உடனே வெளியே செல்ல வேண்டாம்

சுருட்டை முடி உள்ளவர்கள், கூந்தலை அலசிய உடனே வெயிலில் செல்லக்கூடாது.

சிக்கெடுப்பதற்கு விரல்களை பயன்படுத்தவும்

சிக்கெடுப்பதற்கு விரல்களை பயன்படுத்தவும்

ஈரமான கூந்தலை சீப்பை கொண்டு சிகெடுக்காமல், கையின் உதவியை கொண்டு சீவ வேண்டும். இதன் மூலம் கேசத்திற்கு மசாஜ் செய்தது போல் இருக்கும்.

எண்ணெய் வேண்டாம்

எண்ணெய் வேண்டாம்

அதிகமாக எண்ணெய் தடவி, வெளி இடங்களுக்கு சென்றால், தலையில் அழுக்கு சேர்ந்து கூந்தல் உதிர ஆரம்பிக்கும். வேண்டுமென்றால் முதல் நாள் இரவில் எண்ணெய் தடவி, மறுநாள் காலையில் முடியை ஷாம்பு கொண்டு அலசும் பழக்கத்தை மேற்கொள்ளலாம்.

இறுக்கமான ரப்பர் பேண்ட் வேண்டாம்

இறுக்கமான ரப்பர் பேண்ட் வேண்டாம்

கூந்தலை இறுக்கி கட்டுவதே தவறு. அதிலும் இறுக்கமான பேண்ட்கள், அதை விட தவறு. இதனால் கூந்தல் முறியக்கூடும்.

பின்னல் வேண்டாம்

பின்னல் வேண்டாம்

ஈரமான கூந்தலை இறுக பின்ன வேண்டாம். இதனால் அவை உடைய கூடும். மேலும் உலர்த்திய பின் அலங்காரம் செய்யவும்.

சீப்பு பயன்படுத்த வேண்டாம்

சீப்பு பயன்படுத்த வேண்டாம்

ஈரமான முடிக்கு சீப்பு பயன்படுத்தும் முன், அகன்ற பற்களுடைய சீப்பு பயன்படுத்த வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

மசாஜ்கள் வேண்டாம்

மசாஜ்கள் வேண்டாம்

ஷாம்பு போட்டு மசாஜ் செய்வது மிகவும் தீங்கை ஏற்படுத்தும். ஏனெனில் கூந்தலானது ஈரமாக இருக்கும் போது பலவீனமாக இருக்கும் என்பதால், கூந்தல் காய்ந்த பின்னரே அதில் கையை வைக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things To avoid After Hair Wash

Hair fall, flakes, breakages, splits – are common if there is lack of care, post hair wash. Prevent your hair from damage and bid farewell to problematic and greasy hair.
Desktop Bottom Promotion