For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடர்த்தியான கூந்தலால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்!!!

By Ashok CR
|

பல பெண்களுக்கு அடர்த்தியான கூந்தல் வைத்துக் கொள்ள ஆசை இருக்கத் தான் செய்கிறது. ஆனால் அப்படி அடர்த்தியான கூந்தலால் பெண்கள் பல விதமான அவஸ்தைக்கு தினசரி ஆளாகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எலாஸ்டிக் பாண்ட் உடைவதிலிருந்து நீண்ட கூந்தலை சிக்கலெடுத்து நேராக்குவது வரை, பல வித அசௌகரியங்களை அடர்த்தியான கூந்தலுடைய பெண்கள் சந்திக்க வேண்டியுள்ளது. அப்படி பெண்கள் சந்திக்கும் தினசரி பிரச்சனைகளை பட்டியலிட்டுள்ளது huffingtonpost.com என்ற இணையதளம்:

- அடிக்கடி எலாஸ்டிக் பாண்ட் உடைந்து அல்லது அறுந்து போகும்.
- கூந்தலின் கணம் தலைவலியை உண்டாக்கலாம்.
- கூந்தலில் இருந்து சரியும் முடி, அடிக்கடி உங்கள் வாய் பக்கமாக சென்று தொந்தரவு செய்யும்.
- நீங்கள் காலையில் தலைக்கு குளித்தால் உங்கள் கூந்தலில் உள்ள ஈரம் இரவு வரை கூட நீடிக்கும்.
- கூந்தலை சிக்கலெடுத்து நேராக்குவதற்கு நீண்ட நேரம் எடுப்பதால் வியர்த்து விறுவிறுத்து போவீர்கள்.
- சிகை அலங்காரம் அல்லது கூந்தலை வெட்டுவதற்கு செல்லும் ஒவ்வொரு முறையும் உங்கள் ஹேர் டிரஸ்ஸர் உங்களுக்கு இவ்வளவு முடி இருப்பதை பற்றி விமர்சனம் செய்யாமல் இருக்க மாட்டார்.
- நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் போது உங்கள் கூந்தல் மட்டும் எடுத்த படத்திற்குள் அடங்க மறுக்கும்.

சரி, மேற்கூறிய பிரச்சனைகளை சந்திக்கும் பெண்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் கண்டிப்பாக நீங்கள் இந்த கூந்தல் பிரச்சனையில் இருந்து தீர்வு காண வேண்டும். அடர்த்தியான கூந்தல் என்பது கண்டிப்பாக உங்களுக்கு அழகை சேர்க்க தவறுவதில்லை. ஆனால் அதனுடன் சேர்ந்து பல தொந்தரவுகளும் இருக்கத் தான் செய்கிறது. உங்கள் நண்பர்கள் உங்கள் கூந்தலை கண்டு பொறாமை படுவார்கள்; நீங்கள் ஒரு அதிர்ஷ்டசாலி என்று புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால் அடர்த்தியான கூந்தலை பராமரிப்பதில் உள்ள உண்மையான கஷ்டங்கள் உங்களுக்கு மட்டும் தான் தெரியும்.

Thick Hair Problems In Women

அடர்த்தியான கூந்தலை கொள்ள எந்த பெண்ணுக்கும் ஆசை இருக்கத் தான் செய்யும். ஆனால் அடர்த்தியான கூந்தலில் அடிக்கடி சிக்கல் உண்டாகி உங்களை எரிச்சலடையச் செய்யும். உங்கள் ஹேர் ஸ்டைலிஸ்ட்டுக்கு கண்டிப்பாக நீங்கள் ஒரு சவாலாகத் தான் இருப்பீர்கள். அடர்த்தியான கூந்தலை சிகை அலங்காரம் செய்வது ஒன்றும் எளிய காரியம் இல்லை. அதற்கு அதிக உழைப்பை செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் அடர்த்தியான கூந்தலை உங்கள் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டுமா? அப்படியானால் கீழ்கூறிய டிப்ஸ்களை பின்பற்றி பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு நல்ல பலன் இருக்கும்.

ஸ்டைலான அடுக்குகள்

சிகை அலங்காரத்திற்கு செல்லும் போது லேயர் எனப்படும் அடுக்குகளில் கூந்தலை வெட்டுங்கள். அடர்த்தியான கூந்தல் பிரச்சனைகளை ஒரு வகையில் இது தீர்க்கும். இப்படி வெட்டுவதால் உங்கள் கூந்தல் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு நீளத்தில் இருக்கும். அதனால் உங்கள் கூந்தலின் கணம் குறையும். அது உங்களுக்கு வசதியாகவும் இருக்கும். அடர்த்தியான கூந்தல் இருந்தால் அடுக்குகள் போல் முடியை வெட்டினால் உங்களுக்கு தோதாக அது அமையும்.

என்ன ஷாம்பு வாங்க வேண்டும்?

கடைக்கு செல்லும் போது உங்கள் கூந்தலுக்கு எந்த ஷாம்பு ஒத்து வருமோ அதனையே வாங்குங்கள். அடர்த்தியான கூந்தல் வேண்டும் என நினைப்பவர்கள் பயன்படுத்தும் ஷாம்புவாகவும் அது இருக்கலாம். அடர்த்தியான கூந்தல் உடையவர்களுக்காக உள்ள ஷாம்புவை தேர்ந்தெடுங்கள். அப்படி செய்வதால் அடர்த்தியான கூந்தலால் ஏற்படும் பிரச்சனைகளை ஓரளவுக்கு சமாளிக்கலாம். அடர்த்தியான கூந்தல் உடையவர்கள் கூந்தல் பராமரிப்புக்கான பொருட்களை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அப்படி சரியாக தேர்ந்தெடுத்தால் உங்கள் கூந்தல் பிரச்சனைகளை அது பார்த்துக் கொள்ளும்.

கூந்தலை நீளமாக வளர்த்துக் கொள்ளுங்கள்

நீண்ட கூந்தல் பல விதமான கூந்தல் பிரச்சனைக்கு தீர்வாக அமையும். அடர்த்தியான கூந்தல் உடையவர்களின் கூந்தல் நீளம் குறைவாக இருந்தால் எண்ணிலடங்கா பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதனால் அப்படிப்பட்டவர்களின் கூந்தல் நீளமாக இருக்க வேண்டும். அதனால் பார்ப்பதற்கும் அது கூடுதல் அழகை சேர்க்கும். மேலும் உங்கள் முகத்தில் முடி விழுவதையும் அது தடுக்கும். மொத்தத்தில் இது பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.

துணிவு தேவை

அடர்த்தியான கூந்தலால் உங்களுக்கு பிரச்சனைகள் உண்டானால் நீங்கள் துணிந்து உங்கள் கூந்தலை ஸ்ட்ரெய்ட்டனிங் (நேராக்குதல்) செய்து கொள்ள வேண்டும். உங்கள் கூந்தல் சுருள்களை கட்டுப்பாட்டில் வைக்க இதனை நீங்கள் முயற்சி செய்து பார்க்க வேண்டும். ஸ்ட்ரெய்ட்டனிங் செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு பலவிதமான சிந்தனைகள் ஏற்படலாம். அப்படி செய்து முடித்த பின் நீங்கள் எப்படி காட்சி அளிப்பீர்கள் என்று பல எண்ணங்கள் தோன்றலாம். இருப்பினும் கூந்தலை ஸ்ட்ரெய்ட்டனிங் செய்து கொள்வதால் அடர்த்தியான கூந்தால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தீர்வு காணலாம்.

கூந்தலை சடை போட்டு பின்னிக் கொள்ளுங்கள்

கூந்தலை சடை போட்டு பின்னிக் கொண்டால் அதுவே உங்களுக்கு பெரிய நிவாரணியாக இருக்கும். அப்படி செய்வதால் தலை முடி முகத்திலும் வாயிலும் விழுவதை தவிர்க்கலாம். அழகை மேம்படுத்தும் ஸ்டைல் ஜெல் அல்லது ஹேர் ஸ்ப்ரே போன்றவைகளை பயன்படுத்தியும் கூந்தலை பராமரிக்கலாம். அடர்த்தியான கூந்தலால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பது என்பது கடினமான ஒன்று தான். ஆனால் சில டிப்ஸ்களை பின்பற்றினால் அதற்கான தீர்வை சுலபமாக பெறலாம். நீங்களும் அவைகளை பின்பற்றி மாற்றங்களை கண்டு ஆச்சரியப்படுங்கள்.

English summary

Thick Hair Problems In Women

Women like to have thick hair and that thick hair is always tangled which will get them irritated. When you go to a hair stylist, you can certainly be a challenge to her. Styling a thick hair is not that simple and requires a lot of effort. If you really want to tame your thick strands, try these! May be this will work out.
Story first published: Wednesday, December 11, 2013, 16:06 [IST]
Desktop Bottom Promotion