For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரச்சனை இல்லா கூந்தல் வேண்டுமா? முல்தானி மெட்டி ஹேர் பேக் போடுங்க...

By Maha
|

பொதுவாக முல்தானி மெட்டியை சரும பராமரிப்பில் தான் பயன்படுத்துவோம். அதிலும் முகப்பரு பிரச்சனைகள் இருக்கும் போது, சருமத்திற்கு முல்தானி மெட்டி கொண்டு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் உள்ள பருக்கள் நீங்குவதோடு, சருமமும் பொலிவோடு பட்டுப் போன்று இருக்கும். அக்காலத்தில் முல்தானி மெட்டியை ரோமானிய மக்கள் சுத்தப்படுத்தும் பொருளாகப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது அந்த முல்தானி மெட்டி மிகவும் பிரபலமான பல சரும பிரச்சனைகளைப் போக்க வல்ல ஒரு அழகு சாதனப் பொருள்.

இத்தகைய முல்தானி மெட்டி சருமத்தை அழகாக்குவதற்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. அதிலும் பல்வேறு கூந்தல் பிரச்சனைகளைப் போக்க வல்லது. குறிப்பாக பொடுகு, முடி வெடிப்பு போன்றவற்ற தடுப்பதில் பெரிதும் உதவியாக உள்ளது. சரி, இப்போது கூந்தல் பிரச்சனைகளுக்கு எந்த மாதிரியான முல்தானி மெட்டி ஹேர் பேக் போடுவது என்று பார்ப்போம்.

Multani Mitti For Hair Care

முடி வெடிப்புக்கு...

இரவில் படுக்கும் போது தலைக்கு எண்ணெய் வைத்து நன்கு ஊற வைக்க வேண்டும். பின் காலையில் எழுந்து சுடுநீரில் நனைத்த துணியால் தலையைச் சுற்றி 10 நிமிடம் ஊற வைத்து, துணியை நீக்கி விட வேண்டும். அடுத்து முல்தானி மெட்டி மற்றும் தயிரை சரிசமமாக எடுத்துக் கொண்டு கலந்து, அதனை கூந்தலில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, இறுதியில் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால், நாளடைவில் முடி வெடிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

வறட்சியான முடிக்கு...

4 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியில், 1/2 கப் தயிர், பாதி எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, கூந்தலில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

எண்ணெய் பசை முடிக்கு...

ஒரு பௌலில் முல்தானி மெட்டி பொடியைப் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி கலந்து 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் பூந்திக் கொட்டை பொடி சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊற வைத்து, இறுதியில் கூந்தலில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் நன்கு அலச வேண்டும். இதானல் கூந்தலில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கிவிடும்.

நேரான முடி ஆக்குவதற்கு...

சுருட்டை முடி உள்ளவர்களுக்கு நேரான முடியின் மீது ஆசை அதிகம் இருக்கும். ஆகவே அப்படி இயற்கை முறையில் கூந்தலை நேராக்குவதற்கு, ஒரு கப் முல்தானி மெட்டி பொடி, 5 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1 முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் கூந்தலை சீப்பு கொண்டு ஒருமுறை வாரி, பின் அதில் முல்தானி மெட்டி பேக்கை தடவி நன்கு உலர வைத்து, இறுதியில் நீரில் அலசி, ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனை வாரம் ஒரு முறை செய்து வந்தால், சுருட்டை முடியானது நீங்கி, நேரான முடியைப் பெறலாம்.

English summary

Multani Mitti For Hair Care

Here are a few ways in which you can use Multani mitti for hair care. So, get ready to make your hair beautiful and shiny, the natural way!
Story first published: Thursday, November 7, 2013, 16:41 [IST]
Desktop Bottom Promotion