For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொடுகுத் தொல்லையை தடுப்பதற்கான சில டிப்ஸ்...

By Maha
|

சிலரது கைகள் எப்போது பார்த்தாலும் தலையில் தான் இருக்கும். அதுமட்டுமல்லாமல், ஸ்கால்ப்பில் ஏற்படும் அரிப்புகளால், பலரது தலையில் நகங்களின் மார்க்குகள் இருக்கும். இவ்வாறு எந்நேரமும் தலையில் கையை வைத்துக் கொண்டிருந்தால், அதை மற்றவர்கள் பார்க்கும் போது, அவர்களுக்கு நம்மீது ஒருவித கெட்ட எண்ணம் தான் எழும். ஆகவே எப்போதும் கூந்தலை சரியான முறையில் பராமரித்து வர வேண்டும்.

பொதுவாக தலையில் அரிப்பு ஏற்படுவதற்கு காரணம் வறட்சியான ஸ்கால்ப் மற்றும் அதனால் ஏற்படும் பொடுகு போன்றவை தான். இத்தகைய பொடுகு தலையில் வந்துவிட்டால், பேன் அதிகரிப்பதோடு, கூந்தல் உதிர்தலும் அதிகரிக்கும். எனவே கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பை சரியான முறையில் பராமரிப்பது இன்றியமையாத ஒன்றாகும்.

மேலும் கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பை பராமரிப்பதற்கு நிறைய இயற்கை பொருட்கள் வீட்டில் உள்ளன. இத்தகைய இயற்கைப் பொருட்கள், வறட்சியைத் தடுப்பதுடன், பொடுகுத் தொல்லை, பேன் மற்றும் கூந்தல் உதிர்தலையும் தடுத்து, கூந்தலை ஆரோக்கியமாக வளர்ச்சியடையச் செய்யும்.

சரி, இப்போது பொடுகுத் தொல்லையைப் போக்கும் சில வீட்டுப் பொருட்களைப் பார்ப்போம். அவற்றை படித்து, அதனை முயற்சி செய்து பாருங்கள். ஏனெனில் தலையில் பொடுகு அதிகமாக இருந்தால், பின் வழுக்கை தலையை அடைய நேரிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவகேடோ

அவகேடோ

பொடுகுத் தொல்லையைப் போக்குவதில் அவகேடோ எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு 1/2 கப் அவகேடோ எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, சிறிது தண்ணீர் சேர்த்து, ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவகேடோ எண்ணெயை, யூகலிப்டஸ் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளிக்கலாம்.

டீ-ட்ரீ ஆயில் (Tea tree oil)

டீ-ட்ரீ ஆயில் (Tea tree oil)

இந்த எண்ணெயில் பொடுகைப் போக்கும் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே 1 கப் டீ ட்ரீ ஆயில் மற்றும் லாவெண்டர் எண்ணெயை எடுத்துக் கொண்டு, அதனை ஸ்கால்ப்பில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து , வெதுவெதுப்பான நீரில் அலசினால், பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

உடலின் பல பிரச்சனைகளை போக்கும் தன்மையுடைய ஆலிவ் ஆயில், பொடுகுத் தொல்லையைப் போக்கும் தன்மையுடையது. ஆகவே தினமும் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயிலை ஸ்கால்ப்பில் தடவி, நன்கு மசாஜ் செய்து, மறுநாள் காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் அலசினால், கூந்தல் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

எலுமிச்சை

எலுமிச்சை

சிட்ரஸ் பழமான எலுமிச்சையில் எண்ணற்ற அளவில் கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அதிலும் பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு, எலுமிச்சை துண்டை பாதிக்கப்பட்ட பகுதியில் தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு போடாமல் அலச வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பொடுகு உடனே நீங்க வேண்டுமெனில், குளிக்கும் போது ஷாம்புவில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து குளித்தால், பொடுகு உடனே போய்விடும்.

வெந்தயம்

வெந்தயம்

வெந்தயத்தை பொடி செய்து, அதனை ரோஸ்மேரி எண்ணெயுடன் சேர்த்து சீற்று நீராக கலந்து, ஸ்காப்பில் தடவி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஷவர் கேப் கொண்டு மூடி ஊற வைத்து, தலையை அலசினால், பொடுகு நீங்கிவிடும்.

கற்றாழை

கற்றாழை

எந்த ஒரு கூந்தல் பிரச்சனைக்கும் கற்றாழை ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்ட பொருள். அதிலும் பொடுகு பிரச்சனை இருந்தால், கற்றாழை ஜெல்லை ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளித்தால், பொடுகு நீங்குவதோடு, கூந்தலும் நன்கு பட்டுப் போன்று இருக்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

சூடான தேங்காய் எண்ணெயும் பொடுகுத் தொல்லையைப் போக்கும். அதற்கு தேங்காய் எண்ணெயை சூடு தாங்கும் நிலைக்கு சூடேற்றி, அதனை ஸ்கால்ப்பில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

தேன் மாஸ்க்

தேன் மாஸ்க்

தேன், வாழைப்பழம் மற்றும் அரைத்த வெங்காய விழுது ஆகியவற்றை கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு குளித்தால், ஸ்கால்ப் சுத்தமாக இருப்பதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக பொலிவோடு காணப்படும்.

தயிர்

தயிர்

தயிரை முட்டையின் வெள்ளைக்கருவுடன் சேர்த்து கலந்து, தலைக்கு போட்டால் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். அதிலும் இந்த முறையை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்து வர வேண்டும். இதனால் முடி நன்கு பட்டுப் போன்று மின்னும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Itchy Scalp? Try These Home Remedies

Below are some of the home remedies for itchy scalp. Do not linger into this problem for it could lead to a lot more hair problems which you will not be able to handle later on.
Story first published: Thursday, July 11, 2013, 13:01 [IST]
Desktop Bottom Promotion