For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் முத்தான இந்திய எண்ணெய்கள்!!!

By Maha
|

இந்திய மக்களுக்கு அழகே கருமையான முடி தான். அத்தகைய முடி தற்போது பொலிவிழந்து, நிறத்தை இழந்து வருகிறது. ஏனெனில் சூரியக்கதிர்களின் தாக்கம் கடுமையாக இருப்பதால், முடிக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் நிறத்தை இழக்கிறது. எனவே முடிக்கு அவ்வப்போது பாதுகாப்பு தர வேண்டியது ஒவ்வொருவரின் முக்கியமான கடமையாகும். அதுமட்டுமின்றி அவ்வாறு சரியான பாதுகாப்பு கொடுக்காவிட்டால், முடி உதிர்தல் ஏற்பட்டு, நாளடைவில் வழுக்கையை அடைய நேரிடும்.

ஆகவே முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய்களை பயன்படுத்துவது நல்லது. அதுவும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய் நிறைய இருப்பினும், ஒருசில இந்திய எண்ணெய்களும் முடியை நம்ப முடியாத வகையில் ஆரோக்கியத்துடன் வைக்கிறது. அத்தகைய எண்ணெய்கள் முடி வளர்ச்சியுடன், முடியின் கருமை நிறத்தையும் பாதுகாப்பதோடு, அதிகரிக்கவும் செய்கிறது. மேலும் தலையில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையையும், இந்திய எண்ணெய்கள் சரிசெய்யக்கூடிய வகையில் அதற்கு சக்தி உண்டு. இந்த எண்ணெய்கள் பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் தான்.

அத்தகைய இந்திய எண்ணெய்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதை படித்து தெரிந்து கொண்டு, வாரத்திற்கு ஒரு முறை ஆயில் மசாஜ் செய்து, முடியை மட்டுமின்றி, உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெல்லிக்காய் எண்ணெய்

நெல்லிக்காய் எண்ணெய்

நெல்லிக்காயில் முடியின் இயற்கை தன்மையை பாதுகாக்கும் சக்தி அதிகம் உள்ளது. அதிலும் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், அது ஒரு ஹேர் கண்டிஷனர் போன்று இருப்பதோடு, முடியின் கருமையையும் அதிரிக்கும்.

செம்பருத்தி எண்ணெய்

செம்பருத்தி எண்ணெய்

செம்பருத்தி எண்ணெய் முடியின் நிறத்தையும் தரத்தையும் பாதுகாக்கும். அதுமட்டுமின்றி சூரியக்கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுக்கும். மேலும் நரை முடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த எண்ணெய் ஒரு சிறந்த பலனைத் தரக்கூடியது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

இந்தியாவில் உள்ள பலர் முடிக்கு பயன்படுத்துவது தேங்காய் எண்ணெய் தான். இது முடிக்கு பொலிவைத் தருவதோடு, மயிர்க்கால்களை வலுவாக்கி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. அது அடர்த்தி குறைத்த எண்ணெய் தான். இதனை தினமும் பயன்படுத்தினால், முடியின் வளர்ச்சி அதிகமாக இருப்பதோடு, அடத்தியாகவும் இருக்கும்.

மருதாணி எண்ணெய்

மருதாணி எண்ணெய்

மருதாணி எண்ணெய் ஒரு நேச்சுரல் கண்டிஷனர் மற்றும் பொடுகுத் தொல்லையை நீக்கக்கூடியது. எனவே முடி நன்கு பட்டுப் போன்றும், பொலிவோடும், பொடுகுத் தொல்லையின்றியும் இருக்க வேண்டுமெனில், அதற்கு மருதாணி எண்ணெய் பயன்படுத்துவது நல்லது.

யூகலிப்டஸ் எண்ணெய்

யூகலிப்டஸ் எண்ணெய்

பொதுவாக யூகலிப்டஸ் எண்ணெயை உடல் மசாஜிற்கு தான் பயன்படுத்துவோம். ஆனால் அந்த எண்ணெய் கொண்டு தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், பொடுகு வராமல் தடுப்பதோடு, மற்ற ஸ்கால்ப் பிரச்சனைகளும் நீங்கும்.

நல்லெண்ணெய்

நல்லெண்ணெய்

பெரும்பாலான இந்திய கிராமங்களில் இன்றும் நல்லெண்ணெயைத் தான் முடிக்கு பயன்படுத்துகிறார்கள். எனவே தான் கிராம மக்களின் முடி மிகவும் நீளமாகவும், அடர்த்தியாகவும், கருமையுடனும் இருக்கிறது. ஏனெனில் இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்தினால், மயிர்க்கால்கள் நன்கு சுவாசிப்பதோடு, மயிர்த்துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி, முடியின் வளர்ச்சி அதிகமாகும்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்

இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்கள் இந்த எண்ணெயைத் தான் பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த எண்ணெயைக் கொண்டு, தலை மற்றும் உடலுக்கு மசாஜ் செய்தால், இரத்த ஓட்டம் தலை மற்றும் உடலில் சீராக இருப்பதோடு, முடியும் நன்கு புத்துணர்ச்சியுடன் நீளமாகவும், கருமையாகவும் வளரும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய் பொதுவாக சமையலில் தான் பயன்படுத்துவோம். இந்த எண்ணெய் அடத்தியாக இருக்கும். அத்தகைய எண்ணெயை தலைக்கு பயன்படுத்தினால், முடியில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து முடிக்கு சரியான பாதுகாப்பு கிடைக்கும்.

பிரமி எண்ணெய்

பிரமி எண்ணெய்

ஆயுர்வேத எண்ணெயான பிரமி எண்ணெய் முடி மற்றும் உடலுக்கு நன்மையைத் தரக்கூடியது. அதிலும் இதனைக் கொண்டு, தலைக்கு மசாஜ் செய்தால், மயிர்க்கால்கள் வலுவோடும், ஸ்கால்ப்பானது குளிர்ச்சியுடனும் இருக்கும். மேலும் இது பொடுகுத் தொல்லையை நீக்கக்கூடியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian Oils For Hair Growth n Colour | முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் முத்தான இந்திய எண்ணெய்கள்!!!

A regular oil massage for the scalp and hair can bring deep seated change sin your hair quality. So try using these Indian hair oils for hair growth and nourishment.
Desktop Bottom Promotion