For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இயற்கையான முறையில் தலைமுடி உதிர்வை தடுப்பது எப்படி...?

By Ashok CR
|

இன்று மாறி வரும் சமுதாய சூழலில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகளில் ஊட்டச்சத்து குறைவாகவே உள்ளது. நமது உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்து நாம் உட்கொள்ளும் உணவில் தான் இருகின்றது. அதனால், ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை சாப்பிடுவதோடு மட்டுமல்லாது நமது உடல் நல பராமரிப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதன் மூலமாக, நமது சருமத்திற்கும் உடலுக்கும் ஏற்படும் நோய்களில் இருந்து விலகி இருக்கலாம்.

தலைமுடி உதிர்வு என்னும் கொடுமையான விஷயம் எவருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். மாசு படிதல், சுகாதாரமற்ற வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களின் காரணமாக முடி உதிர்வு, கரடுமுரடான வறண்ட முடி போன்ற தலைமுடிப் பிரச்சனைகள் உருவாகுகின்றது. உங்கள் முடி வலுவானதாகவும் பளபளப்பாகவும் மாறுவதற்கு நீங்கள் உங்கள் தலைமுடியை கவனமாக பராமரிக்க வேண்டும்.

தலைமுடி உதிர்வு என்பது நாம் சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாகும். பொடுகு, வறண்ட தலைமுடி, தலைமுடி அலசுவதற்கு கடின நீர் உபயோகப்படுத்துவது, தலைமுடி பராமரிப்பின்மை போன்றவை முடி உதிர்வு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக இருப்பவை. முடி உதிர்விற்கு சிகிச்சை அளிக்க பல இரசாயன ஷாம்புக்களும் சீரம்களும் உள்ளன. ஆனால், இந்த இரசாயன சிகிச்சைகள் உடனடியாக செயல்படக்கூடியவை என்றாலும் சிறிது காலம் மட்டுமே தக்கவைப்பவை. மேலும் இந்த இரசாயனங்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தி உங்கள் தலைமுடிக்கு அதிக தீங்கு விளைவிக்கும்.

இயற்கையான முறையில் முடி உதிர்வை தடுப்பது எப்படி என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். முடியுதிர்வை தடுப்பதற்கு ஏராளமான இயற்கையான சிகிச்சை முறைகள் உள்ளன. அவைகளால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. இயற்கை முறையிலான சிகிச்சைகளின் முடிவுகள் தெரிவதற்கு சிறிது காலம் எடுத்தாலும் அவை நீண்ட காலம் நீடித்து நிரந்தரமாக இருக்கும். இயற்கையான முறையில் உங்கள் தலைமுடி உதிர்வை தடுப்பதற்கான சில வழிகளை இப்பொழுது படிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூடான எண்ணெய் மசாஜ்

சூடான எண்ணெய் மசாஜ்

சூடான எண்ணெய் மசாஜை வழக்கமாக செய்வது தலைமுடி உதிர்வை தடுபதற்கான சிறந்த வழியாகும். சூடான எண்ணெய் மசாஜ் செய்வது என்பது இயற்கையான முறையில் தலைமுடி உதிர்வை தடுப்பதற்கான வழிகளில் ஒன்றாகும். இது எல்லா பழுதடைந்த முடிகளையும் நீக்கி உங்கள் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றது. சூடான எண்ணெய் மசாஜ் உங்கள் தலைமுடியை வலுவடையச் செய்து தலைமுடி உதிர்வதை தடுக்கின்றது. உங்கள் தலைமுடிக்கு வாரம் ஒரு முறையாவது சூடான எண்ணெய் மசாஜ் தேவைப்படுகின்றது.

தேங்காய் பொருட்கள்

தேங்காய் பொருட்கள்

தேங்காய் அதிக ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பழம் ஆகும். இதில் ஏராளமான சுகாதார பலன்கள் நிறைந்துள்ளது. அதில் ஒன்றுதான் வறண்ட முடிக்கு ஊட்டமளிப்பது ஆகும். தேங்காயில் இருந்து கிடைக்கும் தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பால் இரண்டுமே இயற்கையான முறையில் முடி உதிர்வு பிரச்சனைகளின் சிகிச்சைக்கு பயனுள்ளதாக இருக்கும். இது தலைமுடிக்கு ஊட்டமளித்து அதனை மென்மையானதாகவும் வலுவானதாகவும் ஆக்குவதற்கு உதவி புரியும். அதனால், இயற்கையான முறையில் முடியுதிர்வை தடுக்க தேங்காய் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை இயற்கையான முறையில் முடி உதிர்வு சிகிச்சைக்கு பயன்படும் மிகவும் பயனுள்ள செடியாகும். இதனை உங்கள் தோட்டத்தில் எளிதாக வளர்க்கலாம். கற்றாழையை பொடியாகவோ அல்லது பேஸ்டாகவோ பயன்படுத்தலாம். இந்த பேஸ்ட்டை உங்கள் தலை முடியில் தடவி 15-30 நிமிடங்களுக்கு காய விடவும். கற்றாழை உங்கள் முடி திசுக்களை வலுவடையச் செய்து வளர்வதற்கும் உதவி புரியும். கற்றாழையை வாரத்திற்கு இரு முறை பயன்படுத்தலாம். உங்கள் முடிக்கு எவ்வித பக்க விளைவுகளையும் விளைவிக்காது. அதனால், கற்றாழை முடியுதிர்வை தடுக்கும் இயற்கையான வழியாகும்.

இயற்கையான ஹேர் மாஸ்க்

இயற்கையான ஹேர் மாஸ்க்

சிறந்த பலன்களை அளிக்க தலைமுடி மாஸ்க்குகளை உபயோகப்படுத்தலாம். இந்த முடி மாஸ்கை வாரத்திற்கு ஒரு முறை உபயோகித்து வந்தால், கணிசமான வேறுபாடுகளை நீங்கள் பார்க்க முடியும். இந்த முடி மாஸ்க்குகளை வீட்டில் உள்ள பொருட்களான மருதாணி, கற்றாழை, தயிர், வேம்பு மற்றும் முடிக்கு பயனளிக்கும் இதர இலைகளை கொண்டு தயாரிக்கலாம். இந்த முடி மாஸ்க்குகள் முடி வெடிப்பை தடுத்து, அதன் வேர்களுக்கு ஊட்டமளிப்பதால், இது முடி உதிர்வு பிரச்சனைகளுக்கான சிகிச்சைகளுக்கு பயனுள்ளதாக இருகின்றது.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் உள்ள தன்மைகள் உங்கள் முடியின் வேர் முதல் நுனிவரை வலுவடையச் செய்து, ஊட்டமளித்து, பாதுகாத்து உங்கள் முடியை மென்மையாக்குகின்றன. நெல்லைகாயின் சாற்றை உங்கள் முடியில் தடவி 10-15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர், குளிர்ந்த நீரால் அலசவும். இதனை வாரம் ஒரு முறையேனும் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முடி உதிர்வில் மாற்றம் தெரியும். எண்ணெய், தலைமுடி பேக் போன்றவற்றிலும் நெல்லிக்காயை உபயோகிக்கலாம். நெல்லிக்காயை உங்கள் அன்றாட உணவில் சேர்த்து வந்தால் உங்கள் தலைமுடி நல்ல தரத்துடன் விளங்கும்.

இவை அனைத்தும் இயற்கையான முறையில் முடி உதிர்வை தடுக்கும் சில டிப்ஸ். இதனை பின்பற்றி உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Prevent Hair Loss Naturally

There are many natural remedies for hair loss. They do not have any side effects. Though natural treatments take a long time to show results, but the results are long term and permanent. Below are a few ways that show how to prevent hair loss naturally.
Story first published: Wednesday, November 27, 2013, 10:23 [IST]
Desktop Bottom Promotion