For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடி கொட்டுவதைத் தடுக்கும் இயற்கை பொருட்கள்!!!

By Maha
|

எவ்வளவு தான் கூந்தல் உதிர்தலுக்கான இயற்கை பொருட்களைப் பற்றி பார்த்தாலும், அவற்றில் ஒருசில பொருட்கள் தான் கூந்தல் உதிர்தலுக்கு சிறந்ததாக உள்ளது. அப்படி கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் ஒருசில சிறப்பான பொருட்களைத் தான் தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக கொடுத்துள்ளது. பொதுவாக கூந்தல் உதிர்தலுக்கு சத்துக்கள் உடலில் இல்லாவிட்டாலோ அல்லது போர் தண்ணீர் போன்றவை காரணமாக இருக்கலாம். அதே சமயம் பருவநிலை மாற்றத்தினால் கூட கூத்தல் உதிர ஆரம்பிக்கும் என்பது தெரியுமா?

தற்போது நிறைய மக்கள் ஃபேஷன் என்ற பெயரில் கூந்தலை விரித்துப் போட்டு, சரியாக எண்ணெய் தடவாமல், மொத்தத்தில் கூந்தல் இருக்கும் போது சரியாக பராமரிக்காமல், கூந்தல் அதிகம் உதிர ஆரம்பித்து, வழுக்கை ஆகும் நிலையில் தான் பல்வேறு பராமரிப்புக்களை மேற்கொள்வார்கள். அப்படி வழுக்கை வரும் வரை காத்திருப்பதற்கு, கூந்தல் உதிர ஆரம்பிக்கும் போதே, சரியாக பராமரித்து வந்தால், கூந்தல் உதிர்தல் நிற்பதோடு, கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

சரி, இப்போது கூந்தல் உதிர்தலைத் தடுக்க உதவும் சில சிறப்பான பொருட்களைக் கொண்டு எப்படி கூந்தலைப் பராமரிப்பது என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெல்லிக்காய்

நெல்லிக்காய்

எப்போதுமே கூந்தல் உதிர்தலுக்கு நெல்லிக்காய் தான் சிறந்த பொருள். அதனால் தான் எந்த ஒரு கூந்தல் உதிர்தலைத் தடுக்க உதவும் செய்தியைப் படித்தாலும், அதில் நெல்லிக்காய் தவறாமல் வருகிறது. அதிலும் நெல்லிக்காய் பொடியை தண்ணீர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி உலர வைத்த, சுத்தமான நீரில் அலசினால், கூந்தல் உதிர்தல் குறையும்.

லெட்யூஸ்

லெட்யூஸ்

லெட்யூஸ் கீரையை அரைத்து, அதன் சாற்றினை தலையில் தடவி மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலசினால், கூந்தல் உதிர்வதைத் தடுக்கலாம்.

மருதாணி

மருதாணி

நெல்லிக்காய்க்கு அடுத்தப்படியான பொருள் என்றால் அது மருதாணி தான். மருதாணியை மாதத்திற்கு ஒரு முறை கூந்தலுக்கு பயன்படுத்தி வந்தால், மயிர்கால்கள் வலுவடைந்து, கூந்தல் உதிர்வது தடைபடும்.

வெங்காயம்

வெங்காயம்

சொன்னால் நம்பமாட்டீர்கள், வெங்காயத்தின் சாற்றினைக் கொண்டு ஸ்காப்பை மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், அதில் உள்ள சல்பர் மயிர்கால்களை வலுவுடன் இருக்கச் செய்யும்.

தேங்காய் பால்

தேங்காய் பால்

தேங்காய் பால் கூட கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் தன்மை கொண்டவை. அதற்கு தேங்காய் பாலைக் கொண்டு நன்கு தலையை மசாஜ் செய்து 1/2 மணிநேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

பால்

பால்

பாலை தலைக்கு பயன்படுத்த பலர் பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் பாலைக் கொண்டு தலையை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து நன்கு நீரில் அலச வேண்டும். இந்த முறையை ஒரு மாதத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயை கூந்தல் உதிர ஆரம்பிக்கும் போது பயன்படுத்தினால், அது முடி உதிர்வதை உடனே நிறுத்திவிடும். மேலும் இந்தியாவின் பெரும்பாலான பகுதியில் உள்ளோர் இந்த கடுகு எண்ணெயைத் தான் கூந்தலுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

காபி

காபி

ப்ளாக் காபியைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து நீரில் அலச வேண்டும். இந்த முறையை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.

முட்டை

முட்டை

முட்டையின் மஞ்சள் கரு கூந்தலை வலுவாக்கும். ஆகவே அதனை நல்லெண்ணெயுடன் சேர்த்து நன்கு அடித்து, தலைக்கு தடவி ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

பாதாம்

பாதாம்

பாதாமை பொடி செய்து, அதனை பால் சேர்த்து கலந்து கூந்தலுக்கு மாஸ்க் போடலாம் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு நன்கு தலையை மசாஜ் செய்து வந்தாலும், கூந்தல் உதிர்வது குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies For Hair Loss: Prevention

There are more than a million home remedies one would tell you to apply to your hair when it comes to preventing hair loss. But, what if Boldsky told you that out of this million home remedies, there are only a hand picked ones which will truly work for you. Take a look at these easily available home remedies for hair loss that have been provided to you.
Story first published: Saturday, December 7, 2013, 13:30 [IST]
Desktop Bottom Promotion