For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைமுடி பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காண வேண்டுமா? இதைப் படிங்க...

By Boopathi Lakshmanan
|

ஒரு காலத்தில் மிகவும் ஸ்டைலாக செழித்து வளர்ந்த உங்கள் முடியை, மோசமான நிலையில் பார்க்க உங்களுக்கு எப்பொழுதும் சகிக்க முடியாததாக இருக்கும். ஏனெனில், அந்த ஆரோக்கியமான மற்றும் அழகிய முடி உங்கள் அழகுக்கு மணிமகுடமாக இருந்திருக்கும். அழகிய முகவெட்டும், வசீகரமான உடல் கட்டும் உடைய ஒரு பெண்ணை, பிரச்னைக்குரிய தலைமுடியுடன் கற்பனை செய்து பாருங்கள். பெரும்பாலானவர்கள் முதலில் கண்டறிவது சரியில்லாத விஷயங்களையே!

இது போன்ற சோர்வான, உயிரோட்டமில்லாத, மெல்லிய முடி மற்றும் பல்வேறு வகையான தலைமுடி தொடர்பான பிரச்னைகளை தீர்க்கும் வழிமுறைகளை இங்கே நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த வழிமுறைகள் உறுதியான, மொத்தமான மற்றும் பயன்படுத்த மிகவும் ஏற்ற வகையிலான தலைமுடியை உங்களுக்கு உருவாக்க மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்.

இந்த வழிமுறைகளால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. அதே சமயம், இவை குறைந்த செலவில் செய்யக் கூடியவையாகவும் உள்ளன. இதற்கு பியூட்டி பார்லர்களில் செலவிடும் வகையிலான அதிக பணமோ அல்லது நேரமோ இந்த வழிமுறைகளுக்கு தேவையில்லை என்பது நல்ல விஷயம் தானே!

தலைமுடியை பாதுகாக்கும் இந்த வழிமுறைகளை தெரிந்து கொண்டு, அவை உங்களுடைய தலைமுடியில் எப்படிப்பட்ட நல்ல வகையான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை கண்டறியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூடான எண்ணெய் சிகிச்சை

சூடான எண்ணெய் சிகிச்சை

பொருட்கள்:

ஏதாவதொரு இயற்கை எண்ணெய் - ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்

வழிமுறை:

1. மேற்கண்ட எண்ணெய்களை சற்றே சூடுபடுத்த வேண்டும்.

2. பின் அதனை தலையில் வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.

3. ஒரு இரவு முழுவதுமோ அல்லது ஒரு மணி நேரமோ அப்படியே விட்டு விட்டு, அதன் பிறகு ஷாம்பு போட்டு குளிக்கவும்.

தேங்காய் பால் சிகிச்சை

தேங்காய் பால் சிகிச்சை

பொருட்கள்:

தேங்காயை உரித்து நன்றாக அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.

வழிமுறை:

1. தலையில் சிறிதளவு தேங்காய் பாலை எடுத்து மசாஜ் செய்வது போல் தடவி விட்டு, மீதமுள்ளதை முடியின் கால்கள் வரை செல்லுமாறு செய்யவும்.

2. 1-2 மணிநேரங்களுக்கு அப்படியே விட்டு விட்டு, பின்னர் முழுமையாக கழுவி விடவும்.

கடுகு மற்றும் மருதாணி இலைகள்

கடுகு மற்றும் மருதாணி இலைகள்

பொருட்கள்:

கடுகு எண்ணெய் மற்றும் மருதாணி இலைகள்

வழிமுறை:

1. கடுகு எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன் சிறிது மருதாணி இலையை போட்டு வரவும். அது எண்ணெயுடன் நன்கு சேரும் வரை நன்கு கலக்க வேண்டும்.

2. சுத்தமான துணியை கொண்டு இந்த எண்ணெயை வடிகட்டவும்.

3. பின் இந்த எண்ணெயைக் கொண்டு தினமும் தலையில் மசாஜ் செய்து வந்தால், முடியானது நன்கு வளரும்.

எலுமிச்சை சிகிச்சை

எலுமிச்சை சிகிச்சை

பொருட்கள்:

சர்க்கரை, எலுமிச்சை சாறு, தண்ணீர்

வழிமுறை:

1. பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாற்றை, சர்க்கரையுடன் சேர்த்து தண்ணீர் உள்ள பாத்திரத்தில் கலக்கவும்.

2. பின் பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த சாற்றை தடவி விட்டு, 15 நிமிடங்களுக்கு காத்திருக்கவும்.

3. பின்னர் அந்த பகுதியை நன்றாக தேய்த்து, குளுமையான நீரில் சுத்தமாக அலசி கழுவவும்.

கடலை மாவு மற்றும் தயிர் கலவை

கடலை மாவு மற்றும் தயிர் கலவை

பொருட்கள்:

கடலை மாவு, மஞ்சள் தூள், தயிர்

வழிமுறை:

1. மஞ்சள் தூள், கடலை மாவு மற்றும் தயிரை சேர்த்து ஒரு பேஸ்ட் தயார் செய்யவும்.

2. பின் இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விட்டு, அதனை உலர வைக்கவும்.

3. பேஸ்ட் காய்ந்தவுடன், அந்த இடத்தை தண்ணீர் சேர்த்து மென்மையாக தேய்த்து கழுவவும்.

4. நன்கு கழுவியவுடன், அந்த இடத்தை சற்றே ஈரப்பதமாக வைக்கவும்.

எலுமிச்சை மற்றும் தேன்

எலுமிச்சை மற்றும் தேன்

பொருட்கள்:

எலுமிச்சை மற்றும் தேன்

வழிமுறை:

1. எலுமிச்சை மற்றும் தேனை சரிசமமாக எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.

2. இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விட்டு, 10-15 நிமிடங்கள் காத்திருக்கவும்.

3. குளிர்ச்சியான தண்ணீரில் கழுவவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை

பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை

வழிமுறை:

1. தேங்காய் எண்ணெயை, எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலக்கி, இந்த கலவையை தலையில் தடவவும்.

2. 10-15 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர், நன்கு நீரில் அலச வேண்டும்.

நெல்லிக்காய் சிகிச்சை

நெல்லிக்காய் சிகிச்சை

பொருட்கள்:

நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்

வழிமுறை:

1. தேங்காய் எண்ணெயில் சிறிது நெல்லிக்காய் துண்டுகளை போட்டு, அவை கருமை நிறமடையும் வரையிலும் வேக வைக்கவும்.

2. பின் இதனை தலையில் தடவி விட்டு, பின்னர் தலைமுடியை சுத்தமாக கழுவி விடவும்.

கறிவேப்பிலை இலை சிகிச்சை

கறிவேப்பிலை இலை சிகிச்சை

பொருட்கள்:

அரைக்கப்பட்ட கறிவேப்பிலை இலைகள் மற்றும் தேங்காய் எண்ணெய்

வழிமுறை:

1. 7-8 கறிவேப்பிலை இலைகளை எடுத்து அரைத்து, அதனுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெயை விட்டு சூடுப்படுத்தவும்.

2. இந்த கலவையை நன்றாக கலக்கி, சற்றே வெதுவெதுப்பான நிலையில் தலையில் தடவி, 1 மணிநேரத்திற்கு ஊற வைக்கவும்.

3. 1 மணி நேரம் ஆன பின்னர், குளிர்ச்சியான நீரில் அலச வேண்டும்.

பீர் சிகிச்சை

பீர் சிகிச்சை

பொருட்கள்:

பீர்

வழிமுறை:

1. குளிக்கச் செல்லும் போது சிறிதளவு பீரை உங்களுடன் எடுத்துச் சென்று, அதனை உங்கள் தலையில் ஊற்றவும்.

2. 5-7 நிமிடங்களுக்கு பீர் உங்கள் தலைமுடிக்குள் நன்றாக செல்லும் வரையில் மசாஜ் செய்யவும்.

3. பின் அதனை நன்றாக கழுவி விட்டு, உங்கள் முடியை காய வைக்கவும்.

சமையல் சோடா

சமையல் சோடா

பொருட்கள்:

தண்ணீர் மற்றும் சமையல் சோடா

வழிமுறை:

1. சமையல் சோடாவுடன், தண்ணீரை கலந்து ஒரு பசையை தயார் செய்யவும்.

2. குளிக்கும் போது இந்த பசையை உங்களுடைய ஈரமான முடியில் தடவவும்.

3. இதனை நன்றாக தேய்த்து கழுவி விட்டு, இறுதியில் ஷாம்பு போட்டு முடியை அலசவும்.

தேன் மற்றும் பால்

தேன் மற்றும் பால்

பொருட்கள்:

தேன் மற்றும் பால்

வழிமுறை:

1. சிறதளவு தேனை எடுத்து, அதில் சில துளி பாலை விட்டு, அந்த கலவையை தலைமுடியில் விடவும்.

2. பின்னர் தலைமுடியை மென்மையாக மசாஜ் செய்யவும்.

3. இவ்வாறு 15-20 நிமிடங்கள் மசாஜ் செய்து விட்டு, குளுமையான தண்ணீரில் தலைமுடியை அலசவும்.

முட்டை

முட்டை

பொருட்கள்:

முட்டை மற்றும் தண்ணீர்

வழிமுறை:

1. முட்டையின் வெள்ளை பகுதியை, மஞ்சள் கருவிலிருந்து பிரிக்கவும்.

2. ஒரு தேக்கரண்டி தண்ணீரை எடுத்து, மஞ்சள் கருவுடன் சேர்த்து மென்மையாக வரும் வரையில் நன்றாக கலக்கவும்.

3. பின் இந்த கலவையுடன் வெள்ளைப் பகுதியை சேர்க்கவும்.

4. இறுதியில் தலைமுடியை நீரில் ஒருமுறை அலசி விட்டு, இந்த கலவையை தலையில் தடவவும். 30 நிமிடங்களுக்குப் பின்னர் தலைமுடியை நன்றாக ஷாம்பு போட்டு அலசி விடவும்.

பப்பாளி கலவை

பப்பாளி கலவை

பொருட்கள்:

பப்பாளி மற்றும் தயிர்

வழிமுறை:

1. தோல் நீக்கப்பட்ட, விதையில்லாத பப்பாளியை, சுத்தமான தயிருடன் சேர்த்து மென்மையான பசையை தயார் செய்யவும்.

2. இந்த பசையை தலைமுடியில் தடவி விட்டு, 45 நிமிடங்களுக்கு வைத்திருக்கவும்.

3. இறுதியில் இதனை நன்றாக நீரில் கழுவவும்.

வாழைப்பழம், முட்டை மற்றும் தேன்

வாழைப்பழம், முட்டை மற்றும் தேன்

பொருட்கள்:

வாழைப்பழம், முட்டை, பால் மற்றும் தேன்

வழிமுறை:

1. வாழைப்பழம், முட்டை, பால் மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பசை ஒன்றை உருவாக்கவும்.

2. இந்த பசையை தலைமுடியில் தடவி விட்டு, 30 நிமிடங்களுக்கு காத்திருக்கவும்.

3. பின்னர் நன்றாக அலசி, கழுவி விட்டு, மிதமான ஷாம்பு போட்டு சுத்தம் செய்யவும்.

பருப்பு சிகிச்சை

பருப்பு சிகிச்சை

பொருட்கள்:

கருப்பு உளுத்தம் பருப்பு, வெந்தய விதைகள் மற்றும் தயிர்

வழிமுறை:

1. சிறதளவு உளுத்தம் பருப்பினை எடுத்து, வெந்தய விதைகளுடன் சேர்த்து பவுடர் போல அரைக்கவும்.

2. இந்த பவுடருடன், சிறிதளவு தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

3. இந்த பசையை தலைமுடியில் தடவி விட்டு, 1 மணிநேரம் காத்திருக்கவும்.

4. பின்னர் மென்மையான ஷாம்பு போட்டு, இதனை கழுவி விடவும்.

எலுமிச்சை தோல்

எலுமிச்சை தோல்

பொருட்கள்:

எலுமிச்சை தோல்

வழிமுறை:

1. 3-4 எலுமிச்சை தோல்களை எடுத்து, அதனை 4-5 கப் தண்ணீருடன் சேர்த்து, 15-20 நிமிடங்களுக்கு வேக வைத்து இறக்கி குளிர வைக்கவும்.

2. ஒரு வாரத்திற்கு இந்த கலவையைக் கொண்டு முடியை அலச வேண்டும்.

தயிர் கலவை

தயிர் கலவை

பொருட்கள்:

தயிர்

வழிமுறை:

1. தலைமுடியில் சிறிதளவு தயிரை சேர்த்து, குறைந்த பட்சம் 1 மணிநேரத்திற்கு அப்படியே ஊற வைக்கவும்.

2. பின்னர் மென்மையான ஷாம்பு போட்டு, இதனை கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies For All Your Hair Problems

To rescue you from the dull, lifeless, thinning hair and various other hair problems, here we shares some extremely beneficial home remedies right from your kitchen that will help you have thicker, stronger and manageable hair. These ways never create any side effects.
Story first published: Friday, November 22, 2013, 11:25 [IST]
Desktop Bottom Promotion