For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களின் முடி வெடிப்பை சரிசெய்வதற்கான சில டிப்ஸ்...

By Boopathi Lakshmanan
|

தலைமுடி பராமரிப்பு நிலையங்களும், அதை சார்ந்த தொழில்களும் வெகு வேகமாக வளர்ந்து வருகின்றன. முக்கியமாக தற்போது ஆண்களின் முடி பராமரிப்பு பற்றி மிகவும் அக்கறை கொண்டு, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றன. முடி பாதுகாப்பு என்ற பரந்த தலைப்பின் கீழ் பெண்களை மட்டும் குறிப்பிட முடியாது. மிக அதிக அளவில் ஆண்களுக்கான தலைமுடி பாதுகாப்பு பொருட்கள் சந்தைகளில் குவிந்த வண்ணம் உள்ளன. ஆண்கள் அதிக அளவில் இத்தகைய பொருட்களை வரவேற்கின்றனர். பெண்களை போலவே ஆண்களுக்கும் முடியின் முனைகளில் வெடிப்பு ஏற்படும் பிரச்சனை உண்டு. முடியின் வெளி தோல் முறிவதன் காரணமாக முடியின் முனைகளில் வெடிப்பு ஏற்படுகிறது.

ஆண்களுக்கு முடி முனைகளில் வெடிப்பு ஏற்பட பல காரணங்கள் உண்டு. பொதுவாக ஆண்கள் வெளி வேலைகளிலும், வெகுநேரத்திற்கு தலைக் கவசம் அணிந்தும் வண்டிகளில் பயணிக்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில் ஆண்கள் பிளோயர் அதாவது காற்றை ஊதும் கருவிகளையும் பயன்படுத்தவும் மற்றும் முடியை நேராக்குவதற்கும் சலூனில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களை அனுமதிக்கின்றனர். இதனால் முடி பாழ்படுகிறது. உயிறற்ற முடி பிரச்சனைகள் ஆண்களிடையே வேகமாக வளர்ந்து வருகிறது. இவை இக்கால வாழ்கை முறைகளும், தவறான கூந்தல் பராமரிப்பு முறைகளுமே இதற்கு காரணம் என்பது உறுதி

முடிகளில் உள்ள வெடித்த முனைகளை சரி செய்ய பல வழிகள் உள்ளன. ஆண்களின் தலைமுடியை வெறும் சாம்பூவை கொண்டோ அல்லது கன்டிஷனர் பயன்படுத்தியோ சரி செய்ய முடியாது. வெடித்துள்ள முனைகளை வெட்டி சிறிது ஆறுதல் பெறலாம் என்ற எண்ணம் நம்மை தூண்டும். இத்தகைய எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் நிரந்தர தீர்வுக்கான வழிமுறைகளை கண்டறிந்து முடி துண்டுபடுவதை சரி செய்யவும் தடுக்கவும் முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தரமான வெப்பமூட்டும் கருவிகள்

தரமான வெப்பமூட்டும் கருவிகள்

ஆண்கள் அதிக அளவில் தங்கள் முடியை பராமரிக்க நிறைய அழகுபடுத்தும் சாதனங்களை பயன்படுத்துகின்றனர். இதில் மிக முக்கியமாக நாம் தரமான பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். தரமற்ற பொருட்களை பேரம் பேசி வாங்கி விட்டு, அதிலுள்ள வெப்ப கருவிகள் சரியான முறையில் வேலை செய்யாமல் அல்லது அதிக அளவு வெப்பத்தை உண்டாக்கி முடியை சேதப்படுத்தி விடும். இந்த செயல் வெடிப்புகளை முடி முனைகளில் உண்டாக்கும். முடியை காய வைக்கும் கருவியை ஆண்கள் அதிக அளவு பயன்படுத்துகின்றனர். அத்தகைய பொருட்களை நல்ல தரமான வகையில் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது நல்லது.

பொறுமையுடன் கையாளுங்கள்

பொறுமையுடன் கையாளுங்கள்

பொறுமை தான் நாம் அனைவருக்கும் மிக அவசியமான தேவையாக உள்ளது. பொறுமையுடன் முடியை கையாளுவது தற்போதைய புதிய யுக்தியாகும். நீங்கள் பயன்படுத்தும் எந்த எந்திரமாய் இருந்தாலும், பொருளாய் இருந்தாலும் அதை சரி வர புரிந்து பயன்படுத்துதல் அவசியம். உங்களை தயாராக்கிக் கொள்ளும் நோக்கத்தில் முடியை அவசர அவசரமாக வெப்பமூட்டும் கருவிகளை பயண்படுத்தி தயாராக்குவது மற்றும் ப்ளோ-டிரை செய்வது அல்லது முடியை சூடுபடுத்தி சீர்செய்யும் செயல்கள் போன்றவற்றால் முடி உயிரற்று செயலிழந்து போய்விடும்.

உணவு முறை

உணவு முறை

அழகு படுத்தும் சாதனங்கள் மூலம் மட்டும் முடியை காத்துக் கொள்ள முடியாது. நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல் மிகவும் அவசியமானதாக உள்ளது. தினசரி உணவில் ஃபோலிக் அமிலம் மற்றும் பையோடின் ஆகியவை இருத்தல் அவசியம். இலை தழைகளை கொண்ட காய் கறிகள், ஆரேஞ்சு பழம், சோயா பீன்ஸ் மற்றும் பீன்ஸ் வகைகள், பழுப்பு அரிசி ஆகியவற்றில் இந்த சத்துக்கள் தாராளமாக உள்ளன. இவை முடியிலுள்ள பிரச்னைகளை சரி செய்து முடியை பலப்படுத்தும்.

சரியான முறையில் உலர வைத்தல்

சரியான முறையில் உலர வைத்தல்

தலைக்கு குளித்த பின் நல்ல ட்ரையரைக் கொண்டு உலர வைக்க வேண்டும். இதை செய்யும் போது கவனத்துடனும் பொறுமையுடனும் சரியான முறையில் செய்ய வேண்டும். பொதுவாக இயற்கை முறையில் முடியை உலர வைப்பது சிறந்த முறையாகும். 80-90 சதவிகிதம் வரை இயற்கையாக முறையில் முடியை உலர வைத்து பின்னர் ப்லோ ட்ரையரை பயன்படுத்தலாம். அதை மிக கவனத்துடனும், கட்டுப்பாட்டுடனும் முனையுடன் பயன்படுத்தி முடியை உலர வைக்க வேண்டும்.

அவ்வப்போது முடி வெட்டிக் கொள்ளுதல்

அவ்வப்போது முடி வெட்டிக் கொள்ளுதல்

அவ்வப்போது சலூனுக்கு சென்று முடியை டிரிம் அல்லது வெட்டி விடுவது அவசியம். எவ்வளவு தடுத்தாலும் முடி முனைகளில் வெடிப்புகள் அவ்வப்போது வரக் கூடும். முடியை டிரிம் செய்வதன் மூலம் அதிக அளவில் வெடிப்புக்கள் வராமலும் அது பரவாமலும் தடுக்கலாம்.

கண்டிஷனர்

கண்டிஷனர்

குளித்த பின் ஒரு நல்ல 'லிவ்-இன் கண்டிஷனர்' பயன்படுத்துவது முடி முனைகளில் வரும் வெடிப்புகளை வர விடாமல் தடுத்து முடிக்கு மேலும் பாதுகாப்பை தரும். எனினும், அதிகளவு லிவ்-இன் கன்டிஷனரும் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், அது தலையைச் சுற்றிலும் டவல் கொண்டு சுற்றுவதையும், முடியில் வெடிப்புகள் வருவதை தவிர்ப்பதற்காகவே பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட கன்டிஷனர்களை பயன்படுத்தவும். அவை மட்டுமே முடி முனைகளில் வெடிப்புகள் வருவதை தவிர்க்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hair Care Tips For Split Ends In Men

There are several ways to treat and approach split ends. Men hair care is no longer confined to just shampooing and conditioning. You may be tempted to snip off the ends by getting your hair trimmed when you face the problem of slit ends. Here are a few hair care tips for men facing split ends.
Story first published: Tuesday, December 3, 2013, 19:39 [IST]
Desktop Bottom Promotion