For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலில் உள்ள பிரச்சனையை முடியை வைத்தே தெரிந்து கொள்ளலாம்!!!

By Super
|

உடலுக்கு தனக்குள் நடப்பவற்றைச் சொல்லத் தெரியாது. ஆனால் உடல் வெளிப்படுத்தும் சிற்சில அறிகுறிகள், மாற்றங்கள், ஆகியவை நமது உடல்நலத்தில் ஏற்படும் மாற்றங்களை நன்கு உணர்த்தும். ஆரோக்கியமற்ற தலைமுடியானது நமது உடல்நலம் கெட்டுப் போவதை உணர்த்துகின்ற அறிகுறியாகும்.

தலைமுடி சார்ந்த பிரச்சனைகளான பொடுகு, முடி உதிர்தல், இளநரை ஆகியவை எப்போதுமே சாதாரணமான, முக்கியத்துவமில்லாத பிரச்சனைகளாகவே பார்க்கப்படுகின்றன. தலைமுடியில் ஏற்படும் பாதிப்புகள், உடல் நலத்தில் ஏற்படும் பாதிப்புகளை வெளிக்காட்டும் வெளிக்காட்டிகளாகும் (indicators). தலைமுடியில் ஏற்படும் பாதிப்புகளானது, எவ்வாறு உடல் நலத்தின் நிலையை நமக்குக் காட்டுகின்றன என்பதைக் கீழே பார்ப்போம்.

1. முடி உதிர்தல்:

சாதாரண மனிதனின் உடலில் இருந்து நாள்தோறும் 90 முதல் 100 முடிகள் வரை உதிர்கின்றன என்று தோல் நோய் நிபுணர்கள் சொல்கிறார்கள். நமது உடலில் உள்ள மயிர்க்கால்களில் 90% மயிர்க்கால்கள் சீராக வளர்ந்து கொண்டு இருக்கும் பொழுது, 10% மயிர்க்கால்கள் மட்டும் உறக்க நிலையை, அதாவது டெலோஜென் நிலையை (telogen phase) அடைகின்றனவாம். இவ்வாறு டெலோஜென் நிலையை அடைந்த மயிர்க்கால்கள் இறந்து போய் 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை உதிரத் தொடங்கி விடுகின்றனவாம். இவ்வாறு உதிர்ந்த முடிகள் இருந்த இடத்தில், புதிய மயிர்க்கால்கள் உருவாகி, அங்கே புதிய முடிகள் முளைக்கத் தொடங்கும். இந்த சுழற்சியானது சீரான இடைவெளிகளில் நடந்து கொண்டே இருக்கும்.

Damaged hair signifies bad body condition

உணவுப் பழக்கம் ஆரோக்கியமற்றது என்பதை அதிகமாக உதிர்கின்ற முடிகள் வெளிக்காட்டும். தலைமுடி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வளர புரோட்டீன், இரும்புச்சத்து, துத்தநாகச் சத்து, வைட்டமின் ஏ, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை தேவைப்படுகின்றன. ஆனால் உணவில் கஞ்சத்தனம் காட்டினால், இச்சத்துக்கள் உணவின் வழியாக கிடைக்காமல் போய்விடும். ஊட்டச்சத்துக்கள் குறைந்தாலோ, உணவுமுறையில் குறை இருந்தாலோ, அதன் விளைவுகள் தலைமுடியில் தெரியும். ஆம், தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கிவிடும்.

2. பொடுகு:

தலையின் ஸ்கால்ப் எனப்படும் மேல்தோல் வறண்டு காணப்பட்டாலோ, அல்லது அதிகமாக எண்ணெய் பசையுடன் காணப்பட்டாலோ பொடுகு உண்டாகும். ஷாம்புவை அடிக்கடி உபயோகிப்பதாலோ அல்லது தேவையான அளவு உபயோகிக்காமல் இருந்தாலோ, பொடுகு உண்டாகலாம். பொடுகானது, பூஞ்சைகளால் ஏற்படுகிறது என்று சரும நோய் நிபுணர்கள் கருதுகிறார்கள். பொடுகு இருப்பதால் உடல் நலம் குன்றியுள்ளது என்று பொருளல்ல. ஆயினும், மஞ்சள் பொடுகால் ஏற்படும் செபோரிக் டெர்மாடிடிஸ் எனப்படும், தோலில் காணப்படும் சிவந்த செதில்செதிலான தடிப்புகள், ஹார்மோன் தொடர்புடையவையாக இருக்கக்கூடும் அல்லது பூஞ்சைகளால் ஏற்படக்கூடும் அல்லது குறிப்பிட்ட நரம்பியல் பிரச்சினையாகவும் இருக்கலாம்.

3. இளநரை:

தலைமுடி நரைத்தல் என்பது எப்போதுமே முதுமையைக் குறிப்பிடுவதில்லை. சிலருக்கு இளமையிலேயே கூட முடி நரைக்கக்கூடும். இளமையிலேயே தலைமுடி நரைத்தல் என்பது பரம்பரை சார்ந்த நோயாகவும் இருக்கலாம். இளநரையானது உடல்நலம் குன்றியுள்ளதைக் குறிப்பிடுவதில்லை. எனினும், இரத்தசோகை, தைராய்டு பிரச்சனைகள், வைட்டமின் பி12 குறைபாடு, தோலில் வெண்புள்ளிகள்/வெண்குஷ்டம் (vitiligo) ஆகியவையும் இளநரைக்குக் காரணமாக அமையலாம்.

English summary

Damaged hair signifies bad body condition | உடலில் உள்ள பிரச்சனையை முடியை வைத்தே தெரிந்து கொள்ளலாம்!!!

Problems on the hair such as dandruff, hair loss or graying is often regarded as a trivial problem. Though damaged hair can be an indicator that there is a problem in the body that is more serious. Here are some of the meanings of hair damaged the health of the body.
Desktop Bottom Promotion