For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூந்தல் பராமரிப்பில் வெங்காயத்தையும் சேத்துக்கோங்க...

By Maha
|

கூந்தல் பற்றிய பிரச்சனைகள் நிறைய உள்ளன. குறிப்பாக கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை, கூந்தல் வறட்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிறைய முயற்சிகளை, இதுவரை செய்திருப்போம். அதுவும் மார்க்கெட்டில் விற்கப்படும் கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தியிருப்போம். இருப்பினும், அதற்கான சரியான தீர்வை யாரும் பெற்றதில்லை. மேலும் இதனால் கூந்தலுக்கு இருக்கும் பிரச்சனைகள் தான் அதிகமாகியுள்ளதே தவிர, ஒரு முடிவு கிடைக்கவில்லை.

எனவே எப்போதும் செயற்கை முறைகளை விட, இயற்கை முறைகளான வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கூந்தலை பராமரித்தால், நிச்சயம் அத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மேலும் கூந்தலைப் பராமரிப்பதற்கு நிறைய வீட்டுப் பொருட்கள் உள்ளன. உதாரணமாக, முட்டை, தேன், தயிர், பேக்கிங் சோடா, வினிகர், எலுமிச்சை சாறு மற்றும் வெங்காயம் போன்ற பொருட்கள் கூந்தல் பராமரிப்பில் பெரிதும் உறுதுணையாக உள்ளன. ஆம், அனைத்து சமையலிலும் பயன்படும் வெங்காயம் கூந்தல் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் உதவியாக உள்ளது. அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Onion

* கூந்தல் உதிர்தல்: வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. பொதுவாக சல்பர் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு, கூந்தலையும் வலுவுடன் வைத்துக் கொள்ளும். எனவே அதற்கு வெங்காயத்தை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தேய்த்து, ஊற வைத்து குளிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு முன் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெங்காய பேஸ்ட்டை தலைக்கு தடவி மசாஜ் செய்து, சுடு நீரில் நனைத்த ஈரமான துண்டை, தலைக்கு சுற்றி, ஊற வைத்து பின்னர் குளிக்க வேண்டும்.

* கூந்தல் வளர்ச்சி: உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும். இத்தகைய இரத்த ஓட்டத்தை வெங்காயம் செய்வதால், வெங்காயத்தை சாறு எடுத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படியாக தடவி, மசாஜ் செய்து, 40 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க, கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.

* ஸ்கால்ப் பிரச்சனை: வெங்காயச் சாற்றை ஸ்கால்ப்பில் படும்படியாக தடவினால், ஸ்காப்பில் தங்கி கூந்தல் வளர்ச்சியைத் தடுக்கும் தொற்றுகள் நீங்கி, கூந்தல் மற்றும் ஸ்கால்ப் நன்கு ஆரோக்கியமானதாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

* பொடுகுத் தொல்லை: தலையில் உள்ள அதிகப்படியான வறட்சியினால் பொடுகு வந்துவிடும். பொடுகானது தலையில் அதிகம் இருந்தால், கூந்தல் உதிர்தல் அதிகரித்து, அதன் வளர்ச்சி தடைப்படும். எனவே பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு, வெங்காயச் சாற்றுடன், எலுமிச்சை சாறு, தயிர் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, தலையில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

இவையே கூந்தல் பராமரிப்பில் வெங்காயத்தின் நன்மைகள். இதுவரை நீங்கள் கூந்தலைப் பராமரிக்க வெங்காயத்தை பயன்படுத்தியுள்ளீர்களா? இல்லையெனில் உடனே ஆரம்பியுங்கள்.

English summary

Benefits Of Onions On Hair | கூந்தல் பராமரிப்பில் வெங்காயத்தையும் சேத்துக்கோங்க...

Many people opt for home remedies to get rid of hair problems naturally. Several kitchen ingredients can be used for hair care. For example, honey, egg, curd, baking soda, vinegar, lemon juice and onions can be used as a home remedy to treat hair problems. Yes, the onions that makes you cry can help treat hair problems. Check out how...
Story first published: Friday, March 1, 2013, 13:29 [IST]
Desktop Bottom Promotion