For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடியின் அடர்த்தியை அதிகரிக்கும் ஜூஸ்கள்!!!

By Maha
|

நல்ல அழகான, அடர்த்தியான, நீளமான கூந்தல் கூட உடலின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும். பொதுவாக ஜஸ் குடித்தால், உடல் நன்கு சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் இருக்கும். ஆனால் அந்த ஜூஸ்களை கூந்தலைப் பராமரிக்கப் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு அடர்த்தியாக வளரும். ஏனெனில் கூந்தலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

இதனால் கூந்தல் நன்கு அடர்த்தியாக வளர்வதோடு, கூந்தல் பிரச்சனைகளான முடி வெடிப்பு, வறட்சி போன்ற அனைத்தையும் சரிசெய்யலாம். அதுமட்டுமிட்டுமின்றி, பல்வேறு ஸ்கால்ப் பிரச்சனைகளையும் சரிசெய்ய முடியும். அதிலும் பழங்கள் மற்றும் காய்கறிகளால் செய்யப்பட்ட சில ஜூஸ்களை குடிப்பதை விட, அதனை தலைக்கு நேரடியாகப் பயன்படுத்துவதால், இதில் உள்ள சத்துக்கள் எளிதில் உடலால் உறிஞ்சப்பட்டு, அதனால் கிடைக்கும் பலனும் விரைவில் தெரியும். ஆனால் சில ஜூஸ்களை குடிப்பதனால், கூந்தலின் அடர்த்தி மற்றும் வளர்ச்சியை அதிரிக்கலாம்.

குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு ஜூஸ் தயாரிக்கும் போது, அதில் வேறு எந்த ஒரு பதப்படுத்தப்பட்ட பொருட்களையும் சேர்க்காமல் செய்தால் தான், நல்ல பலன் கிடைக்கும். சரி, இப்போது கூந்தலின் அடர்த்தியை அதிகரிக்கும் சில ஜூஸ்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸ்

கேரட்டில் கூந்தலின் வளர்ச்சி மற்றும் அடர்த்தியை அதிகரிக்கும் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த ஜூஸை தலைக்கு தடவுவதை விட, குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். எனவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள பீட்டா கரோட்டீன், ஸ்கால்ப்பில் போதிய அளவில் எண்ணெயை சுரக்கச் செய்யும்.

வெங்காயச் சாறு

வெங்காயச் சாறு

வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. இவை கொலாஜன் திசுக்களை அதிகம் உற்பத்தி செய்யக்கூடியது. ஆகவே வெங்காயத்தை சாறு எடுத்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து குளிக்க வேண்டும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை சாறு எடுத்து, அதனை தலையில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து மைல்டு ஷாம்பு போட்டு குளித்தால், அது கூந்தலின் அடர்த்தியை அதிகரிக்கும். ஏனெனில் இதில் கூந்தல் மெலிதாவதை தடுக்கும் தன்மை அதிகம் உள்ளது.

நெல்லிக்காய் சாறு

நெல்லிக்காய் சாறு

நெல்லிக்காய் முடியின் வலிமை மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடிய தன்மை கொண்டவை. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்க் சி அதிகம் உள்ளது. இவை கூந்தலின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, அதன் கருமை நிறத்தை அதிகரிக்கும். அதற்கு இந்த நெல்லிக்காய் சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து அலச வேண்டும்.

செம்பருத்தி ஜூஸ்

செம்பருத்தி ஜூஸ்

செம்பருத்தியை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் செம்பருத்தியின் பூ மற்றும் இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை தலையில் தடவி மசாஜ் செய்து வர, பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதால், இது கூந்தலின் அடர்த்தியை அதிகரிப்பதில் சிறந்தப் பொருளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இது கொலாஜன் உற்பத்திக்கு பெரிதும் உதவியாக உள்ளது. மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மயிர்கால்களில் எந்த ஒரு பாதிப்பும் வராமல் பாதுகாக்கிறது.

கிவி

கிவி

சிட்ரஸ் பழங்களில் கிவியும் ஒன்று. இத்தகைய கிவிப் பழத்தை சாறு எடுத்து, அதனை கூந்தலுக்கு பயன்படுத்தினால், அதில் உள்ள வைட்டமின் சி, கூந்தலின் வலிமை அதிரிக்கும். மேலும் இதனை உணவில் சேர்த்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

மாம்பழ ஜூஸ்

மாம்பழ ஜூஸ்

பழங்களின் ராஜாவான மாம்பழத்திலும் நல்ல வளமையான அளவில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் நிறைந்துள்ளன. அதிலும் இதில் உள்ள வைட்டமின் ஏ, கூந்தலின் அடர்த்தியை அதிகரிப்பதில் சிறந்தது. எனவே இத்தகைய பழத்தை தலைக்கு பயன்படுத்துவதை விட, சாப்பிட்டு வந்தால் கூந்தலுக்கு மட்டுமின்றி, உடலுக்கும் நல்லது.

திராட்சை ஜூஸ்

திராட்சை ஜூஸ்

திராட்சை சாற்றில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரித்து, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். எனவே தினமும் தவறாமல் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Juices For Thick Hair

Make sure that the juices are made fresh without any extra preservatives or added calories. Here are some effective juices for thick hair that will give you excellent results.
Story first published: Friday, September 27, 2013, 13:07 [IST]
Desktop Bottom Promotion