For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியமான தலைமுடிக்கு தேவையான 13 வகையான உணவுகள்!!!

By Super
|

தலைமுடி பொலபொலவென்று உதிரும் போது, என்ன செய்வது என்று தலையைச் சொரிந்து கொண்டே யோசனை செய்பவரா நீங்கள்? ஒரு வார சிகிச்சையில், 30 நாட்கள் சிகிச்சையில், 60 நாள் சிகிச்சையில் முடி உதிர்வதற்கு தீர்வு காணப்படும் என ஆங்காங்கே ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளை பார்த்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு ஓடுவது பற்றிய எண்ணம் மனதில் ஓடுகிறதா? உண்மையில், வீட்டிலிருந்தே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

எவ்வாறு வீட்டில் இருந்தே தலைமுடி பிரச்சினையை எதிர்கொள்வது என மீண்டும் யோசனையா? கவலையை விடுங்கள், தமிழ் போல்டு ஸ்கை கூறும் வழிமுறைகளைப் படித்து பின்பற்றுங்கள். வீட்டில் இருந்தவாறே தலை முடி பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணும் வழியைக் கண்டு பிடித்து நீங்களே செயல்படுத்துங்கள். "நோய்நாடி நோய்முதல் நாடி" என்று பாடிய அய்யன் வள்ளுவனின் வாக்குப்படி மருந்தை உட்கொள்ளும் முன்னர் நோய்க்கான காரணம் என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும்.

பல்வேறு ஆய்வுகளின் விளைவாக ஆண்களுக்கு முடி உதிர காரணம் என்ன என சிலவற்றை ஆய்வாளர்கள் பொதுமைப்படுத்தியுள்ளனர். ஒழுங்கற்ற உணவுப்பழக்கம், வைட்டமின் குறைபாடு, மரபியல் காரணிகள், அதிகப்படியான மன அழுத்தம், கவலைகள், டைபாய்டு, இரத்த சோகை, வயிற்றுக்கடுப்பு, மஞ்சள் காமாலை போன்ற நாள்பட்ட நோய்கள், சீரற்ற இரத்த ஓட்டம் மற்றும் நன்றாக பராமரிக்கப்படாத தலைமுடி போன்ற காரணிகள் தான் அவற்றுள் முக்கியமானவை.

இப்போது என்னென்ன காரணிகள் தலைமுடியின் எதிரிகள் என கண்டுபிடித்தாகிவிட்டது. எதிரியை எதிர்நோக்கும் வழிகளை இப்போது பார்ப்போம். தற்போது சந்தையில் ஏராளாமான மருந்துகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கலாமா என முடிவு செய்து மருந்தகத்திற்கு ஓடத் தயாரா? கொஞ்சம் பொறுங்கள். இயற்கையே நமக்கு சிறந்த தீர்வை தருகிறது. பெரும்பாலும் உண்ணும் உணவுப்பழக்கத்தை சரி செய்தாலே கூந்தல் உதிர்தல் நின்று, தலை முடியும் கருகருவென்று மாறும்.

ஆகவே கவலையை விட்டுவிட்டு, இங்கே கூறப்பட்டுள்ள 15 வெவ்வேறு வழிகளைப் படித்து பயன் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆளி விதை

ஆளி விதை

வெறும் வயிற்றில் ஆளிவிதை நீர் (alsi) ஒரு டம்ளர் குடிக்கவும். இது முடி வளர்ச்சிக்கு தேவையான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டை வழங்கும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும். பெண்கள் பளபளக்கும் கூந்தலைப் பெற வேண்டுமானால், நெல்லிக்காயால் செய்யப்பட்ட எண்ணெயை கூந்தலுக்குப் பயன்படுத்த வேண்டும்.

பாதாம் பருப்பு

பாதாம் பருப்பு

ஒவ்வொரு இரவிலும் 5 பாதாம் பருப்புகளை தண்ணீரில் ஊற வைத்து, தோலுடன் அவற்றை சாப்பிட வேண்டும்.

இளநீர், மோர் மற்றும் எலுமிச்சை ஜூஸ்

இளநீர், மோர் மற்றும் எலுமிச்சை ஜூஸ்

தலைமுடிக்கு ஊட்டச்சத்துக்கள் மிகவும் இன்றியமையாதது. அதனால் மோர், எலுமிச்சை சாறு மற்றும் இளநீர் போன்றவற்றை நிறைய குடிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 8-10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

முளை கட்டிய பருப்புக்கள்

முளை கட்டிய பருப்புக்கள்

ஒரு கிண்ணம் முளை கட்டிய பருப்பு வகைகளை சாப்பிட வேண்டும்.

சிக்கன் மற்றும் முட்டை

சிக்கன் மற்றும் முட்டை

தலைமுடிக்கு புரதச்சத்து மிகவும் முக்கியமானது. எனவே சிக்கன் மற்றும் முட்டையை அதிகம் சாப்பிட வேண்டும்.

டீ மற்றும் காபி

டீ மற்றும் காபி

சிலர் டீ மற்றும் காபியை அதிகம் குடிப்பார்கள். ஆனால் அவ்வாறு அவற்றை அதிகம் குடிக்கும் பழக்கத்தை நிச்சயம் குறைக்க வேண்டும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

குளிக்கும் போது ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் கூந்தலை பொடுகில் இருந்து பாதுகாக்க முடியும்.

பால்

பால்

தோனியைப் போன்று தினமும் இரண்டு டம்ளர் வெண்ணை எடுக்கப்பட்ட பாலை குடிக்க வேண்டும்.

வெந்தயம்

வெந்தயம்

வாரம் ஒருமுறை வெந்தயத்தை அரைத்து, தலையில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். மேலும் தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

பழங்கள்

பழங்கள்

ஆதிவாசிகளும், சாதுக்களும் பழங்கள் உண்டே உயிர் வாழ்ந்தது நினைவிருக்கிறதா? எனவே ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழம், திராட்சை போன்ற பழங்களில் தினமும் குறைந்தபட்சம் 2 அல்லது 3 பழங்களை சாப்பிட வேண்டும்.

பச்சை காய்கறிகள்

பச்சை காய்கறிகள்

கீரை உள்பட பச்சை காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

மீன்

மீன்

மாமிச உணவுகளைத் தவிர்த்து கடல் உணவுகள் மற்றும் முட்டை போன்ற உணவுகளை சாப்பிடவும்.

ஆண்களுக்கு பெண்களை விட முடி அதிகம் உதிர்தல் மிகவும் பொதுவானது. பாலின வேறுபாடு பெண்களுக்கு சாதகமாக இருக்கிறதோ என நினைக்கீறிர்களா? மேற்கூறிய வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வந்தால், முடி உதிர்தலை நிச்சயம் தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

13 Food Types For Healthy Hair

Do not trust chemical products since they might cause more harm than good. To put your panicking soul to rest, here are 13 different ways to reduce hair loss.
Desktop Bottom Promotion