For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்தில் முடியைப் பராமரிக்க சில டிப்ஸ்...

By Maha
|

Hair Care
குளிர்காலம் வந்தாலே எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஏனெனில் அப்போது வியர்வைத் தொல்லை இருக்காது. ஆனால் அப்படி திடீரென பருவநிலை மாறும் போது நம் உடலானது அதற்கேற்றாற் போல் உடனே மாறுவது என்பது சற்று கடினம் தான். மேலும் கோடைகாலத்தில் எப்படி நமது கூந்தலுக்கு பிரச்சனைகள் வருகிறதோ, அதேபோல் குளிர்காலத்திலும் பிரச்சனைகள் வரும். அது என்னென்ன பிரச்சனைகள் என்றும், எப்படி அதனை சரி செய்யலாம் என்றும் பார்ப்போமா!!!

1. வறண்ட கூந்தலுக்கு...

கோடை காலத்தில் முடியானது வறட்சியை அடையும், ஆனால் குளிர் காலத்தில் வறட்சி இருக்காது. ஆகவே வறட்சி அடையவில்லை என்று சாதாரணமாக விட்டுவிடக் கூடாது. அதற்கு சரியான பராமரிப்பு வேண்டும். அந்த பராமரிப்பிற்கு முதலில் கூந்தலுக்கு நன்கு எண்ணெய் தடவ வேண்டும். மேலும் எண்ணெயால் நன்கு மசாஜ் செய்து, குளித்தால் கூந்தலும், உடலும் நன்கு பளபளப்புடன் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

ஒரு வாழைப்பழத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் மற்றும் தயிரை சேர்த்து நன்கு கலக்கவும். பின் முடியை நீரில் அலசி, இந்த கலவையை தலைக்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் அலசவும்.

முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிது மயோனைஸ் மற்றும் பேரிக்காய் சேர்த்து நன்கு அரைத்து, அதனை முடிக்கு தடவி, பின் ஒரு பிளாஸ்டிக் கவரால் மூடி, ஒரு சுடு தண்ணீரில் நனைத்த துண்டை தலை மேல் போர்த்தி 25 நிமிடம் ஊற வைத்து, பின் அலசவும்.

இவ்வாறெல்லாம் செய்தால் முடியானது சரியான பராமரிப்புடன் இருப்பதோடு, முடியும் ஆரோக்கியமாக இருக்கும்.

2. பொடுகு பிரச்சனைக்கு...

குளிர்காலத்தில் பொடுகு பிரச்சனையும் சில சமயம் ஏற்படும். இவ்வாறு பொடுகு வராமல் இருக்க வீட்டிலேயே சில வழிகள் உள்ளன.

தேங்காய் எண்ணெயை சூடேற்றி அதில் சிறிது எலுமிச்சைப் பழச்சாற்றை விட்டு, இரவில் படுக்கும் முன் தலைக்கு தடவி மசாஜ் செய்து, காலையில் எழுந்து மைல்டு ஷாம்புவால் தலையை அலச வேண்டும்.

ஐந்து ஸ்பூன் தயிருடன் இரண்டு ஸ்பூன் வெந்தயப் பவுடரை கலந்து, கூந்தலுக்கு தடவி 25 நிமிடம் ஊற வைத்து பின் அலச வேண்டும்.

வேப்ப எண்ணெயை வைத்து மசாஜ் செய்தால் கூந்தலானது அருமையாக இருக்கும்.

மேற்கூரியவாறு செய்து பாருங்கள், கூந்தல் மென்மையாக இருப்பதோடு பொடுகு இல்லாமலும் இருக்கும்.

3. வறண்ட ஸ்கால்ப்பிற்கு....

தலையானது வறண்டு விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி வறண்டு விட்டால் அரிப்பு மற்றும் தொற்று நோய்கள் வந்துவிடும். இப்படியெல்லாம் ஏற்படாமல் இருக்க சில வழிகள் உள்ளன.

எலுமிச்சைப் பழச்சாற்றோடு, ஆலிவ் ஆயில் மற்றும் மயோனைஸ் ஆகியவற்றை நன்கு கலக்கவும். பின் அதனை ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பிறகு அலசினால், முடியானது எண்ணெய் பசையோடு இருப்பதோடு, பட்டுப்போல் மின்னும்.

மேலும் எங்காவது வெளியே சென்றாலும் தலைக்கு துணியைப் போட்டு மூடிக் கொண்டு செல்லவும் மற்றும் கூந்தலுக்கு அடிக்கடி ஹேர் ட்ரையர் பயன்படுத்த வேண்டாம்.

மேலே சொன்னவாறு செய்து பாருங்கள், கூந்தலானது ஆரோக்கியமாக இருப்பதோடு மென்மையாகவும் பட்டுப் போலும் மின்னும்.

English summary

winter hair care tips and treatment | குளிர்காலத்தில் முடியைப் பராமரிக்க சில டிப்ஸ்...

Winter the most romantic, beautiful and favourite season of many demands a bit more attention to your skin and hair. Generally winter skin care is what all of us keep in mind but it is a fact that like summer, winter too has an inverse effect on hair. Winter hair care aims at keeping the hair from getting dry, brittle and discolored. Here are some winter hair problems and tips-
Story first published: Sunday, June 17, 2012, 15:20 [IST]
Desktop Bottom Promotion