For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலையில் உள்ள பொடுகை நீக்க சில ஈஸியான டிப்ஸ்...

By Maha
|

Dandruff
தலையில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பொடுகு. அத்தகைய பொடுகு ஸ்கால்ப்பில் அளவுக்கு அதிகமாக இறந்த செல்கள் இருப்பதால் ஏற்படுகிறது. அவ்வாறு பொடுகு தலையில் அளவுக்கு அதிகமாக வந்துவிட்டால், கூந்தல் உதிர்தல், பிம்பிள், முகப்பரு மற்றும் நரை முடி போன்றவை ஏற்படும். ஆகவே இத்தகைய பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு, இந்த பொடுகை போக்குவதற்கான செயல்களில் விரைவில் ஈடுபட வேண்டும். அதிலும் அந்த பொடுகை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, நீக்கிவிட முடியும். இப்போது அந்த பொருட்கள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, தலையில் இருக்கும் பொடுகை இயற்கை முறையில் நீக்குங்கள்.

* தயிர் மற்றும் மிளகு: 2 டீஸ்பூன் மிளகுத்தூளை 1 கப் தயிருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை தலையில் நன்கு தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு தலையை அலவ வேண்டும். இதனால் தலையில் உள்ள பொடுகு நீங்கிவிடும்.

* ஆலிவ் ஆயில்: ஆலிவ் ஆயிலில் பொடுகை நீக்கும் தன்மை உள்ளது. அதற்கு இரவில் படுக்கும் முன்பு, அந்த ஆயிலை லேசாக சூடேற்றி, ஸ்கால்ப்பில் தடவி, நன்கு மசாஜ் செய்து, பின் தூங்க வேண்டும். பின் அதனை காலையில் எழுந்து, ஷாம்பை போட்டு குளிக்க வேண்டும்.

* வினிகர்: வினிகரில் பொட்டாசியம் மற்றும் நொதிகள் அதிகம் உள்ளது. இது ஸ்கால்ப்பில் ஏற்படும் அரிப்பு மற்றும் பொடுகை சரிசெய்யும். அத்தகைய சிறப்புடைய வினிகரை பல வழிகளில் பயன்படுத்தலாம்.

- ஆப்பிள் சீடர் வினிகரை தலையில் தடவி, 5-7 நிமிடம் மசாஜ் செய்து, குளித்து வந்தால், தலையில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, பொடுகு போவதோடு, பொடுகினால் ஏற்படும் கூந்தல் உதிர்தலும் நின்றுவிடும்.

- இல்லையெனில் ஒரு டேபிள் ஸ்பூன் வினிகரை, தலைக்கு குளிக்கும் போது, கடையில் ஒரு கப் தண்ணீருடன் கலந்து தலைக்கு ஊற்ற வேண்டும்.

* எலுமிச்சை மற்றும் பூண்டு: இநத கலவை சிறந்த பலனைத் தரும். ஏனெனில் ஏற்கனவே எலுமிச்சை ஸ்கால்ப்பில் உள்ள தோல் செதில்செதிலாக வருவதை தடுக்கும். மேலம் பூண்டு ஒரு ஆன்டி-பயாடிக் மற்றும் ஸ்கால்ப்பில் பாக்டீரியா வராமல் தடுக்கும். ஆகவே அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 2 டேபிள் ஸ்பூன் பூண்டின் பற்களை அரைத்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, பின் ஷாம்பு சேர்த்து குளிக்க வேண்டும்.

* வெங்காயம்: வெங்காயத்தை அரைத்து, அதனை ஸ்காப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளித்தால், தலையில் உள்ள பொடுகு முற்றிலும் போய்விடும். மேலும் வெங்காய நாற்றத்தை நீக்குவதற்கு வேண்டுமென்றால் எலுமிச்சையின் சாற்றை இறுதியில் தடவி குளித்தால், அந்த நாற்றத்தை தடுக்கலாம்.

English summary

Tips To Get Rid Of Dandruff | தலையில் உள்ள பொடுகை நீக்க சில ஈஸியான டிப்ஸ்...

Home remedies for dandruff is a natural way to get rid of dandruff, a common scalp disorder. A person looking for dandruff treatment can cure dandruff at home with the aid of naturally available remedies.
Desktop Bottom Promotion