For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியமான... நீளமான... கூந்தல் வளர வேண்டுமா...?

By Maha
|

Hair Care
எப்போதும், எங்கும் அழகாக இருக்க வேண்டும் என்பதே பலரது பெரிய கனவாக இருக்கும். இப்படி அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக பலர் அடிக்கடி செயற்கையான கெமிக்கல் கலந்த பல அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும் அழகு செய்வதற்கு பல அழகு நிலையங்களும் இருக்கின்றன. ஆனால் அதற்கு நிறைய செலவாகும். அதிலும் கூந்தலை பராமரித்து அழகு செய்வதற்கு நிறையவே செலவாகும். ஆகவே அவ்வாறு கூந்தலை பராமரித்து நீளமாக, அழகாக, ஆரோக்கியமாக வளர்ப்பதற்கு இயற்கையான 4 சிறந்த வழிகள் இருக்கிறது. அது என்னென்ன சிறந்த வழிகள் என்று படித்துப் பாருங்களேன்...

ஆரோக்கியமான கூந்தல் வளருவதற்கு...

1. தலை மசாஜ் : பொதுவாக முடியானது வளராமல், உதிருவதற்கு பெரும் காரணமே டென்சன் அடைவது தான். ஆகவே அத்தகைய டென்சனை குறைக்க தலைக்கு மசாஜ் செய்வதே சிறந்தது. முதலில் கையில் எண்ணெய் ஊற்றி நன்கு தேய்த்து, பின் அந்த எண்ணெய் கையை தலையில் கூந்தலுக்கிடையில் விட்டு, விரல்களால் மசாஜ் செய்யவும். இவ்வாறு தினமும் 10 நிமிடம் செய்து வந்தால், டென்சன் குறைவதோடு கூந்தலும் நன்கு வளரும்.

2. காய்கறிகள் : கூந்தலுக்கு காய்கறிகளை பயன்படுத்துவதன் மூலமும் கூந்தலானது வளரும். இரு நம்பமுடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் உண்மையில் கூந்தலானது நன்கு வளரும். அதிலும் குடைமிளகாயை சுடு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பிறகு நன்கு குளிர்ந்ததும், அந்த தண்ணீரை தலைக்கு விட்டு மசாஜ் செய்தால் தலையில் இருக்கும் பொடுகு போய், கூந்தல் உதிராமல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். மேலும் வெங்காயத்தை ஷாம்புவுடன் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தாலும் கூந்தலானது நீளமாக வளரும். அதனை 15 நாட்கள் தொடர்ந்து செய்து, பின் தலையை சாதாரண ஷாம்புவால் அலசினால், பொடுகு இல்லாமல் கூந்தலானது நீளமாக வளரும்.

3. உணவு : அதிகமான பொட்டாசியம் மற்றும் தாதுப்பொருட்கள் நிறைந்த உணவை உண்பதாலும் கூந்தலானது நன்கு வளரும். அதிலும் மீன், சீஸ், சிக்கன் போன்றவற்றை உண்டால் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும். மேலும் தாதுப்பொருட்கள் கூந்தலுக்கு வலுவைத் தருவதோடு, ஆரோக்கியமாக வளரவும் உதவுகிறது.

4. தண்ணீர் : தண்ணீரானது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. இது உலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். ஏனெனில் தண்ணீரானது உடலில் இருக்கும் அழுக்குகளை நீக்கும். அதிலும் ஆரோக்கியமான கூந்தல் வளர உருளைக்கிழங்கை தண்ணீரில் வேக வைத்து அந்த தண்ணீரை விட்டு கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தலானது நன்கு வளர்ச்சி அடையும்.

இத்தகைய மேற்கூரிய செயல்களைச் செய்தால் கூந்தலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, நீளமாகவும் வளரும்.

English summary

hair growth tips in 4 ways | ஆரோக்கியமான... நீளமான... கூந்தல் வளர வேண்டுமா...?

To get beautiful skin is a great achievement for many who have it. But for those who don't possess beautiful skin there are various ways you can get there. To get a healthy hair, we give you natural ways for hair care. For some suffering from hair growth to achieve it you can follow these easy ways naturally.
Story first published: Wednesday, June 27, 2012, 12:42 [IST]
Desktop Bottom Promotion