For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகை அதிகரிக்க உப்பை எப்படி பயன்படுத்துவது என்று தெரியுமா?

இங்கு ஒருவரது அழகை அதிகரிக்க உப்பை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது.

|

உப்பு உணவிற்கு சுவையைத் தர பயன்படுவது மட்டுமின்றி, நம் அழகை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். ஒருவர் தங்களது அழகை அதிகரிக்க க்ரீம்களைத் தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலே சரும அழகை மேம்படுத்தலாம்.

Ways To Use Salt For Gorgeous Skin, Hair, Nails And Teeth

முக்கியமாக உப்பு சரும அழகை மட்டுமின்றி, தலைமுடி, நகம், பற்கள் போன்றவற்றின் அழகையும் மேம்படுத்த உதவும். இங்கு ஒருவரது அழகை அதிகரிக்க உப்பை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்கரப்

ஸ்கரப்

உப்பு சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, சரும பொலிவை அதிகரித்துக் காட்டும். அதற்கு 1/2 கப் ஆலிவ் ஆயில், 1/4 கப் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, குளிக்கும் முன், முகம், கை, கால் மற்றும் உடலில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும்.

ஃபேஸ் மாஸ்க்

ஃபேஸ் மாஸ்க்

உப்பு சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். அதற்கு 2 டீஸ்பூன் கல் உப்புடன், 4 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

பொடுகு

பொடுகு

உப்பு ஸ்கால்ப்பில் அசிங்கமாக வெளிவரும் செதில்களை நீக்கி, ஸ்கால்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். அதற்கு 2 டீஸ்பூன் உப்பை ஸ்கால்ப்பில் படும்படி ஈரமான விரல்களால் மென்மையாக 10-15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

அசிங்கமான நகம்

அசிங்கமான நகம்

உப்பு நகங்களை வலிமையாகவும், க்யூட்டிக்கிளை மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும். அதற்கு 1/2 கப் வெதுவெதுப்பான நீரில், 1 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அந்நீரில் விரல் நகங்களை 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

மஞ்சள் பற்கள்

மஞ்சள் பற்கள்

உப்பு ஒரு நல்ல அழுக்கு மற்றும் கறை நீக்கியும் கூட. அத்தகைய உப்பை 1 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து, ஈரமான டூத் பிரஷ் பயன்படுத்தி பற்களைத் துலக்க வேண்டும். இதனால் பற்களில் உள்ள மஞ்சள் பற்கள் விரைவில் நீங்கும்.

நேச்சுரல் மௌத் வாஷ்

நேச்சுரல் மௌத் வாஷ்

வாய் துர்நாற்ற பிரச்சனை இருந்தால், அதை உப்பு கொண்டு எளிதில் போக்கலாம். அதற்கு 1/4 கப் நீரில் 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து, அந்நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Use Salt For Gorgeous Skin, Hair, Nails And Teeth

Here are some ways to use salt for gorgeous skin, hair, nails and teeth. Read on to know more...
Desktop Bottom Promotion