For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறையை மஞ்சளை வைத்து எப்படி போக்குவது என தெரியுமா?

பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறையை மஞ்சளை வைத்து எப்படி போக்குவது என தெரியுமா? இங்க படிங்க.

By Sakthi
|

பற்களில் மஞ்சள் கறை இருப்பது இயல்பாக நீங்கள் சிரிக்கும் முறையை கூட பாதிக்கும். எங்கு யாராவது நமது பற்களில் மஞ்சள் கறை இருப்பதை கண்டால் கேலி, கிண்டல் செய்வார்களோ என வாய் திறக்காமல் மிகவும் ஃபார்மலாக சிரிப்பவர்கள் பல பேர் இருக்கிறார்கள்.

பலரும் பல டூத் பேஸ்ட்டை பயன்படுத்தியும் இந்த பற்களின் மஞ்சள் கரையை போக்க முடியாமல் தவிப்பதுண்டு. சிலர் எதுவும் வேலைக்கு ஆகவில்லை எனில், நேராக பல் மருத்துவரிடம் சென்று செயற்கை முறைகளை பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள்.

கவலையை விடுங்கள் மிக எளிய இயற்கை முறையில் பற்களில் படிந்திற்கும் மஞ்சள் கறையை போக்க முடியும். முள்ளை முள்ளால் எடுப்பது போல, மஞ்சள் கறையை மஞ்சளை கொண்டே போக்க முடியும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருள்

தேவையான பொருள்

கடைகளில் விற்கும் மஞ்சள் பொடியை தேர்வு செய்யாமல், இயற்கையான மஞ்சளை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இயற்கை மஞ்சளில் தான் செயற்கை இரசாயன கலப்பு இருக்காது.

MOST READ: முகர்ந்தாலே பல நோய்களை குணப்படுத்தும் திருநீற்றுப் பச்சிலை... உங்க வீட்ல இல்லயா?

பயன்பாட்டு முறை

பயன்பாட்டு முறை

உங்கள் டூத் பிரஷை ஈரப்படுத்தி எடுத்துக் கொள்ளுங்கள். மிக குறைவான அரை கால் பங்கு (1/8) மஞ்சள் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு மஞ்சளை தொட்டு மென்மையாக பிரஷ் செய்யுங்கள்.

3 - 5 நிமிடங்கள்

3 - 5 நிமிடங்கள்

உடனே வாய் கழுவிவிட கூடாது. பிரஷ் செய்த பிறகு 3-5 நிமிடங்கள் அந்த மஞ்சள் பற்களில் இருக்கும் படி பேசாமல் அமைதியாக உட்கார்ந்துக் கொள்ளுங்கள்.

மீண்டும் பல் துலக்குங்கள்

மீண்டும் பல் துலக்குங்கள்

5 நிமிடங்கள் கழித்து நன்கு வாய் கொப்பளித்து கழுவி கொள்ளவும். பிறகு சாதாரண பல் போடி அல்லது டூத் பேஸ்ட் பயன்படுத்தி மீண்டும் பல் துலக்குங்கள். இது வாயில் வீசும் அந்த மஞ்சளின் வாசம் போவதற்கு உதவும்.

ஒரு வாரம்

ஒரு வாரம்

தொடர்ந்து ஒரு வாரம் இதை பின்பற்றி வந்தால் பற்களில் படிந்திருக்கும் அந்த மஞ்சள் கறையை எளிதாக போக்கிவிடலாம். நீங்கள் இதை பின்பற்றிய முதல் நாளிலேயே மாற்றத்தை உணர முடியும்.

மஞ்சள் டூத் பேஸ்ட்

மஞ்சள் டூத் பேஸ்ட்

தேவையான பொருட்கள்

1/4 டீஸ்பூன் இயற்கை மஞ்சள் பொடி ;

1/8 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்

MOST READ: சர்க்கரை நோயை அடியோடு காலி பண்ணும் முருங்கை டீ... ட்ரை பண்ணிப் பாருங்க...

மஞ்சள் டூத் பேஸ்ட்

மஞ்சள் டூத் பேஸ்ட்

செய்முறை

மஞ்சள் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய்யை பேஸ்ட் போன்று குழைத்து கொள்ளுங்கள். வெறுமென தண்ணீர் கலந்து பயன்படுத்துவதை விட இது இன்னும் சிறந்த பயனளிக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில், தேங்காய் எண்ணெயும் சிறந்த இயற்கை சுத்திகரிப்பு மூலப்பொருள் ஆகும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி ஆயில் புல்லிங் செய்து வந்தாலும் கூட வாய் துர்நாற்றம், பற்களில் மஞ்சள் கறை போன்றவற்றில் இருந்து சீரிய முறையில் தீர்வுக் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: teeth beauty பல் அழகு
English summary

How To Whiten Teeth Naturally With Turmeric

How To Whiten Teeth Naturally With Turmeric, read here in tamil.
Desktop Bottom Promotion