For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்குளில் ஏற்படும் அரிப்பைத் தடுப்பது எப்படி?

By Maha
|

உடலில் அதிகம் வியர்வை வெளியேறும் ஓர் பகுதி தான் அக்குள். இப்பகுதி மிகவும் சென்சிடிவ்வானதும் கூட. இத்தகைய பகுதியில் சிலருக்கு கடுமையான அரிப்புக்கள் ஏற்படும். இப்படி அரிப்புக்கள் ஏற்பட்டால் அக்குளானது சிவப்பு அல்லது மிகவும் கருமையான நிறத்தில் காணப்படுவதோடு, சில நேரங்களில் அவ்விடத்தில் தோல் உரிய ஆரம்பிக்கும் மற்றும் கடுமையான துர்நாற்றம் வீசும்.

இந்நிலை மோசமானால், அதனால் வறட்சி அதிகமாகி வெடிப்புக்கள் ஏற்பட்டு, பயங்கரமான வலியை சந்திக்க நேரிடும். அக்குளில் இப்படி அரிப்பு ஏற்படுவதற்கு கெமிக்கல் பொருட்களை அவ்விடத்தில் அதிகம் பயன்படுத்துவது, அதிகமாக வியர்வை வெளியேறுவது, அக்குளை இறுக்குமாறான உடை அணிவது, மோசமான சுகாதாரம் போன்றவைகள் தான் முக்கிய காரணங்களாகும்.

சரி, இப்போது அக்குளில் ஏற்படும் அரிப்பை எளிமையான வழிகளில் எப்படி போக்குவது என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐஸ் கட்டி ஒத்தடம்

ஐஸ் கட்டி ஒத்தடம்

ஐஸ் கட்டிகளை காட்டன் துணியில் வைத்து மடித்து, அதனைக் கொண்டு அரிப்பு ஏற்படும் அக்குளில் 10 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்க வேண்ம். இப்படி தினமும் சில முறை செய்து வர, விரைவில் அக்குள் அரிப்பு நீங்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எணணெயை தினமும் அக்குளில் தடவி வர, அக்குள் அரிப்பு நீங்கும். மற்றொரு முறை, 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 1 டீஸ்பூன் லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து, காட்டன் பயன்படுத்தி அக்குளில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி, உலர வைக்கவும். இப்படி தினமும் 2 முறை என சில நாட்கள் பின்பற்றி வர, அக்குள் அரிப்பு நீங்கும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை ஜெல்லை அக்குளில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை செய்து வந்தால், சீக்கிரம் அக்குள் அரிப்பு தடுக்கப்படும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஒரு கப் ஓட்ஸை குளிக்கும் டப்பில் போட்டு, வெதுவெதுப்பான நீர் நிரப்பி, அதில் சிறிது லாவெண்டர் எண்ணெய் சேர்த்து, அந்நீரில் 15-20 நிமிடம் உட்கார வேண்டும். முக்கியமாக அப்படி உட்காரும் போது, அக்குள் நீரில் முழுமையாக மூழ்கி இருக்க வேண்டும்.

வேப்பிலை

வேப்பிலை

ஒரு கையளவு வேப்பிலையை ஒரு பாத்திர நீரில் போட்டு, நன்கு 20 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அந்நீரை வடிகட்டி, குளிர வைத்து, அந்நீரால் தினமும் 2-3 முறை அக்குளைக் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அக்குளில் அரிப்பை ஏற்படுத்தும் கிருமிகள் அழிக்கப்பட்டு, அரிப்புக்கள் நீங்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

ஒரு பகுதி பேக்கிங் சோடாவை எடுத்து 3 பகுதி நீர் சேர்த்து கலந்து, அந்நீரால் பாதிக்கப்பட்ட பகுதியைத் தடவி, 2 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு ஒரு முறை என சில நாட்கள் பின்பற்றி வர, அக்குள் அரிப்பு விரைவில் குணமாகும். முக்கியமாக பேக்கிங் சோடாவை அக்குளில் 2 நிமிடங்களுக்கு மேல் வைக்க வேண்டாம். இல்லாவிட்டால், அது நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

1 டீஸ்பூன் சுத்தமான ஆப்பிள் சீடர் வினிகரை, 1/2 கப் நீரில் கலந்து, அரிப்புள்ள இடத்தில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை பின்பற்றி வர, சீக்கிரம் அக்குளில் ஏற்படும் அரிப்பு தடுக்கப்படும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து, அக்குளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வர, அக்குள் அரிப்பு நீங்கும். முக்கியமாக இச்செயலை அக்குளில் ஷேவிங் செய்த பின்னர் மேற்கொள்ள வேண்டாம். இல்லையெனில் அரிப்பு இன்னும் அதிகமாகும். மேலும் காயங்களும் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Get Rid of an Armpit Rash

How to get rid of an armpit rash? Here are some easy ways to get rid of an armpit rash. Take a look...
Story first published: Monday, January 4, 2016, 12:50 [IST]
Desktop Bottom Promotion