For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி?

By Maha
|

பாதங்களில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணம், போதிய பாத பராமரிப்புக்களைக் கொடுக்காமல் இருப்பது தான். பலரும் அழகைப் பராமரிக்கிறேன் என்ற பெயரில், தங்களது முகம், கை, கால்களுக்கு மட்டும் பராமரிப்புக்களைக் கொடுத்துவிட்டு, பாதங்களை மறந்துவிடுவார்கள். ஆனால் அழகு என்பது வெறும் அப்பகுதிகளில் மட்டுமல்ல, தலை முதல் பாதம் வரை நாம் சுத்தமாக பராமரிப்பதில் தான் உள்ளது.

குதிகால் வெடிப்பைப் போக்க சில சிம்பிளான டிப்ஸ்...

அதில் பாதங்களை அழகாக வைத்துக் கொள்ள அழகு நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பெடிக்யூர் சிறந்த வழி. இதைச் செய்ய அழகு நிலையங்களுக்குத் தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலேயே இவற்றை எளிமையாக செய்யலாம். இங்கு வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதை வாரம் ஒருமுறை பின்பற்றி வந்தாலே போதும், குதிகால் வெடிப்பு வருவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெடிக்யூர் செய்யத் தேவையான பொருட்கள்

பெடிக்யூர் செய்யத் தேவையான பொருட்கள்

* நெயில் பாலிஷ் ரிமூவர், காட்டன்

* ஒரு வாளி, வெதுவெதுப்பான நீர், எலுமிச்சை, ஷாம்பு, கல் உப்பு

* நெயில் கட்டர், மெருகேற்ற உதவும் கல் அல்லது பிரஷ் அல்லது நார்

* மாய்ஸ்சுரைசர் அல்லது எண்ணெய்

செய்முறை 1

செய்முறை 1

முதலில் கால் விரல் நகங்களில் உள்ள நெயில் பாலிஷை ரிமூவர் கொண்டு நீக்க வேண்டும். அதிலும் அந்த ரிமூவர் ஆல்கஹால் மற்றும் அசிட்டோன் இல்லாததாக இருக்க வேண்டும்.

செய்முறை 2

செய்முறை 2

பின் ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் கல் உப்பு, சிறிது ஷாம்பு மற்றும் பாதி எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அந்நீரில் கால்களை 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.

செய்முறை 3

செய்முறை 3

பின்பு மெருகேற்ற உதவும் கல் அல்லது பிரஷ் அல்லது நார் கொண்டு பாதங்கள் மென்மையாக தேய்த்து விட வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் விரைவில் வெளியேறிவிடும்.

செய்முறை 4

செய்முறை 4

அடுத்து நெயில் கட்டர் கொண்டு கால் விரலில் உள்ள நகங்களை வெட்டி நீக்கி விட்டு, நகங்களின் முனைகளை தேய்த்து விடுங்கள். இதனால் கால்விரல் நகங்கள் சீராகக் காணப்படும்.

செய்முறை 5

செய்முறை 5

இறுதியில் கால்களை ஒருமுறை நீரில் கழுவி, பின் துணியால் துடைத்து உலர வைத்து, மாய்ஸ்சுரைசர் அல்லது எண்ணெயைத் தடவ, பாதங்கள் பொலிவோடும், சுத்தமாகவும், வறட்சியின்றியும் காட்சியளிக்கும்.

குறிப்பு

குறிப்பு

இச்செயலை இரவில் படுக்கும் முன் செய்து, மாய்ஸ்சுரைசர் தடவிய பின் கால்களுக்கு காட்டன் சாக்ஸ் அணிந்து கொண்டால், பாதங்களில் உள்ள குதிகால் வெடிப்பு விரைவில் மறைவதைக் காணலாம். மேலும் இச்செயலை வாரம் ஒருமுறை செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Do A Pedicure At Home

How to give a pedicure at home? Follow our how to pedicure at home tips to get your feet looking pedicure perfect without going to salon.
Story first published: Wednesday, January 27, 2016, 13:42 [IST]
Desktop Bottom Promotion