For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களே! காதலர் தினத்தன்று அழகாக ஜொலிப்பதற்கான சில அழகு குறிப்புகள்!!!

By Viswa
|

காதலர் தினம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் பலரது இதயத்துடிப்பு உசைன் போல்ட்டை போல வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும். எத்தனை மாதங்களாக, வருடங்களாக மனதின் உள்ளே பொத்திப் பொத்தித் தேக்கி வைத்திருந்த காதலை, உங்கள் அன்பிற்கு உரியவரிடம் கொண்டு சேர்க்கும் தருணமல்லவா இது. ஆண்கள் பொதுவாக தங்களுக்குரிய பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர் என்று உங்களுக்கு தெரியுமா?

இயற்கையாகவே ஆண்கள், தங்கள் அழகு மீது கவலைப்படுவதே இல்லை. ஆனால், அவர்களது காதலியும், மனைவியும் மற்ற பெண்களை விட தனித்து அழகாக தெரிய வேண்டும் என்று எண்ணுவார்கள். இது, தேச எல்லைகளைக் கடந்து ஆண்களுக்கு மத்தியில் இருக்கும் ஒரு ஒற்றுமை. எந்த நாட்டு ஆடவராய் இருந்தாலும், அவர்கள் தங்கள் காதலி அழகாய் தெரிய வேண்டும் என்று தான் எண்ணுவார்கள்.

சரி, பொதுவாகவே தங்கள் காதலி அழகாக இருக்க வேண்டும் என்பது ஆண்களின் குணாதிசயமாக இருக்கும் போது, நீங்கள் எவ்வாறு காதலர் தினத்தன்று உங்கள் இதயக் கள்வனின் முன் தோற்றமளிக்க வேண்டும் என தெரியுமா? நீங்கள் எப்படி தோற்றமளித்தால் இதழ்கள் கூறுமுன்னரே உங்கள் இதயத்தை அவர் ஏற்றுக்கொள்வார் என தெரிந்துக் கொள்ள வேண்டுமா? வாருங்கள், மேலும் அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும புத்துணர்ச்சி

சரும புத்துணர்ச்சி

வெள்ளரியில் உள்ள இயற்கையான ஈரப்பதம் உங்களது சருமத்திற்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. அதேப்போல ஒரு தேக்கரண்டி கடலை மாவில் தயிர், சிறிதளவு தேன் மற்றும் பன்னீரை கலந்து முகத்தில் தடவி வந்தால், சருமத்தின் இறுக்கம் குறைந்து இலகுவாகி சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

முகப்பொலிவு

முகப்பொலிவு

நன்குக் காய்ச்சியப் பாலில் இருந்து எடுக்கப்பட்ட பாலாடையை இரவு தூங்குவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு மாஸ்க் போல முகத்தில் உபயோகப்படுத்தி பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பிரகாசிக்கும்.

கரும்புள்ளி

கரும்புள்ளி

உங்களது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை அகற்ற தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் முல்தானி மெட்டியை பன்னீரில் கலந்து முகத்தில் தடவவும். முல்தானி மெட்டி காய்ந்த பின் குளிர்ந்த நாளில் முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் விரைவில் குறைந்துவிடும்.

கூந்தல் பராமரிப்பு

கூந்தல் பராமரிப்பு

உங்கள் காதலனின் கைகளில், இதயம் சிக்கினால் பரவாயில்லை, கூந்தலும் சேர்ந்து சிக்கிக் கொண்டால்? காதலர் தினத்தன்று ரோஜாவை சூடிட கூந்தலும் ரோஜா இதழ்களை போல மிருதுவாகவும், பளபளப்பாகவும் சிக்கின்றி இருக்க ஆமணக்கு எண்ணெய்யைப் பயன்படுத்தி வந்தால் நல்ல பயனளிக்கும்.

மெஹந்தி

மெஹந்தி

மெஹந்தியில் இயற்கையாகவே உள்ள ஈரப்பதம் உங்கள் உள்ளங்கைகளை மிருதுவாக்கிட உதவுகிறது. அதுமட்டுமின்றி, உங்கள் காதலனுக்கு பிடித்ததுப் போல உங்கள் கைகளில் மெஹந்தியிட்டு சென்றால், அது உங்களுக்கு கூடுதல் பாஸ் மார்க் தரும் அல்லவா!

உதடு வெடிப்பு

உதடு வெடிப்பு

காதலை கூறிடும் வார்த்தைகள் மட்டும் இனியதாய் இருந்தால் போதுமா? உங்கள் உதடுகளும் இனியதாய் இருந்திட வேண்டும் அல்லவா. உதடு வெடிப்பை போக்கிட, தேனை உங்களது உதடுகள் மீது தடவி வந்தால் விரைவில் உதடு வெடிப்பு குறையும்.

சாக்லேட்

சாக்லேட்

சாக்லேட், காதலில் பரிசளிக்க மட்டும் அல்ல, உடல் சருமத்திற்கும் மிக நல்லது. இது நமது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை குறைக்கவும் மற்றும் சருமம் பளபளப்பாகவும் உதவுகிறது. அதனால், உங்கள் காதலரை காண செல்லும் போது சாக்லேட் வாங்கிக் கொண்டு மட்டும் போகாமல். நிறைய சாப்பிட்டுவிட்டும் செல்லுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Valentine's Day Special Beauty Tips For Glowing Skin

Here you have been suggested to do certain thing to look better in your valentines day.
Desktop Bottom Promotion