For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! உங்க அழகைப் பராமரிக்க நேரமில்லையா? இதோ சில சிம்பிள் டிப்ஸ்...

By Maha
|

பெண்கள் தான் தங்கள் அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். தற்போதைய ஆண்களும் தங்கள் அழகின் மீது அக்கறை கொண்டுள்ளனர். அதிலும் இன்றைய காலத்தில் அழகு இல்லாவிட்டால், யாரும் மதிப்பதில்லை. அக அழகைக் காண்பதற்கு பதிலாக புற அழகைத் தான் பலரும் முதலில் காண்கிறார்கள்.

பெண்களுக்கு ஏன் தாடி வைத்த ஆண்களைப் பிடிக்கிறது என்று தெரியுமா?

எனவே ஆண்களே இதுவரை நீங்கள் அழகு குறைவால் பல இடங்களில் சங்கடங்களை சந்தித்திருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில அழகு குறிப்புக்களை மனதில் கொண்டு பின்பற்றி வாருங்கள். இதனால் நீங்கள் உங்கள் அழகை அதிகரித்துக் கொள்ளலாம். முக்கியமாக இந்த அழகு குறிப்புகள் அனைத்தும் தங்களின் அழகைப் பராமரிக்க நேரமில்லாதவர்களுக்கு ஏற்றவாறு மிகவும் சிம்பிளாக இருக்கும்.

ஆண்களே! உங்க அழகை அதிகரிக்க வேண்டுமா? இதோ சில அட்டகாசமான டிப்ஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொடுகுத் தொல்லை

பொடுகுத் தொல்லை

நீங்கள் பொடுகுத் தொல்லையால் கஷ்டப்படுபவராயின், குளிர்ந்த நீரில் குளியுங்கள். இதனால் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

ஷேவிங்கிற்கு நேரமில்லை

ஷேவிங்கிற்கு நேரமில்லை

பல ஆண்களுக்கு காலையில் வேகமாக எழும் பழக்கமே இருக்காது. அதனால் ஷேவிங் செய்யாமல் சில நேரங்களில் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். நீங்களும் இப்பேற்பட்டவர்களாக இருந்தால், இரவிலேயே ஷேவிங் செய்துவிட்டு தூங்குங்கள். இதனால் முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

அதிகப்படியான மது

அதிகப்படியான மது

ஆல்கஹாலில் சர்க்கரை அதிகம் இருக்கும். இவை சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். எனவே ஆல்கஹால் அதிகம் குடிக்கும் பழக்கம் இருந்தால், அவற்றை உடனடியாக குறைத்துக் கொள்ளுங்கள்.

தூக்கமின்மை

தூக்கமின்மை

தூக்கமின்மையால் உங்களின் கண்கள் பொலிவிழந்து, கருவளையங்களுடன் காணப்படுகிறதா? அப்படியெனில் சில்வர் ஸ்பூனை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து குளிர்ந்ததும், கண்களின் மேல் சிறிது நேரம் ஒத்தடம் கொடுங்கள். இதனால் உங்கள் கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

ஹேர் கட்

ஹேர் கட்

ஒவ்வொரு ஆணும் 2-3 வாரத்திற்கு ஒரு முறை ஹேர் கட் செய்து கொள்வது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஒருவேளை உங்களுக்கு முடியின் வளர்ச்சி குறைவாக இருந்தால், 3-4 வாரத்திற்கு ஒருமுறை ஹேர் கட் செய்து கொள்ளுங்கள். இதனால் முடி ஆரோக்கியம் மேம்படுவதோடு, உங்களின் தோற்றமும் மேம்படும்.

சரும வகை

சரும வகை

சருமத்தின் அழகை அதிகரிக்க க்ரீம்களைப் பயன்படுத்தும் முன், உங்கள் சருமத்தின் வகையைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் உங்கள் சருமத்திற்கு ஏற்ற க்ரீம்களைப் பயன்படுத்தி, உங்கள் சரும ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்தலாம். முக்கியமாக சரும வகையை தெரிந்து கொண்டு, அதற்கேற்ற க்ரீம்களைப் பயன்படுத்தினால், அந்த க்ரீம்களின் உண்மையான பலனைப் பெறலாம்.

மாய்ஸ்சுரைசர்

மாய்ஸ்சுரைசர்

பெண்கள் தான் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. மாய்ஸ்சுரைசர் என்பது ஆண், பெண் என இருவருக்கும் தயாரிக்கப்பட்டவையே. முக்கியமாக மாய்ஸ்சுரைசரின் நன்மை என்னவெனில், சருமத்தை வறட்சியடையாமல் பாதுகாக்கும். எனவே சருமம் வறட்சியடைந்து சரும செல்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், மாய்ஸ்சுரைசர் ஒரு நாளைக்கு 2-3 முறை பயன்படுத்துங்கள். இதனால் சருமம் அழகாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Grooming Tips That Will Change Your Life For Good

This article talks about grooming tips which can make a man look good.
Story first published: Monday, September 14, 2015, 13:19 [IST]
Desktop Bottom Promotion