For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடக்கும் போது வேதனையைத் தரும் குதிகால் வெடிப்பை போக்க சில டிப்ஸ்...

By Maha
|

பல நாட்களாக பலரையும் வேதனையில் மூழ்க வைக்கும் ஒரு பிரச்சனை தான் குதிகால் வெடிப்பு. இந்த குதிகால் வெடிப்பைப் போக்க பலரும் பல வழிகளை தேடிக் கொண்டிருப்பார்கள். அதில் பலரும் முயற்சித்த ஒன்று தான் குதிகால் வெடிப்பை போக்க கடைகளில் விற்கப்படும் க்ரீம். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும், குதிகால் வெடிப்பு போன பாடில்லை.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை நடக்கும் போது கடுமையான வலியைத் தரும் குதிகால் வெடிப்பைப் போக்க சில டிப்ஸ்களைக் கொடுத்துள்ளது. அவற்றை தவறாமல் அன்றாடம் பின்பற்றி வந்தால், குதிகால் வெடிப்பு போய்விடும். சரி, இப்போது வேதனையைத் தரும் குதிகால் வெடிப்பை எப்படி போக்குவது என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை வினிகர்

வெள்ளை வினிகர்

வெள்ளை வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அந்நீரில் கால்களை 20-25 நிமிடங்கள் ஊற வைத்து, மெருக்கேற்ற உதவும் கல்லைக் கொண்டு நன்கு தேய்த்து கழுவினால், இறந்த செல்கள் நீங்கி, வெடிப்புகள் மறைந்து குதிகால் மென்மையாக பட்டுப் போன்று இருக்கும்.

தயிர்

தயிர்

தயிரில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் மாய்ஸ்சுரைசிங் தன்மை, குதிகால் வெடிப்பை விரைவில் போக்கும். அதற்கு தயிரை வெள்ளை வினிகருடன் சேர்த்து கலந்து, அதனை குதிகாலில் தடவி நன்கு ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும்.

கொக்கோ அல்லது ஷியா வெண்ணெய்

கொக்கோ அல்லது ஷியா வெண்ணெய்

வெள்ளை வினிகருடன் சிறிது வெதுவெதுப்பான நீர் மற்றும் கொக்கோ அல்லது ஷியா வெண்ணெய் சேர்த்து கலந்து, அந்த கலவையினுள் குதிகாலை ஊற வைத்து பின் தேய்த்து கழுவ வேண்டும். இதனாலும் குதிகால் வெடிப்பு மறையும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

குதிகால் வெடிப்பை சரிசெய்ய குதிகால் வெடிப்பு ஏற்ற ஒன்று. அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதனுள் கால்களை ஊற வைத்து, தேய்த்து கழுவ வேண்டும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலை வினிகருடன் சேர்த்து கலந்து, குதிகால்களை மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து, மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு தேய்த்து கழுவினால், வினிகர் இறந்த செல்களை நீக்கி, ஆலிவ் ஆயில் வறட்சியை நீக்கும்.

தேன்

தேன்

வினிகரில் தேன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு குதிகாலை மசாஜ் செய்து நன்கு உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.

அரிசி மாவு

அரிசி மாவு

அரிசி மாவில், தேன், ஆலிவ் ஆயில் மற்றும் வினிகர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை வறட்சியடைந்த பாதங்களில் தடவி உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தவறாமல் செய்து வந்தால், பாதங்கள் மென்மையாக, வெடிப்பின்றி இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Easy And Successful Home Remedies For Cracked Heels

Here are some of the most easy and successful home remedies for cracked heels.
Desktop Bottom Promotion