For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களே! ஹேர் ஷேவ் பண்ணும் போது இந்த தப்பு பண்ணாதீங்க!!!

|

பெண்கள் கவர்ச்சியாக தோற்றமளிக்க உடலில் உள்ள முடிகளை ஷேவ் செய்வது வழக்கம். ஆனால், அவ்வாறு ஷேவிங் செய்யும் பெண்கள் பல தவறுகளை செய்கின்றனர். அதனால் அவர்களுக்கு சரும பிரச்சனைகள், சரும எரிச்சல்கள் எல்லாம் வருகின்றன. இவ்வாறு ஏற்படும் போது உடை அணிவதில் இருந்து இயல்பாக நடந்து செல்ல கூட முடியாத அளவு பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே சருமத்தில் முடிகளை அகற்ற ஷேவிங் செய்யும் பெண்கள் சில விஷயங்களை தெரிந்து செய்வது நல்லது. நீங்களாகவே சிலவற்றை தெரியாமல் செய்து, பின் அவதிக்குள்ளாகதீர்கள்.

பெண்களே! பிறப்புறுப்பை துர்நாற்றமின்றி வைத்துக் கொள்ள சில அற்புதமான வழிகள்!!!

பொதுவாக இந்த விஷயத்தில் அனைத்து பெண்களும் ஒரு மாதிரியான தவறுகளை தான் செய்கின்றனர். இதை சரிசெய்துக் கொள்ள அவார்கள் யாரிடமும் சென்று ஆலோசனை கேட்பதில்லை. பெண்களின் சங்கோஜம் தான் இதற்கு காரணம். தவறாக ஷேவிங் செய்து அதனால் ஏற்படும் அவதிகளை கூட தாங்கிக் கொள்வார்கள். ஆனால், அதை எப்படி சரி செய்வது என கேட்கமாட்டார்கள். சரி இனி, பொதுவாக கால்களில் ஷேவிங் செய்யும் போது பெண்கள் செய்யும் தவறுகள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...

குதிகால் வெடிப்பைப் போக்க சில சிம்பிளான டிப்ஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளிப்பதற்கு முன்பே ஷேவிங் செய்வது

குளிப்பதற்கு முன்பே ஷேவிங் செய்வது

எப்போதுமே பெண்கள் குளிப்பதற்கு முன்பே கால்களில் இருக்கும் முடியாய் ஷேவிங் செய்து விடுவார்கள். ஆனால், அப்படி செய்வதை விட, நீங்கள் குளித்த பிறகு ஷேவிங் செய்வது நல்லது. ஏனெனில், ஈரமான பிறகு முடி இலகுவாகிவிடும். எழுதாக ஷேவிங் செய்துவிடலாம். மற்றும் எரிச்சல் மிக குறைவாக இருக்கும்.

காலையில் முதல் வேலையாக செய்வது

காலையில் முதல் வேலையாக செய்வது

பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக கால்களில் உள்ள முடிகளை ஷேவிங் செய்வார்கள். ஆனால், இரவு முழுவதும் உறங்கி எழுந்த பின், சருமமும், முடியும் சற்று கடினமாக இருக்கும். அதனால், முடிந்த வரை இரவு தூங்க போகும் முன்னரே ஷேவிங் செய்துவிடுவது நல்லது.

ஃப்போம் உபயோகப்படுத்தாமல், சோப்புகாட்டியை பயன்படுத்துவது

ஃப்போம் உபயோகப்படுத்தாமல், சோப்புகாட்டியை பயன்படுத்துவது

சோப்புகாட்டியை கால்களில் ஷேவிங் செய்யப் பயன்படுத்துவது தவறு. இது, உங்களது கால்களை வறட்சி அடைய செய்யும். ஃப்போம் உபயோகப்படுத்துவதனால் உங்களது கால்களில் இருக்கும் முடிகள் இலகுவாகும். இதனால், நீங்கள் ஷேவிங் செய்யும் போது எரிச்சலோ அல்லது காயங்களோ ஏற்படாமல் இருக்கும்.

ஒரு ப்ளேடு உள்ள ரேசர்களை உபயோகப்படுத்துவது

ஒரு ப்ளேடு உள்ள ரேசர்களை உபயோகப்படுத்துவது

ஒரு ப்ளேடு உள்ள ரேசர்களை உபயோகப்படுத்தாதீர்கள். இது உங்களது சருமத்தை பதம் பார்த்துவிடும். எனவே மூன்று அல்லது நான்கு ப்ளேடுகள் உள்ள ரேசர்களை உபயோகப்படுத்துங்கள்.

மேல்வாறு ஷேவிங் செய்த பின்னர், கீழ்வாறாக செய்வது

மேல்வாறு ஷேவிங் செய்த பின்னர், கீழ்வாறாக செய்வது

எப்போதுமே கால்களில் உள்ள முடிகளை ஷேவிங் செய்யும் போது முதலில் கீழ்வாறாக ஷேவிங் செய்யுங்கள். பின்பு நன்கு நீரில் கழுவிய பிறகு. மறுபடியும் ஃப்போம் அப்பளை செய்து, மேல்வாறாக ஷேவிங் செய்யுங்கள். ஒருவேளை உங்களது சருமம் மிக மென்மையாக இருந்தால் மேல்வாறு ஷேவிங் செய்வதை தவிர்த்துவிடுங்கள்.

ஷேவிங் லோஷன்

ஷேவிங் லோஷன்

ஷேவிங் செய்யும் போது, எப்போதும் ஷேவிங் லோஷன் வைத்திருக்க வேண்டும். ஒருவேளை எரிச்சல் ஏற்பட்டாலோ அல்லது சிராய்ப்புகள் ஏற்பட்டாலோ லோஷனை உபயோகப்படுத்துவது அவசியம். இல்லையெனில் காயங்கள் எளிதில் ஆறாது.

ரேசர் ப்ளேடுகளை மாற்றாது இருப்பது

ரேசர் ப்ளேடுகளை மாற்றாது இருப்பது

கண்டிப்பாக ஒருமுறை பயன்ப்படுத்திய ரேசர் ப்ளேடுகளை மறுமுறை பயன்படுத்த வேண்டாம். பழைய ப்ளேடுகளை பயன்படுத்துவதனால், நிறைய எரிச்சல்கள், சிராய்ப்புகள் மற்றும் சருமத் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, ஒரு ப்ளேடை ஒருமுறை மட்டுமே பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Mistakes You Make While Shaving Legs

Do you know about that, 7 mistakes you make while shaving legs. if no, read here.
Desktop Bottom Promotion