For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடியை பிடிங்குவது நல்லதா... கெட்டதா...?

By Boopathi Lakshmanan
|

தேவையற்ற ரோமத்தை பிடுங்கி எடுப்பதற்கு உதவும் கருவி தான் டிவீசர். இதை கொண்டு முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை பிடிங்கி விடுவார்கள். பொதுவாக புருவம், கன்னம், மேல் உதடு, தாடை ஆகிய இடங்களில் உள்ள தேவையற்ற முடியை பெண்கள் இதை கொண்டு பிடுங்குவார்கள்.

இவை முடிகளை ஆழத்திலிருந்து பிடுங்கி விடும். இதை பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு கேள்வி உண்டு. இதை பயன்படுத்துவது சரியா அல்லது தவறா? நாம் ரோமங்களை நீக்குவதற்காக எடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. இதற்கும் நன்மை தீமை என்று இரண்டு பக்கங்கள் உண்டு. இந்த கருத்துக்களை குறித்து நாம் இப்போது பார்ப்போம்.

சில தவறான அழகுக்குறிப்புகள் பற்றிய உண்மைகள்!!!

ஒரு வேளை இதற்கு நீங்கள் புதிதாக இருந்தாலோ அல்லது இப்போது தான் இதை கற்றுக் கொள்ள முயற்சி செய்தாலோ இதன் நன்மை மற்றும் தீமைகள் பற்றி அறிந்துக்கொண்டு பின்னர் பயன்படுத்துங்கள். இதனால் உங்களுக்கு உள்ள சந்தேகங்களும் தீர்ந்துவிடும்.

Tweezing: Good or Bad?

நன்மைகள்:

எளிய முறை: இந்த முறையில் தேவையற்ற ரோமங்களை எளிதில் நீக்க முடியும். இதை பயன்படுத்துவதற்கு நாம் கலை நிபுணராக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. தற்காலிகமாக முடியை எடுக்கும் முயற்சியில் இவைகளை பயன்படுத்தி திருப்தி அடையலாம்.

விலை குறைவு: டிவீசரை ஒரு முறை வாங்கினால் போதும், பார்லருக்கு சென்று புருவம் மற்றும் மேல் உதடு முடிகளை எடுக்கும் செலவு மீதமாகிறது. இதை பயன்படுத்துவதில் நீங்கள் சிறந்தவர்களாகிவிட்டால் அது இன்னும் சிறந்த கருவியாகிவிடும். உங்களுக்கு ஏற்ற நேரத்தில் இதை இலவசமாக செய்து கொள்ளலாம்.

குறைந்த வலி: நூல் மூலம் எடுக்கும் வலி இதில் இருக்காது. ஓவ்வொரு முடியாக பிடுங்கும் போது வலி குறைவாக இருக்கும். நமது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் தேவையற்றது என்று எண்ணும் இடங்களில் உள்ள முடிகளை எளிதாக எடுத்து விட முடியும்.

நிபுணராக இருக்கத் தேவையில்லை: இதை நீங்கள் உங்களுக்கு செய்வதற்கு ஒரு அழகு கலை நிபுணராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை நீங்கள் திரும்பத் திரும்ப செய்து பார்த்து நன்கு கற்ற பின்னர் உங்களை விட சிறந்த முறையில் இதை செய்வதற்கு வேறு எவரும் தேவைப்பட மாட்டார்கள். நாளடைவில் இது உங்களுக்கு சிறந்த கலையாகவே மாறி விடுகிறது.

தீமைகள்:

தடியான ரோமங்கள்: மிகத் தடியான அல்லது ஆழ்ந்த வேர் கொண்ட ரோமங்களை பிடுங்குவது நல்லதன்று. இவை உள் வளர்ந்த முடிகளை வளரச் செய்கின்றன. இதனால் வீக்கம், எரிச்சல், தழும்பு ஆகியவை ஏற்படலாம்.

சதையை தவறாக இழுப்பது: முடி என்று நினைத்து சதையை தவறாக இழுப்பதால் காயம் ஏற்படலாம். ஆகையால் இதை செய்யும் போது கவனத்துடன் செய்ய வேண்டும். ஆனால் திரும்பத் திரும்ப செய்து பழகும் போது இது எளிதாகும்.

நேரம்: முடியை எடுக்க பயன்படும் மற்ற வகைகளை விட, இந்த முறை அதிக நேரத்தை விழுங்கும். முடியின் தன்மை மற்றும் எவ்வளவு முடி ஆகியவற்றைப் பொறுத்து பயன்பாட்டின் நேரம் அதிகமாகும். ஒவ்வொரு முடியாக பிடுங்குவதால் நேரம் அதிகமாகும். இது அவ்வப்போது மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டிய தற்காலிக முறை தான்.

கற்றுக் கொள்வதற்கு முன் கடினமானது: அதிக முடியுள்ள இடங்களில் இதை பயன்படுத்துவது கடினமாக இருக்கிறது. புதிதாக பயன்படுத்துபவர்கள் இக்கலையை நன்கு கற்ற பிறகு மட்டுமே நிறைய முடியை நீக்க முயற்சிக்கலாம். ஆனால் அதற்காக சற்றே கடினமாக பயிற்சி செய்ய வேண்டியிருக்கும்.

English summary

Tweezing: Good or Bad?

Here are some of the pros and cons of using tweezers for hair removal. Before opting tweezing for removing your unwanted hairs, go through these pros and cons of the technique.
Desktop Bottom Promotion