For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தென்னிந்திய பெண்களின் சில அழகு ரகசியங்கள்!!!

By Karthikeyan Manickam
|

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பெண்கள் ஒவ்வொரு விதத்திலும் அழகு என்றாலும், தென்னிந்தியப் பெண்களின் அழகு என்றாலே ஒரு தனி ரசனை தான். தென்னிந்தியப் பெண்களின் பளபளக்கும் சருமங்களுக்கும், கருகரு கூந்தலுக்கும், பெரிய அழகிய கருமையான கண்களுக்கும் வட இந்தியப் பெண்களே பொறாமை கொள்ளும் போது, ஆண்கள் அனைவரும் அடிமையாகவே ஆகி விடுவார்கள்.

பெண்களே! அழகைக் கெடுக்கும் தொங்கும் மார்பகங்களை சரிசெய்ய சில அட்டகாசமான வழிகள்!!!

கலாச்சார உடையழகிலும், நடையழகிலும், உருவ அழகிலும் பின்னிப் பெடலெடுப்பதில் தென்னிந்தியப் பெண்கள் வல்லவர்கள். அவர்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ளும் விதமும் ஒரு தனி அழகு தான்! பெரும்பாலும் இயற்கையான பொருட்களைக் கொண்டே கலாச்சார ரீதியில் அவர்கள் தங்கள் அழகை மெருகேற்றிக் கொள்வார்கள் என்பது தான் ரகசியம்!

தென்னிந்தியப் பெண்கள் பல வழிகளில் தங்களை அழகுபடுத்திக் கொள்கிறார்கள். அவற்றில் 10 முக்கிய அழகுக் குறிப்புகளின் விவரம் இதோ...

கருப்பா இருந்தாலும் களையா தெரிய டெய்லி 10 நிமிடம் செலவழிச்சா போதும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய்

தேங்காய்

தென்னிந்தியப் பெண்கள் தங்கள் அழகை அதிகரித்துக் காட்டுவதில் தேங்காய் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. அவர்கள் தங்கள் உணவில் அதிகமாக தேங்காயைச் சேர்த்துக் கொள்வதால் அவர்கள் அழகு அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. தேங்காய் சட்னி, தேங்காய் சாதம், தேங்காய் ஊறுகாய், தேங்காய் புட்டு, தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய் என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. தேங்காய்த் தண்ணீர் குடிப்பதால் அவர்களுடைய முக அழகு அதிகரிக்கிறது.

யோகா

யோகா

பெரும்பாலான தென்னிந்தியப் பெண்கள் யோகா செய்து வருவதாலேயே அவர்களால் தங்கள் உடம்பை படு 'சிக்'கென்று வைத்துக் கொள்கிறார்கள். அவர்களுடைய அங்கங்களின் முக்கிய வளைவுகள் அனைத்துக்கும் காரணம் யோகா ஆகும். சரும சுருக்கங்கள், பருக்கள், செரிமானமின்மை, வயோதிகம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை அவர்கள் யோகா மூலம் வென்று விடுகிறார்கள். யோகா செய்வதால் அவர்களுடைய அக அழகு மட்டும் அதிகரிப்பதில்லை; புற அழகான மன அமைதியும் அவர்களுக்குக் கிடைக்கிறது.

ஆயுர்வேதம்

ஆயுர்வேதம்

இயற்கை வழியில் ஆயுர்வேதம் செய்யும் மாயங்கள் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த ஆயுர்வேத சமாச்சாரங்கள் தான் தென்னிந்தியப் பெண்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் உள்ளன. பிறகு ஏன் அவர்கள் உடல் ஆரோக்கியமாக இருக்காது, முகம் ஜொலிக்காது, கூந்தல் பளபளப்பாகாது, சருமம் பொலிவடையாது?

மசாஜ்

மசாஜ்

மசாஜ் செய்வதன் மூலம் உலக மக்களே தங்களை அழகுப்படுத்திக் கொண்டாலும், தென்னிந்தியப் பெண்கள் செய்து கொள்ளும் மசாஜில் பல ஆரோக்கியமான சமாச்சாரங்கள் நிறைந்துள்ளன. தலை முடி, சருமம் ஆகியவற்றை பலப்படுத்துவது மட்டுமல்ல, உடலின் பல உறுப்புகளும் மசாஜ் மூலம் சுறுசுறுப்படைகின்றன. தினமும் இரவு உறங்கச் செல்லும் முன், தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் எடுத்துக் கொள்வதால் தேகம் பொலிவடைகிறது; இரத்த ஓட்டம் சீராகிறது; நன்றாகத் தூங்கவும் முடியும்!

கண்கள்

கண்கள்

கருமையான அழகிய விழிகளுக்குச் சொந்தக்காரர்களான தென்னிந்தியப் பெண்கள், அதற்காகப் பலவிதமான யுக்திகளையும் கையாளுகின்றனர். கண்மை, காஜல் என்று பல அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதோடு, நல்லெண்ணெய் மற்றும் வெள்ளரிக்காயைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல இயற்கை வழிகளையும் நாடி தங்கள் கண்களை தென்னிந்தியப் பெண்கள் பராமரித்து வருகின்றனர்.

ஃபேஷியல்

ஃபேஷியல்

தென்னிந்தியப் பெண்கள் தங்கள் முக அழகை அதிகரித்துக் கொள்ள வீட்டிலேயே பல்வேறு இயற்கைப் பொருட்களைக் கொண்டு ஃபேஷியல் செய்து வருகிறார்கள். அதிலும் அவர்கள் போடும் ஃபேஷியல் பொருட்கள் அனைத்துமே சமையலறையில் இருப்பதே ஆகும். இதனால் தான் அவர்கள் முகத்தில் எவ்வித பருக்களும், தழும்புகளும், சுருக்கங்களும் இல்லாமல், முகம் எப்போதும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளது.

ஒழுங்கு

ஒழுங்கு

தென்னிந்தியப் பெண்களின் ஒழுங்கான வாழ்க்கை முறையும் அவர்கள் அழகாக இருப்பதற்கு ஒரு முக்கியமான காரணமாகும். தினமும் சுமார் எட்டு மணி நேரம் தூங்குவது, அதிகாலையில் எழுவது, பக்குவமான உணவுப் பழக்கம் என்று பலவிதமான ஒழுங்கு முறைகள் தென்னிந்தியப் பெண்களின் அழகை மிளிரச் செய்கின்றன என்றால் அதில் ஆச்சரியமில்லை!

தலை முடி

தலை முடி

பெரும்பாலான தென்னிந்தியப் பெண்களுக்கு அழகான, இயற்கையான, கருமையான, அடர்த்தியான கூந்தல் இருக்கும். தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துதல், வாரத்திற்கு இருமுறை ஷாம்பு போட்டுக் குளித்தல் உள்ளிட்ட பல வழிகளில் தங்கள் கூந்தலை அவர்கள் அழகாக பராமரித்து வருகிறார்கள்.

எளிய வழிகள்

எளிய வழிகள்

வீட்டிலேயே எளிமையாகவும், சாதாரணமாகவும் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் தென்னிந்தியப் பெண்கள் திறமைசாலிகள் ஆவர். முகத்திற்கும் உடம்புக்கும் மஞ்சள் பூசுவது, தலைமுடிக்கு ஹென்னா தடவுவது, தயிர்-எலுமிச்சை-வாழைப்பழம் என்று வீட்டில் கிடைக்கும் பொருட்களே பெரும்பாலான தென்னிந்தியப் பெண்களின் அழகு ஆயுதங்கள் ஆகும்.

நீர்

நீர்

குடிநீரை நிறையக் குடிப்பதால் உடலில் உள்ள பலவிதமான நச்சுப் பொருட்கள் களையப்படுகின்றன. தினமும் சுமார் இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடித்து வருவதாலும், தென்னிந்தியப் பெண்கள் அழகில் ஜொலிக்கிறார்கள்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10 South Indian Beauty Tips

Here are the top 10 beauty tips for south Indians that you can easily include in your beauty regimen:
Desktop Bottom Promotion