For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இயற்கையான முறையில் பளிச்சிடும் வெண்மையான பற்களைப் பெற சில வழிகள்!!!

By Boopathi Lakshmanan
|

இயற்கையான முறையில் பளிச்சிடும் வெண் பற்களை வீட்டிலேயே பெற முடியுமா என்ற கேள்விக்கு பளிச் என்று பதில் சொல்ல வேண்டுமானால் துளசி இருக்கிறது உங்கள் உதவிக்கு! பொதுவாகவே உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஏற்றது தான் துளசி. அதிலும் பற்களுக்கு பளிச்சிடும் வெண்மை நிறத்தைத் தருவதில் துளசிக்கு நிகர் வேறில்லை.

துளசியை பயன்படுத்தி உங்களுடைய பற்களின் மஞ்சள் கறையை நீக்கி, பளிச்சிடும் வெண்மை பெறுவதுடன், பையோரியா அல்லது பற்சிதைவு போன்ற பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும். மேலும் உங்களுடைய பற்களின் மஞ்சள் கறைகளைப் போக்க பல்வேறு வழிமுறைகள் ஆயுர்வேத முறையில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துளசி பொடி

துளசி பொடி

புத்துணர்ச்சியுடன் இருக்கும் துளசி இலைகளை எடுத்து, நிழலில் வைத்து காய வைக்கவும். அந்த இலைகள் முழுமையாக காய்ந்த பின்னர், அரைக்கவும். பல் துலக்குவதற்கு இந்த பொடியை பயன்படுத்தவும். விரல்களைப் பயன்படுத்தி உங்களுடைய பற்களை மென்மையாக தேய்த்து விடவோ அல்லது நீங்கள் தினமும் பயன்படுத்தும் பற்பசையுடன் சேர்த்தும் கூட, இந்த துளசி பொடியை பயன்படுத்தி பலன் பெறலாம்.

கருவேல மரம்

கருவேல மரம்

பற்களின் நலனே செவ்வனே பராமரிக்கும் மரங்களில் ஒன்றாக கருவேல மரம் உள்ளது. இயற்கையான பற்பசைகளை தயார் செய்வதற்காக இந்த மரத்தின் சாறு பயன்படுகிறது. இந்த பற்பசைகளும் கூட சந்தைகளில் கிடைக்கின்றன. இந்த மரத்தின் கிளைகளில் காணப்படும் டானின் என்ற பொருள் உங்களுடைய மஞ்சள் கறை படிந்த பற்களை வெண்மையாக்கிவிடும்.

ஆல மரம்

ஆல மரம்

பற்களை வெள்ளையாக்கும் திறன் ஆலமரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் வேர்களில் அல்லது விழுதுகளில் உள்ளன எனலாம். இந்த விழுதுகளில் உள்ள சாறுகள் உங்கள் பற்களை வெண்மையாக்கும்.

ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி, நாலும் ரெண்டும் சொல்லுக்கு உறுதி என்று சும்மாவா சொன்னார்கள் நம் பெரியோர்கள்?

வேம்பு

வேம்பு

இந்த மரம் பற்களை வெண்மையாக்குதோடு மட்டுமல்லாமல், இம்மரத்தின் கிளைகளிலுள்ள ஆன்டி-செப்டிக் குணங்கள் வாய் துர்நாற்றத்தையும், சொத்தைப் பல் மற்றும் பற்சிதைவையும் குணப்படுத்தும்.

ஆயில் புல்லிங்

ஆயில் புல்லிங்

ஆம், ஆயில் புல்லிங் செய்து உங்களுடைய பற்களை வெண்மையாக்கிட முடியும். சிறந்த ஆரோக்கியத்திற்காக ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படும் ஆயில் புல்லிங் ஒன்றல்ல, இரண்டல்ல என பல்வேறு உடல் உபாதைகளிலிருந்து நமக்கு விடுதலை அளிக்கிறது. மூட்டு வலி, ஆர்த்ரிடிஸ், ஒற்றைத் தலைவலி, சைனஸ் மற்றும் பிற அலர்ஜிகள் என எண்ணற்ற பிரச்சனைகளை ஆயில் புல்லிங் மூலம் சரி செய்ய முடியும். இந்த முறை மேம்பட்டு வரும் போது, பார்வை பலம் பெறுவதும், மனம் தெளிவடைவதும், முடி வளர்ச்சி அதிகரிப்பதும், செரிமானம் சரியாவதும் மற்றும் முக்கியமாக பற்கள் வெண்மையடைவதும் என பிற விளைவுகளும் ஏற்படுகின்றன. இதன் மூலம் உங்களுடைய பற்கள் வெண்மையடைவதோடு மட்டுமல்லாமல், பற்களில் உள்ள பாக்டீரியா, கறைகள், ஈறு அழற்சி ஆகியவைகளும் காணாமல் போய்விடும்! இதன் மூலம் வெண்மையான மற்றும் ஆரோக்கியமான பற்கள் கிடைக்கும். நீங்கள் வாய்க்குள் கொப்புளிக்கும் எண்ணெயானது, பாக்டீரியாக்கள், தொற்றுக் கிருமிகள் மற்றும் உங்களுடைய பற்கள் மற்றும் சளியிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி விடுகின்றது. என்ன சார், ஆயில் புல்லிங்கிற்கு தயாராகி விட்டீர்களா?

சமையல் சோடா

சமையல் சோடா

சமையல் சோடா பற்களிலுள்ள மஞ்சள் கறைகளை அகற்ற காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மிகவும் திறன் வாய்ந்த வழிமுறையாகும். ஆனால், சமையல் சோடாவை பயன்படுத்துவதால் ஏற்படும் மற்ற விளைவுகளைப் பற்றியும் நீங்கள் யோசிக்க வேண்டும். சமையல் சோடாவில் உள்ள அரிக்கும் தன்மையால் பற்களிலுள்ள எனாமல் காணாமல் போய் விடும். ஆனால், இந்த அரிப்புத் தன்மை தான் பற்களிலுள்ள தொற்றுகளையும், கறைகளையும் நீக்கப் பயன்படுகிறது என்பதையும் நினைவில் கொள்ளவும். சமையல் சோடாவுடன் நீங்கள் எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தினால், அது உங்கள் பற்களின் எனாமல்களில் உள்ள கால்சியத்தின் சில பகுதிகளை வெளிப்படுத்தி, பற்களை மேலும் பளிச்சிட வைக்கும். சமையல் சோடா உங்களுடைய பற்களை உடனடியாக வெண்மைப்படுத்திக் காட்டும் என்றாலும், நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தினால் பற்களின் எனாமலுக்கு அதுவே தலைவலியாகிப் போகும். எனினும், சமையல் சோடாவை உங்களுக்கான தீர்வாக எடுத்துக் கொண்டால், எலுமிச்சை சாறு, உப்பு கலவையுடன் கலந்து பசையாகப் பயன்படுத்தவும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியை இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள்.அதில் பாதியை எடுத்துக் கொண்டு, சிறிதளவு சமையல் சோடாவை அதன் மீது போடுங்கள். இப்பொழுது பற்களில் ஸ்ட்ராபெர்ரியை தேய்க்கவும். மேலும், நீங்கள் சமையல் சோடாவை போடாமல், ஸ்ட்ராபெர்ரியை மட்டும் கூட தேய்க்கலாம். இதிலுள்ள மாலிக் அமிலத்தின் மூலமாக நமக்கு வெண்மையான பற்கள் கிடைக்கும். ஸ்ட்ராபெர்ரியை நன்றாக அரைத்து, கூழாக்கி சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாற்றை உங்களுடைய பற்களில் விட்டு, ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு கழுவி விடவும். ஸ்ட்ராபெர்ரியை பற்களில் தடவி கழுவிய பின்னர், நீங்கள் பயன்படுத்தும் பற்பசையை கொண்டு பல் துலக்கவும் செய்யுங்கள்.

ஆரஞ்சுப் பழ தோல்

ஆரஞ்சுப் பழ தோல்

நீங்கள் இரவில் உறங்கச் செல்லும் முன்னர், ஆரஞ்சுப் பழத்தின் தோலை உரித்து, பற்களில் தேய்த்து விடலாம்.

எலுமிச்சை

எலுமிச்சை

* எலுமிச்சை பழத்தோலை எடுத்து பற்களில் ½ அல்லது 1 நிமிடங்கள் மட்டும் தேய்க்கவும். பின்னர் தண்ணீர் கொண்டு கழுவி விடவும்.

* ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றையும், ஒரு தேக்கரண்டி தண்ணீரையும் எடுத்துக் கொண்டு, பற்களை தேய்த்து விடவும். அதன் பின்னர், உங்களுடைய பற்பசையைக் கொண்டு பல் விலக்கவும். எலுமிச்சை சாற்றை எப்பொழுதும் தண்ணீர் கலக்காமல் பயன்படுத்த வேண்டாம். அதிலுள்ள அதீதமான அமிலத்தன்மை உங்களுடைய பற்களின் எனாமலை பாதிக்கவும், கால்சியத்தை நீக்கி விடவும் செய்யும். ஒரு வாரத்திற்கு 2 முறைக்கு மேல் இதை பயன்படுத்தாமல் இருந்தால், எனாமலுக்கு பாதிப்பு வருவதை தவிர்த்திட முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Teeth Whitening Home Remedies

Using basil for oral care not only gives your yellow teeth the much needed sparkling but also protect them against many dental problems like pyorrhea or the bleeding of gums.
Story first published: Saturday, October 11, 2014, 16:31 [IST]
Desktop Bottom Promotion