For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளையான சருமத்தைப் பெற உதவும் உணவுகள்!!!

By Maha
|

சரும நிறத்தை அதிகரிக்கச் செய்ய நிறைய வழிகள் உள்ளன. அதில் பலர் பின்பற்றுவது கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி சருமத்தில் தடவுவது. ஆனால் அது தற்காலிகமானதாக இருக்கும். எப்படியெனில், சரும நிறத்தை அதிகரிக்கும் க்ரீம்களை சில நாட்கள் பயன்படுத்தாமல் இருந்தால், மீண்டும் சருமமானது பழைய நிலைக்கே திரும்பும்.

ஆனால் நிரந்தரமாகவும், அதே சமயம் இயற்கையாகவும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க வேண்டுமானால், அதற்கு உணவுகள் தான் முக்கிய பங்கினை வகிக்கிறது. பொதுவாக சருமம் பொலிவிழந்து மங்கி காணப்படுவதற்கு முக்கிய காரணம், உடலில் நச்சுக்கள் தங்கியிருப்பதால் தான். அதுமட்டுமின்றி, அதிக அளவில் மன அழுத்தத்திற்கு உட்பட்டாலும், அது உடலில் பல பிரச்சனைகளை உருவாக்கி, சருமத்தை பொலிவற்றதாக வெளிப்படுத்தும்.

இதுப்போன்று வேறு: ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க...

ஆகவே உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்து, நல்ல பொலிவான மற்றும் வெள்ளையான சருமத்தைப் பெற சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். இங்கு அப்படி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

சருமத்தின் நிறத்தை அதிகரிக்கச் செய்யும் உணவுகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரை சாப்பிட்டால், அது உடலில் இரும்புச்சத்தை மட்டும் அதிகரிப்பதில்லை. சருமத்தின் நிறத்தையும் தான் அதிகரிக்கும். ஏனெனில் இதில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க தேவையான வைட்டமின்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால், இதனை உணவில் வாரம் இரண்டு முறையாவது சேர்த்து வர வேண்டும்.

முட்டை

முட்டை

முட்டையின் மஞ்சள் கருவில் எண்ணற்ற அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் சல்பர், வைட்டமின் ஏ போன்ற சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் சத்துக்கள் உள்ளதால், முட்டையை தினமும் இரண்டு சாப்பிட்டு வந்தால், சருமத்தின் நிறமானது அதிகரிக்க ஆரம்பிக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை சருமத்தின் வெளியே உள்ள அழுக்குகளை நீக்க மட்டுமின்றி, உடலின் உட்பகுதியில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் தான் பயன்படுகிறது. எனவே தினமும் எலுமிச்சை ஜூஸ் குடித்து வர, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி சருமத்தின் பொலிவானது அதிகரிக்கும்.

சால்மன்

சால்மன்

சால்மன் மீன் சாப்பிட்டால், அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்புக்கள், சருமத்தின் நிறம் மற்றும் அழகை அதிகரித்து வெளிப்படுத்தும். அதிலும் இந்த மீனை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வர நல்ல பலன் கிடைக்கும்.

தயிர்

தயிர்

தயிரில் புரோபயோடிக்ஸ் அதிக அளவில் உள்ளது. இந்த புரோபயோடிக்ஸானது உடலில் சீரான அளவில் இருந்தால், அது சருமத்தில் கருமையான திட்டுக்கள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படுவதைத் தடுக்கும். எனவே தினமும் தயிரை உணவில் சேர்த்து வாருங்கள்.

க்ரான்பெர்ரி

க்ரான்பெர்ரி

க்ரான்பெர்ரியிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் அதிகம் உள்ளதால், இது சருமத்தின் பொலிவை அதிகரிக்கும். மேலும் இந்த பழமானது சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கும். ஆகவே முடிந்தால் இதனை வாரம் ஒரு முறை ஜூஸ் போட்டு குடித்து வாருங்கள்.

பாதாம்

பாதாம்

பாதாமில் மக்னீசியம் அதிக அளவில் இருப்பதால், இதனை அன்றாடம் சாப்பிட்டு வர, சருமத்தின் நிறம் அதிகரிப்பதை காணலாம். அதிலும் இதனை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொண்டால், சருமம் மட்டுமின்றி, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

அவகேடோ

அவகேடோ

சருமத்தின் நிறத்தை அதிகரிக்க நினைத்தால் அவகேடோவை சாப்பிடுங்கள். ஏனெனில் இதில் அமினோ ஆசிட், நியாசின் என்னும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை போன்றவை இருப்பதால், இதனை உட்கொள்ள சருமத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் வராமல், சருமம் பொலிவோடு இருக்கும்.

கேல்

கேல்

கேல் கீரையில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், பைட்டோ நியூட்ரியன்டுகள் மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவைஹயம் இருப்பதால், இதனை உணவில் சேர்த்து வர சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் மாறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

List Of Complexion Enhancing Foods

Nothing will be more interesting than eating your favourite foods and getting an additional benefit on your skin. Here we present a list of complexion enhancing foods that will act from within to improve your skin complexion dramatically.
 
Desktop Bottom Promotion