For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க உடம்பு ரொம்ப 'கப்' அடிக்குதா? அப்போ இதையெல்லாம் பின்பற்றுங்கள்!!

By Karthikeyan Manickam
|

எல்லோருக்கும் வியர்வை என்பது ஒரு பொதுவான விஷயம் தான். நம் உடல் வெப்பநிலையை சீராக இருக்க வைப்பதற்காகத் தான் வியர்வை சுரக்கிறது. இருந்தாலும், பல பேருக்கு அதிக அளவில் வியர்த்துக் கொட்டும். எவ்வளவு தான் குளிரடித்தாலும், உடம்பே நாறிப் போகும் அளவுக்கு அவர்களுக்கு வியர்வை வெளியேறிக் கொண்டே இருக்கும்.

சில ஹார்மோன் குறைபாடுகள், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், காரமான உணவுகள், உடற்பயிற்சிகள், மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் அதிக வியர்வை வரும். அளவுக்கு அதிகமாக வியர்க்கும் நிலைக்கு ஆங்கிலத்தில் ஹைப்பர்ஹிட்ரோசிஸ் என்று பெயர்.

நிறைய வியர்வை வெளியேறும் போது தான் பிரச்சனையே ஆரம்பிக்கும். அதிக வியர்வையால் உடம்பிலிருந்து படிப்படியாக மோசமான வாசனை வெளியேறத் தொடங்கும். சிலருக்கு பரம்பரை பரம்பரையாக இந்தப் பிரச்சனை தொடர்ந்து வரும். இப்பிரச்சனையைக் களைவதற்கான சில தீர்வுகள் இதோ...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இருமுறை குளியல்!

இருமுறை குளியல்!

தினமும் காலையிலும் மாலையிலும் குளிப்பது நல்லது. இதனால் உடம்பு சுத்தமாவது மட்டுமல்ல, அக்குள் பகுதிகளில் வியர்வையால் ஏற்படும் மோசமான நாற்றமும் தடுக்கப்படுகிறது.

பருத்தி உடைகள்!

பருத்தி உடைகள்!

சுத்தமான பருத்தி உடைகளை அணிவதன் மூலமும் வியர்வை நாற்றத்தை விரட்டியடிக்கலாம். கசகசவென்று இருக்கும் மற்ற உடைகளைத் தவிர்த்தால், அதிக வியர்வையையும் தவிர்க்கலாம்.

எலுமிச்சை!

எலுமிச்சை!

எலுமிச்சையைப் பாதியாக வெட்டி, அதை அக்குள் பகுதிகளில் அரக்கித் தேய்த்து, அதன் பிறகு குளிக்க வேண்டும். இதனால் எரிச்சல் ஏதாவது ஏற்பட்டால், எலுமிச்சையைத் தவிர்த்து விடுங்கள்.

வாசனைத் திரவியங்கள்!

வாசனைத் திரவியங்கள்!

வியர்வையைத் தவிர்ப்பதற்கு வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தலாம். பலவிதமான பெர்ம்யூங்கள் மற்றும் டியோடரண்ட்டுகள் தற்போது கடைகளில் கிடைக்கின்றன. சிலருக்கு இவை அலர்ஜியை ஏற்படுத்தி விடலாம். அவர்கள் இவற்றைத் தவிர்த்து விடுவது நல்லது.

எடை குறைதல் அவசியம்!

எடை குறைதல் அவசியம்!

உடம்பில் எடை அதிகம் இருந்தாலே அளவுக்கு அதிகமான வியர்வை வெளிவரும். எனவே உடல் எடையைக் குறைத்தால் ஓரளவு பலன் கிடைக்கும். மேலும், காரமான உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சேர்த்துக் கொள்வதும் அவசியம்.

வியக்க வைக்கும் வினிகர்!

வியக்க வைக்கும் வினிகர்!

தினமும் இரவு உறங்கப் போகும் முன், அக்குள் பகுதிகளில் வினிகரைத் தேய்த்துக் கொள்வது நல்லது. ஆப்பிள் சீடரைத் தேய்த்தும் அதிக வியர்வை சுரப்பைப் படிப்படியாகக் கட்டுப்படுத்தலாம்.

தகுந்த சிகிச்சை!

தகுந்த சிகிச்சை!

இந்த அனைத்து முறைகளும் பலனளிக்காமல் போனால், உங்கள் மருத்துவரைப் பார்த்து தேவையான அறிவுரைகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Get Rid Of Body Odour

Excessive sweating, also known as hyperhidrosis, may be hereditary. It could also be caused due to hormonal imbalance, high emotional excitement, spicy foods, exercise, or stress. Here are a few things you could follow to ease out the problem.
Desktop Bottom Promotion