For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகைக் கெடுக்குமாறு பற்களில் படியும் டீ கறைகளைப் போக்க சில டிப்ஸ்...

By Maha
|

உலகிலேயே அதிக அளவில் பருகப்படும் இரண்டு பானங்கள் தான் டீ மற்றும் காபி. இந்த இரண்டு பானங்களையும் அதிகம் விரும்பி சாப்பிடும் மக்கள், இதனை நினைத்து கவலைப்படும் ஒரு விஷயம் தான், இதனால் பற்களில் மஞ்சள் கறைகள் ஏற்படும் என்பது தான். மேலும் இந்த கறைகளை எப்படி போக்குவது என்றும் பலர் தெரியாமல் திணறுகின்றனர்.

இதன் காரணமாக பலர் டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கத்தையே கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்த ஆரம்பிக்கின்றனர். ஏனெனில் இப்படி தொடர்ச்சியாக இவற்றைக் குடிப்பதால் பற்களில் உண்டாகும் கறைகள், ஒரு கட்டத்தில் பற்களில் இருந்து போகாமல் நிரந்தரமாக தங்கிவிடுகின்றன.

இதுப்போன்று வேறு சில: க்யூட்டான சிரிப்பு வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

அதுமட்டுமல்லாமல், டீயில் உள்ள டானிக் ஆசிட் பற்களில் துளைகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. மேலும் டீயில் தான் காபியை விட அதிக அளவில் டானிக் ஆசிட்டானது உள்ளது. டீ மற்றும் காபியை அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது தான், இருப்பினும் டீ மற்றும் காபியில் சிறிது நன்மைகள் நிறைந்திருப்பதால், இவற்றை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது குடிப்பது நல்லது.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை டீ மற்றும் காபியினால் ஏற்படும் கறைகளைப் போக்க ஒருசில எளிய வழிகளை பரிந்துரைத்துள்ளது. அதைப் படித்து அவற்றை பின்பற்றினால், நிச்சயம் பற்களில் படிந்துள்ள டீ மற்றும் காபி கறைகளைப் போக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டூத் பேஸ்ட்

டூத் பேஸ்ட்

பற்களில் டீ கறைகள் நிரந்தரமாக படியாமல் இருக்க, டீ அல்லது காபி குடித்த பின்னர், பற்களை வெண்மையாக்க உதவும் டூத் பேஸ்ட்களைக் கொண்டு பற்களை துலக்க வேண்டும். இதனால் பற்களில் கறைகளை படிவதைத் தடுக்கலாம்.

எலுமிச்சை மற்றும் உப்பு

எலுமிச்சை மற்றும் உப்பு

எலுமிச்சை மற்றும் உப்பு கொண்டு பற்களை தேய்த்தாலும், பற்களில் படிந்துள்ள டீ மற்றும் காபி கறைகளைப் போக்கலாம். குறிப்பாக, எவ்வளவு உப்பு சேர்க்கிறோமோ, அந்த அளவில் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவும் ஒரு அற்புதமான பொருள். அதற்கு ஈரமான பிரஷ்ஷை பேக்கிங் சோடாவில் தொட்டு பற்களை துலக்க வேண்டும். இல்லாவிட்டால், பேஸ்ட்டில் சிறிது பேக்கிங் சோடாவை தூவி பற்களை துலக்க வேண்டும். குறிப்பாக அப்படி தேய்க்கும் போது, பற்களின் மூலைமுடுக்குகளில் எல்லாம் பேக்கிங் சோடா செல்லுமாறு துலக்க வேண்டும்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

ஹைட்ரஜன் பெராக்ஸைடுடன் உப்பு சேர்த்து பற்களை துலக்கினாலும், பற்களில் உள்ள கறைகள் நீங்கும். அதிலும் 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 2 துளிகள் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து பற்களை தேய்க்க வேண்டும்.

வாழைப்பழ தோல்

வாழைப்பழ தோல்

இன்னும் இயற்கையான முறை வேண்டுமானால், வாழைப்பழத்தின் உட்புற தோலைக் கொண்டு பற்களை தேய்த்தாலும், பற்களில் படிந்துள்ள டீ கறைகள் மறையும்.

சூயிங் கம்

சூயிங் கம்

சூயிங் கம் கூட ஒரு சூப்பரான பற்களில் தங்கியுள்ள கறைகளைப் போக்கும் பொருள். ஆகவே டீ அல்லது காபி குடித்த பின்னர் சூயிங் கம்மை வாயில் போட்டு மென்று வந்தால், பற்களில் டீ கறைகள் நிரந்தரமாக தங்குவதைத் தடுக்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

பற்களில் உள்ள டீ கறையைப் போக்க ஸ்ட்ராபெர்ரி கூட உதவும். எனவே வீட்டில் ஸ்ட்ராபெர்ரி இருந்தால், அதனைக் கொண்டு பற்களை தேய்த்து வாருங்கள்.

ப்ளாஸ்

ப்ளாஸ்

ப்ளாஸ் என்னும் நைலான் கயிற்றை ஒவ்வொரு பற்களின் இடுக்கிலும் விட்டு தேய்க்கலாம். இதனால் பற்களில் இடுக்குகளில் தங்கியுள்ள கறைகளைப் போக்கலாம்.

குறிப்பு

குறிப்பு

எத்தனை குறிப்புகள் இருந்தாலும், முக்கியமாக டீ அல்லது காபி குடித்தப் பின்னர் நீரால் வாயைக் கொப்பளித்தால், பற்களில் கறை தங்குவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Remove Tea Stains from Teeth

How to remove tea and coffee stains from teeth is a must-know for all tea or coffee drinkers. Know how to remove brown tea stains from teeth with these simple tips.
Story first published: Thursday, January 23, 2014, 14:49 [IST]
Desktop Bottom Promotion