For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

30 வயதானாலும் இளமையாக காட்சியளிக்க வேண்டுமா?

By Maha
|

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒரு வருத்தம் என்னவென்றால் முதுமைத் தோற்றத்தைத் தரும் சரும சுருக்கம் ஏற்படுவது பற்றி தான். பொதுவாக இளமையானது, உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால், இளமைத் தோற்றமானது நன்கு தெரியும்.

நமது தாத்தா, பாட்டி போன்றோரைப் பார்த்தால், அவர்களுக்கு இப்போது தான் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டிருக்கும். இதற்கு காரணம் அவர்கள் உட்கொண்ட உணவுகள் மற்றும் தங்கள் அழகைப் பராமரிக்கப் பயன்படுத்திய பொருட்களும் தான் காரணம். ஆகவே இளம் வயதிலிருந்தே நல்ல ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.

இதுப்போன்று வேறு: முகம் ரொம்ப அடி வாங்குன மாதிரி இருக்கா? இத ட்ரை பண்ணுங்க...

இங்கு 30 வயதானாலும் இளமையுடன் காட்சியளிக்க வேண்டுமானால், கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றை தவறாமல் பின்பற்றி வாருங்கள். இதனால் நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃபுரூட் டயட்

ஃபுரூட் டயட்

உண்ணும் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொண்டு வந்தால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு இருக்கும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டீன் உள்ள உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். உதாரணமாக, தக்காளி, கேரட் போன்றவற்றை தினமும் உட்கொண்டு வருவது நல்ல பலனைத் தரும்.

உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சிகள்

தற்போது ஓடியாடி வேலை செய்வோரை விட, உட்கார்ந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளதால், உடலில் சேரும் கொழுப்புக்களானது கரையாமல் அப்படியே தங்கி, உடல் பருமனை அதிகரித்து, தோற்றத்தையே அசிங்கமாக வெளிப்படுத்தும். எனவே இன்றைய கால தலைமுறையினர் எலும்புகள் மற்றும் தசைகளை வலுவாக்கும் உடற்பயிற்சிகள் அன்றாடம் செய்து வர வேண்டும்.

சரும பராமரிப்பு

சரும பராமரிப்பு

முதுமைத் தோற்றத்தை வெளிப்படுத்துவது சருமம் தான். ஆகவே அத்தகைய சருமத்திற்கு முறையான பராமரிப்புக்களை கொடுக்க வேண்டும். அதிலும் தினமும் சருமத்தை பால் அல்லது ரோஸ் வாட்டர் கொண்டு சுத்தம் செய்வதுடன், வாரத்திற்கு ஒருமுறை ஃபேஸ் பேக் போட்டு, வெளியே வெயிலில் செல்லும் போது சன் ஸ்க்ரீன் தடவி செல்ல வேண்டும். இவ்வாறெல்லாம் செய்து வந்தால், சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

காபிக்கு 'பை' சொல்லுங்கள்

காபிக்கு 'பை' சொல்லுங்கள்

அனைவருமே உடலின் சக்தியை அதிகரிக்க காபியை பருகுவார்கள். ஆனால் காபியில் உள்ள காப்ஃபைனானது இளமையைத் தடுக்கும். எனவே இளமையை தக்க வைக்க விரும்புபவர்கள், காபியை பருகுவதற்கு பதிலாக க்ரீன் டீயை குடிக்கலாம்.

கூந்தல் பராமரிப்பு

கூந்தல் பராமரிப்பு

வயதாக ஆக கூந்தலின் பொலிவும், அடத்தியும் குறைய ஆரம்பிக்கும். ஆனால் அத்தகைய கூந்தலை சரியான பராமரிப்புக்களின் மூலம் பொலிவுடனும், அடர்த்தியாகவும் வைத்துக் கொள்ளலாம். அதற்கு தினமும் ஸ்கால்ப்பிற்கு எண்ணெய் தடவி வருவதுடன், வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்து குளித்து வர வேண்டும்.

போதிய தண்ணீர் குடிக்கவும்

போதிய தண்ணீர் குடிக்கவும்

தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்து வருவதன் மூலம், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடுவதுடன், சருமத்திற்கு வேண்டிய நீர்ச்சத்தானது கிடைத்து, சருமம் இளமையுடன் காணப்படும்.

புகைப்பிடிப்பது மற்றம் மது அருந்துவதை தவிர்க்கவும்

புகைப்பிடிப்பது மற்றம் மது அருந்துவதை தவிர்க்கவும்

இந்த இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், இளமைக்கு தடையை ஏற்படுத்தும். ஆகவே இவை இரண்டையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இப்படி தவிர்த்தால், நிச்சயம் நீண்ட நாட்கள் இளமையுடன் காணப்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Look Young After 30

Youth is also a state of mind. You can stay upbeat with the passions of the young even if you are more than a century old. Here is how to look younger after 30 naturally. Take a look at these natural ways to look young after 30.
Story first published: Monday, April 7, 2014, 10:23 [IST]
Desktop Bottom Promotion