For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாக்கில் படியும் மஞ்சள் நிற அழுக்கைப் போக்க சில டிப்ஸ்...

By Maha
|

நாக்கின் மேற்புறத்தில் வெள்ளையாக ஒரு படலம் சூழ்ந்திருக்கும். இது ஆரோக்கியமற்ற வாய் பராமரிப்பைக் குறிக்கும். இத்தகைய வெள்ளைப்படலத்தால் எந்த ஒரு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனையையும் சந்திக்கப் போவதில்லை என்றாலும், இந்த வெள்ளைப்படலம் கடுமையான வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!!

பொதுவாக நாக்கில் பாக்டீரியாக்கள் மற்றும் இறந்த செல்கள் போன்றவை தங்கியிருப்பதால் தான், நாக்கின் மேலே வெள்ளையான படலம் காணப்படுகிறது. மேலும் இந்த வெள்ளைப்படலமானது மருந்து மாத்திரைகள் எடுக்கும் போது, மது அருந்தும் போது, புகைப்பிடிக்கும் போது, உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும் போது அதிக அளவில் ஏற்படும்.

ஈறுகளில் இருந்து இரத்தம் கசிகிறதா? இத டெய்லி ஃபாலோ பண்ணுங்க...

ஆகவே நாக்கில் உள்ள வெள்ளைப்படலத்தைப் போக்கவும், வாயில் இருந்து துர்நாற்றம் வருவதை தவிர்க்கவும் வேண்டுமானால், பற்களை தினந்தோறும் இரண்டு முறை துலக்குவதுடன், நாக்குகளையும் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். இப்போது நாக்கில் வெள்ளைப்படலம் ஏற்படாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போதிய தண்ணீர்

போதிய தண்ணீர்

தினமும் உடலுக்கு போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், நாக்கில் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் தங்கிவிடும். அதுமட்டுமின்றி, தண்ணீரை குறைவாக குடித்தால், உணவுத்துகள்கள் நாக்கில் உள்ள வெடிப்புக்களில் தங்கிவிடும். ஆகவே நாக்கை சுத்தமாக வைத்துக் கொள்ள தினமும் தண்ணீரை அதிக அளவில் குடித்து வரை வேண்டும்.

கொப்பளிக்கவும்

கொப்பளிக்கவும்

தினமும் மூன்று முறை வெதுவெதுப்பான நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும். இதனால் நாக்கில் நச்சுக்கள் தங்குவதைத் தவிர்க்கலாம். அதிலும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அந்த நீரை வாயில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும். இந்த மாதிரி தினமும் காலை மற்றும் இரவில் படுக்கும் முன் செய்து வருவது மிகவும் நல்லது.

சர்க்கரைப் பொருட்களை தவிர்க்கவும்

சர்க்கரைப் பொருட்களை தவிர்க்கவும்

சர்க்கரை கலந்த பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் மிகவும் ஆபத்தான பாக்டீரியாக்கள் இருப்பதால், அவை நாக்கில் வெள்ளைப்படலத்தின் அளவை அதிகரித்துவிடும். எனவே நாக்கை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமெனில், சர்க்கரை உள்ள பொருட்கள் அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

நாக்கை சுத்தப்படுத்தவும்

நாக்கை சுத்தப்படுத்தவும்

தினமும் பற்களை துலக்கும் போது, நாக்கை சுத்தம் செய்யும் பொருள் கொண்டோ அல்லது டூத்பிரஷ் கொண்டோ சுத்தம் செய்ய வேண்டும். அதிலும் பற்களை துலக்கிய பின், சிறிது உப்பை நாக்கில் தூவி மென்மையான பிரஷ் கொண்டு தேய்த்தால், நாக்கில் தங்கியுள்ள பாக்டீரியாக்களை நீக்கிவிடலாம். முக்கியமாக நாக்கை தேய்க்கும் போது, கடுமையான முறையில் தேய்க்க வேண்டாம். இல்லாவிட்டால், நாக்கில் கொப்புளங்கள் வருவதோடு, இரத்தக்கசிவையும் ஏற்படுத்திவிடும். எனவே மென்மையாக கையாள வேண்டும்.

மஞ்சள்

மஞ்சள்

நாக்கை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, தினமும் ஒரு டம்ளர் தண்ணீரில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் நாக்கில் வெள்ளைப்படலம் வருவதைத் தடுக்கலாம். அதுமட்டுமின்றி, தினமும் நாக்கில் தேனை தடவி வருவதும் நல்லது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

நாக்கில் உள்ள வெள்ளைப்படலத்தை நீக்கிய பின், தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டால், நாக்கில் உள்ள புண்களை விரைவில் குணமாக்கலாம்.

தயிர்

தயிர்

நாக்கில் வெள்ளைப்படலத்தை தடுக்க வேண்டுமானால், கான்டிடா என்னும் பூஞ்சையின் வளர்ச்சியை தடுக்க வேண்டும். இத்தகைய பூஞ்சையின் வளர்ச்சியை தடுக்கும் குணம் தயிருக்கு உள்ளதால், தினமும் இரவில் படுக்கும் முன், நாக்கை சுத்தம் செய்த பின் தயிரை நாக்கில் தடவிக் கொண்டால், நாக்கில் பாக்டீரியாவின் தாக்கம் இல்லாதவாறு பாதுகாக்கலாம்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies for White Tongue

White tongue is a sign of bad oral hygiene, and though the condition is not a serious health issue, you should get rid of it soon enough. So to help you out with the problem, we have presented some home remedies for it.
Desktop Bottom Promotion