For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகுக்கு அழகு சேர்க்கும் சில ஏடாகூட அழகுக் குறிப்புகள்!!!

By Karthikeyan Manickam
|

நம் அழகை மேலும் அழகுப்படுத்த நாம் எத்தனையோ வழிகளைக் கடைப்பிடித்து தான் வருகிறோம். அவற்றில் சில குண்டக்க மண்டக்க அழகுக் குறிப்புகளும் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா? நம் சருமத்தில் வெயிலால் ஏற்படும் கட்டிகளுக்கு சிறுநீர் சிறந்ததாம்! அதே போல், டயப்பர் அரிப்புகளை சரிசெய்ய உதவும் க்ரீமை மாய்ஸ்சுரைசராகப் பயன்படுத்தலாமாம்!!

எங்கள் வீட்டில் வைத்திருக்கும் வாழைப்பழம் சில சமயம் அழுகிப் போய், சாப்பிடவே முடியாத அளவுக்கு நாறிப் போய்விடும். அதை அப்படியே தூக்கி எறிய என் மனைவிக்கு மனம் வராது. தன் முகத்திலோ அல்லது என் முகத்திலோ தடவி விடுவாள். கேட்டால், அது முகப் பொலிவுக்கு ரொம்பவும் நல்லது என்பாள். தயிர் ரொம்பவும் புளித்துப் போனாலும், தேங்காய் அழுகிப் போனாலும் கூட இதே கதை தான்!

இதேப் போன்ற சில ஏடாகூட அழகுக் குறிப்புக்களைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். இவை வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்களுக்குப் பலனளிக்கும் என்று நம்புகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆன்டாசிட்

ஆன்டாசிட்

அசிடிட்டிக்காகச் சாப்பிடக் கூடிய இந்த ஆன்டாசிட் திரவத்தில் 2 ஸ்பூன் எடுத்து, முகம் முழுக்க மாஸ்க் செய்து, 15 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். பின்னர் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். இதனால் வயிற்றில் செய்வது போலவே, முகத்தில் உள்ள தேவையில்லாத எண்ணெயையும், அமிலங்களையும் அகற்றி விடும்.

மாயோனைஸ்

மாயோனைஸ்

முட்டை-பாலேடு-புளி கலந்த இந்த மாயோனைஸை உங்கள் தலைமுடிகளில் நன்றாகத் தேய்த்து, ஸ்டீமரில் சிறிது காட்டிவிட்டு 10 நிமிடங்கள் கழித்து, தலைமுடியைக் கழுவலாம்.

டயப்பர் க்ரீம்

டயப்பர் க்ரீம்

இதில் நல்ல ஈரப்பதமும் எரிச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மையும் உள்ளது. சொரசொரப்பான முழங்கை மற்றும் வெடித்த பாதங்களில் இந்த க்ரீமைத் தடவினால் அவை மிருதுவாகும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை இரு மெல்லிய துண்டுகளாக வெட்டி, மல்லாந்து படுத்துக் கொண்டு அவற்றை இரு கண்களையும் மூடி, அதன் மேல் 15 நிமிடங்கள் வரை வைத்திருந்தால், கண்கள் புத்துணர்ச்சி பெறும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சைச் சாற்றில் ப்ளீச்சிங் ஏஜெண்ட்டுகள் உள்ளன. எனவே அதை உங்கள் கூந்தலில் தடவி வெயிலில் உலர வைத்தால், கூந்தல் மிகவும் மிருதுவாகும்.

வினிகர்

வினிகர்

அதே போல், வினிகரை முடிகளில் தடவினாலும், அது நல்ல பளபளப்பைத் தரும்.

டூத் பேஸ்ட்

டூத் பேஸ்ட்

தூங்கச் செல்லும் முன் முகத்தில் உள்ள பருக்களில் டூத் பேஸ்ட் (ஜெல் இல்லாதது) தடவி, காலையில் எழுந்து பார்த்தால் பருக்கள் காணாமல் போகுமாம். குறிப்பாக, முகம் முழுக்க பருக்கள் இருந்தால் இது பலனளிக்காது.

ஆன்டி-செல்லுலைட் க்ரீம்

ஆன்டி-செல்லுலைட் க்ரீம்

இந்த க்ரீமை உங்கள் கன்னத்தில் தடவி வந்தால், அது நல்ல இறுக்கம் கொடுக்கும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

உங்கள் தலைமுடியின் அனைத்துப் பகுதிகளிலும் ஆலிவ் எண்ணெய் கொண்டு தேய்த்தால், அது பட்டுப் போல பளபளக்கும்.

காபி

காபி

காபி கொட்டையை உடைத்துத் தூளாக்கி, ஆலிவ் எண்ணெயுடன் கலந்து செல்லுலைட்டால் பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் தேய்த்து, 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். பல முறை செய்தால் பலன் கொடுக்கும்.

ப்ளாக் டீ பாத்

ப்ளாக் டீ பாத்

ஸ்ட்ராங்கான ப்ளாக் டீயில் காயங்களை ஆற்றும் திறன் உள்ளது. எனவே, ப்ளாக் டீக்குளியல் எடுத்துக் கொண்டால் வெயிலால் ஏற்படும் புண்கள் விரைவில் ஆறுமாம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Handy Beauty Tricks

There are many weird beauty tips and tricks doing the rounds sometimes do work. Here are some of the handy beauty tricks. Take a look...
Story first published: Saturday, June 28, 2014, 19:19 [IST]
Desktop Bottom Promotion